இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்றுவிழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் 01.05.13 அன்று மே தினக் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் மே தினக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார், அலுவலகச் செயலாளர் எஸ்.ரமணி, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ், வெள்ளைச்சாமி, தி.நகர் பகுதிக்குழு செயலாளர் எஸ்.ரங்கசாமி, தி.நகர் பகுதிக்குழு உறுப்பினர் ஏ.வீரராகவன், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத் தோழர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ சங்கத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply