இந்திய – சீன எல்லைத் தகராறு செய்ய வேண்டியது என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த நான்கு பரிந்துரைகள்

இந்திய – சீன எல்லைத் தகராறு தொடர்பாக பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கலந்து கொண்டார்.


அப்போது அவர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கு முன்வைத்த பரிந்துரைகள் வருமாறு:

1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய-சீன எல்லைக்கோட்டுப்பகுதியில், லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில், சமீபத்தில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த நம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. நம்முடைய அயல் துறை அமைச்சருக்கும், சீன அயல்துறை அமைச்சருக்கும் இடையே

நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக, நம் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“விவாதத்தின் முடிவில், ஒட்டுமொத்த நிலைமைகள் பொறுப்புணர்வுடன் கையாளப்படும் என்றும்,

இரு தரப்பினரும் ஜூன் 6 அன்று ஒப்புக்கொண்டுள்ள ஒத்துப்பின்வாங்கும் புரிந்துணர்வு உண்மையுடன் அமல்படுத்தப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பிரச்ச்னைகளைப் பெரிதாக்கிட, எந்தத்தரப்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மாறாக, இருதரப்பினரும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அமைதி திரும்புவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

3. மத்திய அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த அணுகுமுறைக்கு தன் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

4. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம், எல்லைப் பாதுகாப்புக் கோடு குறித்த தெளிவான வரையறையை உருவாக்கிடவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டிடவும், உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...