இயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளிகளில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன், வசனங்களின் வழியே கதை சொல்லும் பாணியை மாற்றி காட்சிகளின் வழியே கதை சொல்லும் பாணியை உருவாக்கியவர். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட அவருடைய திரைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாகும். தமிழ்ச் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் அவர்.

இயக்குநர் மகேந்திரன் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு ஆதர்ஷமாக அமைந்தவர். அவரது மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...