இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் சிபிஐ(எம்) இரங்கல்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (75) நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. வேளாண் பட்டதாரியான அவர் வேளாண்மைத்துறையில் உதவி அதிகாரியாகப் பணியாற்றி 1970 இல் வேலையை ராஜினாமா செய்து விட்டு,  இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடன் இறங்கினார். தனது சொந்த ஊரில் வேளாண் பண்ணை அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து, இயற்கை விவசாயத்திறகு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். மேலும் பன்னாட்டு வேளாண் கம்பெனிகள் இந்திய விவசாயத்தில் ஊடுருவுவதை கடுமையாக எதிர்த்து வந்தார்.

கடந்த 43 ஆண்டுகளாக இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும், செயற்கை உரங்களைப் பயன்படுததக் கூடாது என்று தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விவசாயிகளிடமும், பொது மக்களிடமும் பிரச்சாரம் செய்து வந்தார்.

அவருடைய நிலைபாட்டில், மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். விவசாயிகளின் நலனில் அவருக்கு இருந்த அக்கறையும், இயற்கை விவசாயத்தில் இருந்த அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வும்  பாராட்டத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 

Check Also

தென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்!

சிபிசிஐடி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! தென்காசி, வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர்  27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி ...

Leave a Reply