இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லையே என இலங்கைத் தமிழர்கள் வேதனையில் உள்ள நேரத்தில், இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா மீண்டும் முள்ளிவாய்க்கால் உருவாகும் என்ற தொனியில் பேசியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சூழலில் இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply