ஊரடங்கை பயன்படுத்தி சம்பள வெட்டு, பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்கள்!

நாடு தழுவிய ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு ஊடக முதலாளிகள் தன்னிச்சையாக ஆட்குறைப்பு செய்கின்றன. சம்பள குறைப்பை திணிக்கின்றன. “கொரோனா வைரஸ் பரவல் ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியை ஊடக நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது” என்று நேஷனல் அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட் (என்ஏஜே) மற்றும் டெல்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (டியுஜே) என்ற இரண்டு ஊடகவியலருக்கான சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஊரடங்கை நிறுவன மூடலாக மாற்றும் ஊடக நிறுவனங்கள்ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நீக்கம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடக நிறுவன உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை காரணம் காட்டி இதேபோன்று ஆட்குறைப்பு என்ற பெயரால் ஏராளமானோரை வேலைநீக்கம் செய்தனர். தற்போது ஊடக நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி நிறுவன மூடலாக மாற்றப் போவதாக பயமுறுத்துகின்றன.

குறிப்பாக, இந்தியாவின் மிகச் செழிப்பான ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் பெருமளவில் ஊழியர்களை வேலையை விட்டு துரத்தியிருக்கிறது. அந்நிறுவனத்தன் செல்வ செழிப்பிற்கு இந்த தொழிலாளிகளை வேலையில் வைத்திருப்பதால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள், அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தோடு ஒப்பிட்டால் ஊழியருக்கான தொகை என்பது மிகமிக குறைவாகும். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் லாபம் சேகரிப்பதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கூட கேள்வி கேட்பாரின்றி வெளியேற்றி இருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தான் வெளியிட்டு வரும் ஞாயிறு சிறப்பு இணைப்பு இதழை (சன்டே மேகசின்) மூடிவிட்டது. அதில் பணிபுரிந்த நோனாவாலியா தமது முகநூல் பக்கத்தில், “ எனது மேலதிகாரி பூனம்சிங் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், சன்டே மேகசின் பிரிவில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேலையை விட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 24 வருடங்களாக நான் நேசித்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

10 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை வெட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரசின் சிஇஏ ஜார்ஜ் வர்கீஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்கு விட்டுள்ளார். அதில் “நமது விளம்பர வருமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கிடைக்கும் எல்லா தரவுகளும் மிக மோசமான நாட்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. ஊழியர்கள் 10 – 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களும், ஆசிரியர்களும் சம்பளம் இல்லாமலேயே வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.பல மாநிலங்களில், நாளிதழ்கள் தங்களது பல பதிப்புகளை மூடியுள்ளன. “நாளிதழ்கள் தினசரி வருவாய் இழப்பை சந்திப்பதாக” இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி கூறியிருக்கிறது. இதிலிருந்து மீள காகித்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

2 வருடங்களுக்கு வரி விடுமுறை வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயர்ந்த வேண்டும். அச்சு ஊடகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோருகிறார்கள். இதைபற்றியெல்லாம் பேசுகிறவர்கள் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே கிடையாது.சம்பளம் இல்லாத விடுமுறையை திணிக்கும் தி குவிண்ட்இணைய இதழ் தி குவிண்ட் அதனுடைய ஊழியர்களில் 50 சதவீதம் பேரை சம்பளம் இல்லாத விடுப்பில் விரட்டி இருகிறது. மற்றவர்களுக்கு சம்பள குறைப்பை செய்திருக்கிறது.காட்சி ஊடகத்திலும் கொடுமைநாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடக ஊழியர்கள் தங்களது வாழ்க்கையை பணையம் வைத்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், ஊரடங்கின் தாக்கம் குறித்தும் செய்தி சேகரிக்கிறார்கள்.

மும்பையிலுள்ள டைம்ஸ் டிவி ஸ்டுடியோவில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னணி ஊழியர்களாக களத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கம் தர வேண்டும். மாறாக, உடனடி சம்பள வெட்டும், வேலையிலிருந்து விரட்டுவதும் ஊடகத்துறையினரின் ஊக்கத்தை பாதிக்கிறது.குறிப்பாக, நியுஸ் நேஷன் நெட்வொர்க் தனது ஆங்கில டிஜிட்டல் பிரிவில் உள்ள 15 பேரையும் எந்த முன்அறிவிப்பின்றி அல்லது அறிவிப்பு காலத்தில் (நோட்டீஸ் பீரியட்) வேலை செய்யவும் அனுமதிக்காமல் விரட்டி உள்ளது. இணைய இதழான நியூஸ் லேண்ட்ரியின் நிர்வாக ஆசிரியர் மனோஜ் கெய்ரோலா, ஒரு ஊழியரிடம் “நோய் பேரிடரால் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, இதை செய்ய வேண்டியதிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.பிரதமரின் வேண்டுகோளை புறக்கணித்த பெரும் ஊடக நிறுவனங்கள்பிரதமர் நரேந்திமோடி நாட்டு மக்களுக்கு பலமுறை உரையாற்றி இருக்கிறார். அப்போதெல்லாம் நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், பெரும் ஊடக நிறுவனங்கள் யாரும் பிரதமரின் வேண்டுகோளை புறக்கணித்துள்ளன.பீரிகான் மும்பை ஊடகவியலாளர் சங்கத்தின் அறிக்கைஇந்த நெருக்கடியான காலத்தில் ஊடக நிறுவனங்கள் சம்பள வெட்டு, ஆட்குறைப்பு, கட்டாய விடுப்பு கொடுப்பது சட்டவிரோதம். விழிமியங்களுக்கு எதிரானது. நம்ப முடியாத அளவிற்கு மனிதாபிமானமற்றது என்று பீரிகான் மும்பை ஊடகவியலாளர் சங்க குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கின்போது ராமநவமி கொண்டாட்டத்தல் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கலந்து கொண்டதை விமர்சித்தற்காக தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது அம்மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. அதேசமயம் மிகவும் விஷமத்தனமாகவும், வன்முறையை துண்டும் வகையிலும் பேசும் பத்திரிகையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாகல்டைம்ஸ் என்கிற மராத்தி பத்திரிகை அதில் பணிபுரியும் 15 ஊழியர்களையும் மார்ச் 31ந் தேதி அன்று ராஜினாமா செய்யும்படி கூறிவிட்டது. தி குவிண்ட் இணையதளம் குறைந்தது 45 ஊழியர்களை சம்பளம் இன்றி விடுமுறையில் செல்ல பணித்திருக்கிறது. இது தொழில்தவா சட்டம் 1947ன்படி சட்டவிரோதமானது.ஹமாராமகா நகர் என்ற மும்பையிலிருந்து வரும் இந்தி நாளிதழ் மார்ச் 18ந் தேதியன்ற வியாபாரம் சாத்தியமில்லை என்று மூடிவிட்டது.

அவுட்லுக் இதழும், நைதுணியாவும் தங்களது பதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.மத்திய தொழிலாளர் துறை தொழில்நடத்துவோருக்கு மார்ச் 23ந் தேதியன்று ஒரு அறிவுரையை அனுப்பியுள்ளது. தொழிலாளர்களுக்கு குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களை, ஒப்பந்த தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யக்கூடாது, சம்பளத்தைகுறைக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசும் இதேபோன்ற அறிவுரையை வழங்கியுள்ளது.இந்த அறிவுரைகள் ஒருபுறம் இருந்தாலும், சட்டப்படியே கூட உரிய நடவடிக்கைகள், வழிமுறைகள் இன்றி ஆட்குறைப்பு, வேலைநீக்கம். தற்காலிக நீக்கம் செய்ய முடியாது. பதிப்புகளையும் மூட முடியாது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை ஊடக நிறுவனங்கள் தங்களால் பாதிக்கப்படுவோர் வேலை தேட முடியாது என்பது மட்டுமல்ல வேறு இடத்திற்கு கூட போக முடியாது என்கிற நிலையை அறிவித்திருக்கின்றன.கடந்த சில வருடங்களாக ஏராளமான ஊடக தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு மிக சொற்பமான அல்லது இழப்பீடு எதுவும் இல்லாமலேயே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பணம் கொழுத்த ஊடக நிறுனங்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் படைத்த ஊடக நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணைகளை எல்லாம் மீறியே இவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன.

வேலையில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்கிற எச்சரிக்கை கத்தியாக தலைமேல் தொங்கிக் கொண்டே இருக்கிறது.இந்தச் சூழ்நிலையில் அந்த யூனியன்,

1. ஆகஸ்ட் 15க்கு பிந்தைய வேலைநீக்கம் மற்றும் நிறுவன மூடல் அறிவிப்புகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும்.

2. ஊடக தொழிலாளர்கள் குறிப்பாக, களத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை வசதிகள், தேவைப்பட்டால் தனித்திருத்தல் ஆகியவை அனுமதிக்கப்பட வேண்டும்.

3. தன்னிச்சையாக ஊதிய வெட்டையோ, சம்பளத்தை தள்ளிப்போடுவதையோ அனுமதிக்க கூடாது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ஊடக ஊழியர்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

4. மத்திய அரசு யாருக்கும் வேலைநீக்கம், சம்பள பிடித்தம், சம்பள குறைப்பு, சம்பளத்தை தள்ளிப்போடுவது இருக்கக்கூடாது என்கிற அறிவுரையை கட்டுப்படுத்தும் ஆணையாக வெளியிட வேண்டும்.5. தி வயர் ஆசிரியர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்- என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.

தமிழில் க.கனகராஜ்

ஆங்கிலத்தில் படிக்க : https://bit.ly/3agg9JR

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...