ஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பா.ஜ.க.-வின் 40வது நிறுவன தினத்தன்று, அக்கட்சியின் மத்திய அலுவலகத்திலிருந்து கட்சி தொண்டர்களுக்கு உரையாற்றுகையில், பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மீறுமாறு பா.ஜ.க. ஊழியர்களுக்கு வெளிப்படையான அறைக்கூவலை விடுத்துள்ளார். முதலில், புதிதாக உருவாக்கபட்டுள்ள வைப்பு நிதிக்கு ஒவ்வொரு ஊழியரையும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு அவர் ஊக்குவித்ததோடு, ஒவ்வொருவரையும் மேலும் 40 பேரிடமிருந்து நண்கொடை சேகரிக்குமாறு ஊக்குவித்தார்.

மேலும், ஒவ்வொரு தேர்தல் சாவடி நிலையிலும், முக்கிய சேவை மற்றும் சுகாதாரத்திற்காக உழைக்கும் 40 பேரை பா.ஜ.க. ஊழியர்கள் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறுமாறு அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொருவருக்கும் உணவு, இருப்பிடம் மற்றும் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டிய அரசின் கடமையை தட்டிக்கழித்துவிட்டு, இப்பொழுது ஊரடங்கை மீறி பா.ஜ.க. ஊழியர்களை நிவாரணப் பொருட்கள் வழங்குமாறு ஊக்குவித்துள்ளார்.

இவ்வாறு பிரதமர் அவரே அறிவித்த 21-நாள் ஊரடங்கை வெளிப்படையாக மீற அவரே அறைக்கூவல் விடுத்துள்ளதோடு, வேலும் அவ்வாறு மீறுமாறு ஆளுங்கட்சியை ஊக்குவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான இந்நாட்டு மக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த அறைக்கூவலை அவர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...