ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்திட அருண்ஜெட்லிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள், “50 கிராமிற்கு கீழ் உள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி” மாண்புமிகு. மத்திய நிதித்துறை அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.


01.12.2017

50 கிராம் மற்றும் அதற்கு குறைவான ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரி

தமிழ்நாட்டில் 50 கிராம் மற்றும் அதற்கும் குறைவான அளவில் ஊறுகாய் பொட்டலங்கள், ஏழைகளுக்காகவும், தேவையானவர்களுக்காகவும் விறக்கப்பட்டு வருகின்றன. தேவையானவர்கள் அதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த ஊறுகாய் உற்பத்தி தொழிலில் 400க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் 10000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் மிக வறிய நிலையில் உள்ள படிக்காத தொழிலாளிகள் இந்த ஊறுகாய் உற்பத்தி கைத் தொழிலாகவே செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான இந்த குறு நிறுவனங்களில் குடும்ப உறுப்பினர்களே இந்த உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊறுகாய் உற்பத்தி என்பது அதை உற்பத்தி செய்பவர்களன் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமப்புற பகுதிகளில் சிறிய இடங்களிலோ நடைபெற்று வருகிறது.

ஊறுகாய் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் பிரதானமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் என்ற வகையில் உள்ளது. இதற்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. செலுத்தப்படுகிறது. ஆனால் உற்பத்தியான ஊறுகாய்க்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. எனவே ஊறுகாய் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் போதுமான உள்ளீடு வரியை திரும்ப பெற முடியவில்லை. எனவே இந்த குறுந்தொழிலில் ஈடுபட்டுள்ள ஊறுகாய் உற்பத்தியாளர்கள் 12 சதவிகித வரியை மிகப் பெரிய சுமையாக கருதுகிறார்கள்.

எனவே 50 கிராம் மற்றும் அதற்கு குறைவான ஊறுகாய் பொட்டலங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் இந்தியா முழுவதும் உள்ள குறு தொழில்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டுமென அமைச்சகத்தை வேண்டுகிறேன். இது பெருமளவில் குறுந் தொழில்களை பாதுகாத்திட உதவும் என கருதுகிறேன்.

– டி.கே. ரங்கராஜன் எம்.பி.,

Dear Shri. Arun Jaitley JI,

EXEMPTION FROM GST FOR PICLE PACKETS OF 50 GMS AND BELOW

I would like to bring to your kind attention and that in Tamil Nadu, the pickles are sold in small packets of 50 grams and less than 50 grams to enable poor and needy people to buy it as and when necessary and dispose it off after done with.

In this pickle manufacturing tiny industry in Tamil Nadu there are about 400 manufacturers. The Industry employees about 10,000 people mostly downtrodden and uneducated, as they mostly hand made. In many small concerns, family members are also involved in the production process. Mostly the manufacturing takes place in the owners’ homes or in tiny places in rural areas. .

As the raw material for pickles are mainly vegetable and fruits which has a rate of 5% GST, and the manufactured pickles attracts 12% GST, the manufacturers do not have adequate input tax claim. The manufacturers find the Tax of 12% on a tiny Industry as huge burden.

Hence, I request you to consider waiving the GST tax on pickle packets of 50 grams and less. I also request that the Ministry may consider waiving of GST on tiny Industries throughout India.  This will save the tiny industries to a great extent.

Thanking you,

Yours sincerely,
/sd
(T.K.Rangarajan M.P.,)

Shri. Arun Jaitley,
Minister for Finance,
NEW DELHI 110 001

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...