என்எல்சியில் வெற்றி பெற்ற சிஐடியுவிற்கு அங்கீகாரம் வழங்குக – மத்திய அமைச்சருக்கு டி.கே,ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் எம்.பி. அவர்கள், “என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்ற சிஐடியு என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கத்திற்கும், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிட வேண்டி” மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் திரு. ஸ்ரீ பண்டாரு தத்தரேயா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.

3-9-2016

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம்

தற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்றழைக்கப்படுகிற நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கு தேர்தல் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (சென்ட்ரல்) சென்னை அவர்களால் 17-6-2016 அன்று நடத்தப்பட்டு அதே தேதியில் தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அடிப்படையில் நடைபெற்ற இத்தேர்தலில் சிஐடியு என்எல்சி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கம் மற்றும் என்எல்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டன. இரண்டு சங்கங்களும் முறையே 4828 வாக்குகளும் (45.2 சதவிகிதம்) மற்றும் 2426 வாக்குகளும் (22.7 சதவிகிதம்) பெற்றன.

துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (சென்ட்ரல்) அவர்கள் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்களை தலைமை தொழிலாளர் ஆணையர் (சென்ட்ரல்) டெல்லி அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக அறிந்தோம், தலைமை தொழிலாளர் ஆணையரும் தொழிற்சங்க அங்கீகாரம் வழங்குவதற்கான ஒப்புதலுக்காக தொழிலாளர் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

சிஐடியு என்எல்சி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கம் தலைமை தொழிலாளர் ஆணையர் டெல்லி அவர்களுக்கு 23-7-2016 அன்று ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

சிஐடியு தொழிற்சங்க பிரதிநிதிகளும் 29-7-2017 அன்று தலைமை தொழிலாளர் ஆணையர் (சென்ட்ரல்) அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

ஆனால் இதுநாள் வரை என்எல்சியில் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர் அமைச்சகத்திலிருந்து தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கடிதம் கிடைக்கப் பெறவில்லை.

இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

நன்றி

– டி.கே. ரங்கராஜன்

மாநிலங்களவை உறுப்பினர்

பெறுநர்;

ஸ்ரீ பண்டாரு தத்தரேயா,

தொழிலாளர் துறை அமைச்சர்

நியுடெல்லி.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...