என்.எல்.சி தொழிலாளர் காலவரையற்ற வேலை நிறுத்தம் – மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 12300 தொழிலாளர்களும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்துடன் போடப்பட்டிருந்த ஊதிய ஒப்பந்தம் 2011 டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், என்.எல்.சி நிர்வாகம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இதுவரை முன்வரவில்லை. இதன் காரணமாக என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் கிடைக்கிறது. இந்த சூழலில், தொழிலாளர்களுடனான பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதற்கு பதிலாக, போராட்டத்தைத் ஒடுக்கும் விதத்தில்தான் என்.எல்.சி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.

என்.எல்.சி தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் எழுந்துள்ள இப்பிரச்சனைக்கு, மத்திய அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...