எம்.அர்ஜூனன் கட்சியிலிருந்து நீக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு‍ உறுப்பினரும், சிவகங்கை நகராட்சித் தலைவருமான எம்.அர்ச்சுனன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் இதர கட்சியின் அனைத்து‍ பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இரண்டு நாட்கள் (05-06.08.2013) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகங்கை நகர்மன்றத் தலைவராக எம்.அர்ச்சுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுந்தன. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

இவற்றின் உண்மைத் தன்மை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் எம்.அர்ச்சுனன் நகர்மன்றத் தலைவர் பொறுப்பை தவறான முறையில் தனது சுயநலத்திற்கு பயன்படுத்தி ஊழல்கள் செய்துள்ளார் என்ற விபரங்கள் கிடைத்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதி கொண்ட கட்சியாகும். சுயநலனுக்குப் பயன்படுத்துவதை ஏற்காது.

எனவே, எம்.அர்ச்சுனனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவது என ஆகஸ்டு 5,6 தேதிகளில் நடந்த மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply