எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இலக்கிய திறனாய்வாளரான கோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய பண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர். மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும், வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார். கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர்.
அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)