எஸ்சி-எஸ்சிஏ இடைநிலை ஆசிரியர்களின் 669 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட சிபிஐ(எம்) எம்எல்ஏ கோரிக்கை!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே.பாலகிருஷ்ணன் அவர்கள் “ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான (669) இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் குறித்த வழக்கினை விரைந்து முடிக்கவும், தேர்வு பட்டியலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” நேற்று (31.3.2015) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் நேரில் அளித்த கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


31.3.2015

பெறுநர்

            மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-       

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கான (669) இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் குறித்த வழக்கினை விரைந்து முடிக்கவும், தேர்வு பட்டியலை வெளியிட உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக:

பார்வை:       

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு நாள் 21.08.2014

ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி., எஸ்.சி.ஏ., ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று அறிவிப்பு 21.8.2014 அன்று வெளியானது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இதுநாள் வரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இதுவரை நிரப்பப்படவில்லை. இக்காலதாமதத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையிலுள்ள ராமர் (வழக்கு எண்: WP(MD)16547) மற்றும் சுடலைமணி (வழக்கு எண்: WP(MD) 17255) ஆகிய இருவர் தொடுத்த வழக்குகளே காரணம். மேற்கண்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி அரசின் விளக்கத்தை அளித்து தடையாணையை ரத்து செய்வதன் மூலம் 669 ஆசிரியர்கள் பணியமர்த்த வாய்ப்பு ஏற்படும். மீண்டும் வழக்கு விசாரணை 13.4.2015 அன்று நடைபெற உள்ளது.

எனவே தாங்கள் இவ்வழக்கினை விரைந்து முடிந்து எஸ்.சி., எஸ்.சி.ஏ., ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை வெளியிட்டு பணி நியமன ஆணைகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்/

(கே. பாலகிருஷ்ணன் எம்.எல்..,)

சிதம்பரம் தொகுதி

Check Also

அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ...