கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் இன்று (03.12.2018) சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினர்.

மேலும், தமிழகம் முழுவதுமிருந்து கட்சி அணிகளிடமிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்  தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...