தமிழகத்தில் கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களில் உயிர்சேதம், பொருட்சேதம், பயிர்கள், மரங்கள், வீடுகள், கால்நடைகள் என கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சூறைக்காற்றால் தகர்க்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களின் துயர் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனப் போக்குடனேயே செயல்பட்டு வருகிறது.
கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு உடனடி உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது நமது கடமையாகும். உயிர் இழந்து, வீடுகள் – உடமைகளை இழந்து தவிக்கும் டெல்டா பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற நிதியை பெற்று உடனடியாக கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாராளமாக முன்வந்து உதவிட வேண்டுகிறோம்.
நிதி அனுப்ப வேண்டிய முகவரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
தமிழ்நாடு மாநிலக்குழு,
27, வைத்தியராமன் தெரு, தி. நகர்,
சென்னை – 600 017.
போன்: 044-24341205, 24326800 / 24326900
பேக்ஸ்: 044 – 24341294
Email: cpimtn2009@gmail.com,
SB A/C No: 418674546,
IFSC Code No: IDIB000T014,
Name: Communist Party of India (Marxist),
Tamilnadu State Committee,
Indian Bank, T.Nagar Branch, Chennai
ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை, இ.டிரான்ஸ்பர் ரெபரன்ஸ் நம்பர், வங்கி செலான் ஆகிய விபரத்தை கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com),), பேக்ஸ் (044-24341294) மற்றும் கடிதம் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர்கள் Communist Party of India (Marxist), Tamilnadu State Committee என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். மணியார்டர் மூலம் அனுப்புவோர்கள் கட்சியின் மாநிலக்குழு முகவரிக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.
கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்