கட்சியின் தேர்தல் கணக்குகள் குறித்து அரசியல் தலைமைக்குழு அறிக்கை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு செப்டம்பர் 24 அன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி மற்றும் செலவுகள் குறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது, கட்சியின் மாண்பினை குலைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பொய்யான விவரங்களேயன்றி வேறல்ல.

ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சியால் பெறப்பட்ட அனைத்து நன்கொடைகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இது, தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை உள்ளடக்கியதாகும். இதில், ஊடகச் செய்திகளில் தவறாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதைப் போல மறைப்பதற்கு ஏதும் இல்லை.

இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கணக்குகள் குறித்த அறிக்கையானது, தேர்தலின் போது கட்சியால் செய்யப்பட்ட அனைத்து செலவினங்களையும் பற்றிய விவரங்களை கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஊடகச் செய்திகளில் கட்சி செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘தொகை’ என்பது முற்றிலும் திரித்துக் கூறப்பட்ட ஒன்றாகும்.

இந்த அனைத்து விபரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...