கட்சி அணிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் வேண்டுகோள்!

வெள்ள பாதிப்பு பகுதிகளில் இயல்பு நிலை ஏற்படும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கட்சியின் வழிகாட்டுதலின் செயல்படும் வர்க்க, வெகுஜன அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வெள்ள நீரில் தத்தளிக்கும் மக்களை மீட்டெடுக்க தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சாத்தியமான அளவிற்கு வழங்கிடவும், நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவும் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

உடமைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் அனைத்து மக்களுக்கும் அரசு நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே வெள்ள பாதிப்பு இல்லாத அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கிட உடனடியாக நிதி வசூல் செய்து அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க விரும்புகிற நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற நிதியை அனுப்பி வைக்கவும் வேண்டுகிறோம்.

SB A/C No: 418674546, IFSC Code No: IDIB000T014, Name: Communist Party of India (Marxist), Tamilnadu State Committee, Indian Bank, T.Nagar Branch. 7 Prakasam Road, T. Nagar, Chennai – 600 017.

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை குறித்த செலான் விபரத்தை கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com), பேக்ஸ் (044-24341294) மற்றும் கடிதம் மூலமாகவோ தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர்கள் Communist Party of India (Marxist), Tamilnadu State Committee என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். மணியார்டர் மூலம் அனுப்புவோர்கள் தங்களது முகவரியுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

நிதி அனுப்ப வேண்டிய முகவரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
தமிழ்நாடு மாநிலக்குழு,
27, வைத்தியராமன் தெரு, தி. நகர்,
சென்னை – 600 017.
போன்: 044-24341205, 24326800 / 24326900
பேக்ஸ்: 044 – 24341294

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...