சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்கள் மூலமாக வெள்ள நிவாரணப் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கட்சி, வெகுஜன அரங்கங்கள் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் இன்னும் பணிகள் நடைபெற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை வரைபடத்தில் இடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்ற, இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகளை, தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பருடன் சேர்த்து 9566466633 என்ற எண்ணுக்கு Watsapp/SMS/Telegram மூலமாக அனுப்பக் கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய தகவல்கள்
- இடம் (முழுமையான முகவரி)
- தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் மொபைல் எண்
- பணி நிலை விபரங்கள் (என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது)
- என்னென்ன பொருட்கள் மேலும் தேவைப்படுகிறது?
- நிவாரணப் பணிகளில் இன்னும் செய்ய வேண்டியவைகள் என்ன?
- செய்து முடித்துள்ள பணிகள் என்ன?