கட்டண உயர்வுக்கு‍ எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மறியல்

பேருந்து, பால் கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் ஐம்பதினாயிரம் பேர் கைது   தமிழக அரசு பால்விலையை லிட்டருக்கு ரூ. 6.25 காசும், பேருந்து கட்டணத்தை ஏறத்தாழ இரண்டு மடங்காகவும் உயர்த்தியுள்ளது. மின்கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

மத்திய காங்கிரஸ் – திமுக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் உணவுப் பொருட்கள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசின் கட்டண உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் ஒவ்வொரு சாமானிய குடும்பமும் தங்களுடைய வருமானத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வரை இழக்க நேரிட்டுள்ளது. 

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று (5.12.2011) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் நடைபெற்றது. மறியலில் மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர். சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற மறியலில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டு 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர். அமைதியாக நடைபெற்ற மறியலில் காவல்துறையினர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டுவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் அமைதியாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை  தடியடி  நடத்தியுள்ளது. மேலும்  தொலைக்காட்சி நிருபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருடைய  கேமிரா உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அத்துமீறிய தடியடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், பல்லாயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்டு திரளாக பங்கேற்று கைதாகியுள்ளனர்.   மக்களை கடுமையாக பாதித்துள்ள இந்த கட்டண உயர்வுகளை, தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறு‍த்துகிறது.

கட்டண உயர்வுகளுக்கு வலுவான எதிர்ப்பினை தெரிவித்து தமிழகம் முழுவதும் மறியலில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், ஆதரவு தெரிவித்த பொதுமக்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply