கதிராமங்கலம் போராட்டம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்க!

03.07.2017

கதிராமங்கலம் போராட்டம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி எரிந்ததோடு மண் வளமும் பாழாக்கப்பட்டுள்ளது. இதனால் எழுந்த அச்சத்தால் போராடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் தாக்குதல் தொடுத்துள்ளது. அச்சத்தின் காரணமாக போராடிய மக்கள் மீது காவல்துறை ஏவிவிடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் பல்வேறு வழக்குகளும் புனையப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை கைவிட வேண்டுமெனவும், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

மருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – ...