சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள் முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச் சுடரோடும் எடுத்துரைக்கிறது.
– லெனின்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
மார்க்ஸ் – எங்கெல்ஸ்
உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!
I. 1872-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
II. 1882-ஆம் ஆண்டு ருஷ்யப் பதிப்பின் முகவுரை
III. 1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
IV. 1888-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை
V. 1890-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
VI.1892 ஆம் ஆண்டு போலிஷ் பதிப்பின் முகவுரை
VII.1893 ஆம் ஆண்டு இத்தாலியப் பதிப்பின் முகவுரை
இ.குட்டி முதலாளித்துவ சோசலிசம்…
A. ஜெர்மானிய, அல்லது மெய்யான சோசலிசம்…
B. பழமைவாத, அல்லது முதலாளித்துவ சோசலிசம்…
C. விமர்சன – கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசமும்…
D. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகளின் நிலை…
E. பதிப்பாசிரியர் குறிப்புகள்……
1872-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
தொழிலாளர்களது சர்வதேச நிறுவனமாகிய கம்யூனிஸ்ட் கழகம் அக்காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம் கட்சியின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்திடும்படி அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. இவ்வாற பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெபத்துப் பிரதி பிப்ரவரி புரட்சிக்கு1 ஒருசில வாரங்களக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது. முதற்கண் ஜெர்மன் மெழியில் வெளிவந்தது, பிறகு ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாய் ஆங்கிலத்தில் இது 1850ல் லண்டன் Red Republican 2 பத்திரிக்கையில் வெளியாயிற்று. இந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென். 1871-ல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்தன. பிரெஞ்சு மொழி பெயர்ப்பு 1848-ம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் 3 சிறிது காலத்துக்கு முன் முதன்முதல் பாரிசில் வெளியாயிற்று. அண்மையில் நியூயார்க் Le Socialiste 4 பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. புதிய ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதல் ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின் சிறிது காலத்துக்கு எல்லாம் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டது. அறுபதாம் ஆண்டுகளில் ருஷ்யப் பதிப்பு ஒன்று ஜினீவாவில் வெளிவந்தது. முதன்முதல் வெளியாகிய பின் சிறிது காலத்துக்குள் டேனிஷிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்5 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சின் உள்நாட்டுப்போர்; அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, ஜெர்மன் பதிப்பு பக்கம் 19; இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது. தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சம் இன்றைய நிலவரத்துககுப் பற்றாக்குறையானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட, நடைமுறையில் காலங்கடந்தவை என்பதும் தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
ஆனால், இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகி விட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. 1847-க்கும் இன்றைக்கும் உள்ள இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு பிற்பாடு ஒரு பதிப்பு வெளிவரலாம். தற்போது இந்த மறுபதிப்பு எதிர்பாராத முறையில் வெளியாவதால் இதைச் செய்ய எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன் 1872, ஜூன் 24.
1882-ஆம் ஆண்டு ருஷ்யப் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் 6 கோலகல் 7 ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்யப் பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.
பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாய் இருந்தது என்பதை அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு, மிகத் தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும்கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின, அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பியாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதாரத்தூண்களாய் இருந்தன.
நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது! ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வடஅமெரிக்காவைப் பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது ; இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக் குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறிநிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசிந்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியக்கத்தக்க மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன.
அடுத்து, இப்போது ருஷ்யா! 1848-49-ஆம் ஆண்டுகளது புரட்சியின் போது ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும்,அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ருஷ்யத் தலையீடு ஒன்றே வழி என்று இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார். இன்று ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார்; ருஷ்யாவானது ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது.
நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையுடன் கூடவே, ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய ஒப்ஷீன (ஒப்ஷீனா- கிராம சமுதாயம்) வெகுவாய்ச் சீர்குலைக்கப்பட்டிருப்பினும், இன்னமும நிலத்திலான புராதனப் பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும் இது, நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா? இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெறுமாயின், தற்போது ருஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன், 1882, ஜனவரி 21
தற்போதைய இந்தப் பதிப்பின் முகவுரைக்கு நான் – அந்தோ – தனியே கையெழுத்திடப்பட்டாக வேண்டும். ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த அனைத்துத் தொழிலாளி வர்க்கமும் மற்றவர் எவரையும் விட அதிகமாய் மார்க்சுக்கே கடமைப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார், அவருடைய சமாதியின் மேல் இப்போதுதான் பசும்புல் தளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப் பிறகு அறிக்கையில் திருத்தம் செய்யலாமென்றோ, செருகிச் சேர்க்கலாமென்றோ நினைப்பது முன்னிலும் முடியாத காரியம். பின்வருவதை வெளிப்படையாய்த் திட்டவட்டமாய் மீண்டும் இங்கு எடுத்துரைப்பது முன்னிலும் அத்தியாவசியமெனக் கருதுகிறேன்;
அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து – வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே, (புராதன நிலப்பொதுவுடைமை சிதைந்து போன காலம் முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும், ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது; ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேபோது சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்கு மாய் விடுவித்தே ஆக வேண்டும் என்கிற இந்த அடிப்படை கருத்து – முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.
(* டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு என் கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது என்று ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் நான் எழுதினேன். (இப்பதிப்பு பக்கம் 21-ஐப் பார்க்கவும்). 1845க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருந்தோம், சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை நன்கு இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845-ம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரெஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார், இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் ஏறத்தாழ இதே அளவுக்குத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார். (1890-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).)
முன்பே இதை நான் பல தடவை கூறியிருக்கிறேன். முக்கியமான இப்பொழுது அறிக்கையின் முகவுரையில் இதுவும் குறிக்கப்படுதல் அவசியமாகும்.
பிரெடெரிக் ஏங்கெல்ஸ்,லண்டன், 1883, ஜூன் 28
1888-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை
இந்த அறிக்கை தொழிலாளர்களது சங்கமான கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேலைத்திட்டமாய் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்டுக் கழகம் முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மட்டுமாய் இருந்தது. பிறகு சர்வதேச நிறுவனமாயிற்று : 1848 முன்பு கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளில் தவிர்க்க முடியாதபடி இது இரகசிய சங்கமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கழகக் காங்கிரஸ், முழு அளவிலான தத்தவார்த்த, நடைமுறைக் கட்சி வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்தளிக்கும்படி மார்க்சையும் எங்கெல்சையும் பணித்தது. 1848 ஜனவரியில் ஜெர்மனி மொழியில் தயாரித்து முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி பிப்ரவரி 24 பிரெஞ்சுப் புரட்சிக்குச் 10 சில வாரங்களுக்கு முன்னால் லண்டன் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று 1848 ஜூன் எழுச்சிக்குச் சற்று முன்னதாய் பாரிசில் வெளியாயிற்று. முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு மிஸ் ஹெலன் மாக்ஃர்லெனால் செய்யப்பட்டு, லண்டனில் ஜார்ஜ் ஜூலியன் ஹார்னியின் Red Republican பத்திரிக்கையில் 1850-இல் வெளிவந்தது. டேனிஷ் போலிஷ் பதிப்புகளும் வெளியாகியிருக்கின்றன.
பாட்டாளி வர்ன்கத்துக்கும், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது பெரும் போராய் 1848 ஜூனில் பாரிசில் மூண்ட எபச்ச தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்கள் மீண்டும் பின்னிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் பிறகு மேலாண்மைக்கான போராட்டம் மீண்டும் பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பிருந்தது போல் சொத்துடைத்த வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போராட்டமாகியது; தொழிலாளி வர்க்கம் அரசியல் நடமாட்ட இடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரவாதிகளது தீவிரசாரியாய் இருக்கும் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. எங்காவது சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் வெளிப்படுமாயின் ஈவிரக்கமின்றி அவை நசுக்கப்பட்டன. இவ்வாறுதான் பிரஷ்யப் போலிஸ் அப்போது கொலோனில் இருந்த கம்யூனிஸ்டுக்கழக மையக்குழுவை வேட்டையாடிற்று. மையக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிறகு 1852 அக்டோபரில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. புகழ் பெற்ற இந்த கொலோன் கம்யூனிஸ்ட் வழக்கு விசாரணை அக்டோபர் 4-லிருந்து நவம்பர் 12 வரை நடைபெற்றது. கைதிகளில் ஏழுபேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலான கோட்டைச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்க்கழகம் கலைக்கப்பட்டதாய் அறிவித்தனர். அறிக்கைகளைப் பொறுத்தவரை இனி அது தடமற்று மறைந்து விடும் என்பதாகவே தோன்றிற்று.
ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களைத் தாக்குவதற்குப் போதிய பலம் பெற்றதும்,அகிலத் தொழிலாளர் சங்கம் உதித்தெழுந்தது. ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே அமைப்பாய் இணைத்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்டதால், அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாய் இது ஏற்றுப் பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும், பிரான்சையும் பெல்ஜியத்தையும் இத்தாலியையும் ஸ்பெயினையும் சேர்த்து புரூதோன் 11 பற்றாளர்களுக்கும், ஜெர்மனியில் லஸ்ஸாலியர்களுக்கும் (தனிப்பட்ட முறையில் லஸ்ஸால் எப்போதுமே எங்களிடம் தாம் மார்க்சினு சீடர் என்பதாய் ஏற்றுக் கொண்டார், எனவே, அறிக்கையையே அடிநிலையாய்க் கெண்டிருந்தார். அவரது கிளர்ச்சியில், அரசுக்கடன் உதவியுடன் கூட்டுறவுத் தொழிலகங்கள் நடத்தப்பட வேண்டுமெனக் கோருவதற்கு மேல் அவர் செல்லவில்லை. (எங்கெல்ஸ் குறிப்பு)) ஏற்புடையதாகும்படி போதிய அளவு பரவலான வேலைத்திட்டத்தையே அகிலமானது ஏற்க வேண்டியிருந்தது. எல்லாக் கட்சியினருக்கும் திருப்திகரமான வகையில் இந்த வேலைத்திட்டத்தை வகுத்தளித்த மார்க்ஸ், ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாகவும் பரஸ்பர விவாதத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்கத்துக்கு நிச்சயமாய்க் கைவரப் பெறும் அறிவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும், நல்லதும் கெட்டதுமான மாற்றங்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விட அதிகமாய்த தோல்விகளும், மாந்தர்தம் அபிமானத்துக்குரிய பலவகைப்பட்ட உத்திகளும் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தி, தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலைமைகள் குறித்து முன்னிலும் அதிகமாய் முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழி கோலவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே நடைபெற்றது. அகிலமானது 1864-ல் இருக்கக் கண்ட தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்தை 1874ல் அது கலைக்கப்பட்ட போது விட்டுச் சென்றது. பிரான்சில் புரூதோனியமும், ஜெர்மனியில் லஸ்ஸாலியமும் இறந்து மறைந்து கொண்டிருந்தன; பழமைவாத ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும் கூட, அவற்றில் பெரும்பாலானவை நெடுநாட்களுக்கு முன்பே அகிலத்திலிருந்து தமது தொடர்பை வெட்டிக் கொண்டு விட்டன என்ற போதிலும் படிப்படியாய் முன்னேறி, கடந்த ஆண்டில் ஸ்வான்சியில் அவற்றின் தலைவர் * (டிபிள்யூ .பீவன்(பதிப்பாசிரியர்) பேசுகையில் கண்டத்து சோஷலிசத்திடம் எங்களுக்கு இருந்த கிலியெல்லாம் மறைந்து விட்டது என்பதாய் அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் நிலையை நோக்கி வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால், அறிக்கையின் கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர்களிடத்தும் கணிச அளவு செல்வாக்கு பெற்றுவிட்டன.
அறிக்கை இவ்வாறு திரும்பவும் முன்னிலைக்கு வந்தது. 1850 முதலாய் ஜெர்மன் மூலத்தின் மறுபதிப்புகள் பல தடவை சுவிட்சர்லாந்திலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெளியாகியிருக்கின்றன. 1872-ல் நியூயார்க்கில் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு – Wooddull and Claflin’s Weekly -ல் வெளியிடப்பட்டது. நியூயார்க் Le Socialiste ஏடு இந்த ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் பிறகு குறைந்தது மேலும் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகள், அதிகமாகவோ குறைவாகவோ சிதைத்துக் குலைக்கப்பட்ட வடிவில் அமெரிக்காவில் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று இங்கிலாந்தில் மறுபதிப்பாய் வெளியாகியிருக்கின்றன. முதலாவது ருஷ்ய மொழி பெயர்ப்பு பக்கூனினால் செய்யப்பட்டு, 1863-ம் ஆண்டின் வாக்கில் ஜினீவாவில் கெர்த்சனின் கோலகல் ஏட்டின் அச்சகத்திலிருந்து வெளியாயிற்று. இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பு வீரமிக்க வேரா ஸசூலிச்சால் 13 செய்யப்பட்டு 1882ல் ஜினீவாவில் வெளியாயிற்று. புதிய டேனிஷ் பதிப்பு ஒன்றை Social demokratic Biblothehek (கோப்பன்ஹேகன், 1885) நூல் தொகுப்பில் காணலாம். பாரிசில் 1885ல் Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதிலிருந்து ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டு 1886ல் மாட்ரிடில் வெளியாயிற்று. ஜெர்மன் மறுபதிப்புகளுக்குக் கணக்கில்லை. மொத்தம் பன்னிரண்டுக்குக் குறையாது. ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கான்ஸ்டான்டிநோப்பிளில் வெளிவந்திருக்க வேண்டும், ஆனால் மார்க்சின் பெயரைக் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொண்டு வர பதிப்பாளர் பயந்ததாலும், மொழி பெயர்ப்பாளர் அதைத் தமது படைப்பாய்க் குறிப்பிடுவதற்கு மறுத்ததாலும், அது வெளிவராமல் நின்று விட்டதாய்க் கேள்விப்படுகிறேன். வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருப்பது பற்றிக்கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை நான் நேரில் பார்த்ததில்லை. இவ்விதம் அறிக்கையின் வரலாறு நவீனத்தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப் பரவி அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாய் இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
ஆயினும் அது எழுதப்பட்ட காலத்தில் அதற்க நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என்பதாய் பெயர்சூடட முடியவில்லை. 1847ல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருததமைப்புகளைச் சேர்ந்தோராய் இருந்தனர்- இங்கிலாந்தில ஓவனியர்கள்,14 பிரான்சில் ஃபூரியேயர்கள்,15 இரு வகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள்; மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராத படி பல வகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூகக் கேடுகளையும் களைகிறோமெனக் கூறிக் கொண்டவர்களாய் இருந்தனர். இரு வகைபட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடி வந்தனர். தொழிலாளி வர்க்கத்தில் எந்தப்பகுதி வெறும் அரசியல்புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து, முழுநிறைவான சமுதாய மாற்றம் ஏற்படுவது இன்றியமையாததெனப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. அது பக்குவம் பெறாத, குத்தாயமாய் வரையப் பெற்ற, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்ததென்றாலும், அடிப்படையான விவகாரத்தைக் குறிப்பிடுவதாய் இருந்தது. பிரான்சில் காபேயின் கற்பனாவாதக் கம்யூனிசத்தையும், ஜெர்மனியில் வைட்லிங்கின் கற்பனாவாதக் கம்யூனிசத்தையும் 16 தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இவ்விதம் 1847-ல் சோசலிசம் மத்தியதர வர்க்க இயக்கமாய் இருக்க, கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம், எப்படியும் கண்டத்திலேனும், கண்யவான் மனப்பாங்குடைத்ததாய் இருக்க, கம்யூனிசம் இதற்கு நேர்மாறானதாய் இருந்தது. ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால், இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடம் இருக்கவில்லை. அதோடு அது முதலாய், இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
அறிக்கையானது எங்களுடைய கூட்டுப்படைப்பானதால், இதன் மையக்கருவாய் அமைந்த அடிப்படை நிர்ணயிப்பு மார்க்சுக்கே உரியதென்பதைக் குறப்பிடுவது என்கடமையாகுமெனக் கருதுகின்றேன். அந்த அடிப்படை நிர்ணயிப்பு வருமாறு : வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஒங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தன முறையும் இதிலிருநது இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலையாகின்றது, இந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை மட்டுமே விளக்க முடியும்; ஆகவே (நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்டிருந்த புராதனக் குடிகளது சமுதாயம் சிதைவுற்ற காலம் முதலாய்) மனிதகுல வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் , ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான பேராட்டங்களது வரலாறே ஆகும்; இந்த வர்க்கப் போராட்டங்களது வரலாறானது பரிணாமங்களின் தொடர் வரிசையாய் அமைந்து தற்போது வந்தடையப் பெற்றுள்ள கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் சரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலையைப் பெற வேண்டுமாயின், அதேபோது சமுதாயம் முழுதையுமே எல்லாவிதமான சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப் பாகுபாடுகளிலிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும், முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும் என்றாகியுள்ளது.
டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு என் கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது.17 1845க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை எனது இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை (* The Condition of the Working Class in England in 1844. By Frederick Engels. Translated by Florence K.Wishnewetzky. New York, Lovell- London, W.Reeves, 1888(1844-ல் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை – பிரெடரிக் எங்கெல்ஸ், மொழிபெயர்ப்பாளர் : கே.விஷ்னெவேஸ்கி, நியூயார்க், லோவெல்-லண்டன், வீ.ரீவ்ஸ்) (எங்கெல்ஸ் குறிப்பு)) நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845ம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார். இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் ஏறத்தாழ இதே அளவுக்கத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார்.
1872 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து பின்வரும் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்:
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமை எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக் கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கம். 1848-ம் ஆண்டுக்குப் பிறகு நவீனத் தொழில்துறை பெரு நடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் 18 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சிலவிவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்தக் காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சில் உள்நாட்டுப்போர்; அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, லண்டன், துரூலவ், 1871, பக்கம் 15; இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது). தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய நிலவரத்துக்குப் பற்றாக்குறையானது என்பதைக்கூறத் தேவையில்லை. ஏனெனில், 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட நடைமுறையில் காலங்கடந்தவை என்பது தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது, வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
“ஆனால் இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகிவிட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை”.
தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு, மார்க்சின், மூலதனத்தில் பெரும் பகுதியை மொழிபெயர்த்து அளித்தவரான சாமுவேல் மூர் செய்ததாகும். இருவருமாய்ச் சேர்ந்து மொழி பெயர்ப்பைச் சரி பார்த்தோம். வரலாற்றுச் சட்டுரைகளை விளக்கும் சில குறிப்புகளை நான் எழுதிச் சேர்த்திருக்கின்றேன்.
பிரடெரிக் எங்கெல்ஸ் லண்டன், 1888, ஜனவரி 30
1890-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
மேற்கண்டது எழுதப்பட்ட பிறகே, *அறிக்கையின் ஒரு புதிய ஜெர்மன் பதிப்பை வெளியிடுவது அவசியமாகியுள்ளது. அதோடுஅறிக்கைக்கு நிகழ்ந்துள்ளவை பலவற்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இரண்டாவது ரஷ்ய மொழி பெயர்ப்பு ஒன்று வேராஸசூலிச்சால் செய்யப்பட்டு 1882ல் ஜினீவாவில் வெளியாயிற்று. துரதிர்ஷ்டவசமாய் அதன் ஜெர்மன் மூலத்தின் கையெழுத்துப்பிரதி காணாமற் போய்விட்டது. ஆகவே அதை நான் ருஷ்ய மொழி பெயர்ப்பிலிருந்து திருப்பிப் பெயர்த்து எழுத வேண்டியிருக்கிறது, மூல வாசகம் இதனால் எவ்வகையிலும் சிறப்படையப்போவதில்லை. அந்த முகவுரை வருமாறு:
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப்பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோலகல் ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்ய பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.
பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாக இருநதது என்பதை அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு, மிகத்தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும், அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து ஐரோப்பிய பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின, அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒருவகையில் ஆதாரத் தூண்களாய் இருந்தன.
நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது. ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வடஅமெரிக்காவை பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது. இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக்குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இது காறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறுதிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசித்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப் பெரிய அளவிலான மூலதன ஒன்று; குவிப்பும் தொழில் துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன.
அடுத்து இப்போது ரஷ்யா! 1848-49-ம் ஆண்டுகளது புரட்சியின் போது; ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல,ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும், அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து; தப்பிக்க ருஷ்யத்தலையீடு; ஒன்றே வழி என்று; இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார், இன்று; ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார்;ருஷ்யாவானது; ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது. நவீன கால முதலாளித்துச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையின் கூடவே. ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு; மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய (ஒப்ஷீனா) வெகுவாய்ச் சீர்குலைக்க்கப்பட்டிருப்பினும், வடிவமாகவே இருக்கும் இது,நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?
இதிலிருந்து செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு ஒன்று அதேர ஆண்டில் வெளியிடப்பட்டது. முதலில் மாட்ரிடில் El Socialista ஏட்டில் அச்சிடப்பட்ட இது, பிற்பாடு பிரசுர வடிவில் வெளிவந்தது; Manifiesto del Partido Comunista, por Carlos Marx y F.Engels. Madrid. Administraction de El Socialista, Hernan Cortes (* கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை, ஆக்கியோர்- கார்ல் மார்க்ஸ். பி,எங்கெல்ஸ். எல் சோசியலிஸ்தா நிர்வாகம், மாட்ரிட், 8, கெர்னான் கொர்டேஸ். (பதிப்பாசிரியர்)) சுவையான மற்றொரு விவரத்தையும் இங்கு குறிப்பிடலாம்; ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்றின் கையெழுத்துப்பிரதி 1887/ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் ஒரு பதிப்பாளரிடம் தரப்பட்டது. பாவம் அம்மனிதருக்கு மார்க்ஸ் பெயரைத் தாங்கிய ஒன்றை வெளியிடும் துணிவு வரவில்லை, மொழிபெயர்ப்பாளரைத் தாமே ஆசிரியர் என்பதாய்த் தம் பெயரைப் போடுமாறு ஆலோசனை கூறினார், ஆனால் மொழிபெயர்ப்பாளர் இதற்கு உடன்படவில்லை.
அதிகமாகவோ குறைவாகவோ பிழைபட அமைந்த அமெரிக்க மொழிபெயர்ப்புகள் முதலில் ஒன்றும் பிறகு மற்றொன்றுமாய் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாய் இங்கிலாந்தில் வெளியான பின் முடிவில் 1888ல் நம்பகமான மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதைச் செய்தவர் என் நண்பர் சாமுவேல் மூர். இதை அச்சகத்துக்கு அனுப்பு முன் நாங்கள் இருவருமாய்ச் சேர்ந்து மீண்டும் சரி பார்த்தோம், இந்தப்பதிப்பின் தலைப்பு வருமாறு ; Manifesto of the Communist Party, by Karl Marx and Frederick Engels. Authorised English Translation, edited and annotated by Frederick Engels, 1888, London, William Reeves, 185 Fleet st. E.C.(* கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ். பிரெடெரிக் எங்கெல்ஸ், அதிகாரபூர்வமான ஆங்கில மொழி பெயர்ப்பு, பிரெடெரிக் எங்கெல்ஸ் சரி பார்த்தது, அவர் எழுதித் தந்த கட்டுரைகளும் அடங்கியது. 1888, லண்டன், வில்லியம் ரீவ்ஸ். 185 பிளீட் தெரு. ஈ,ஸி, (பதிப்பாசிரியர்)) இதன் குறிப்புகள் சிலவற்றை தற்போதைய இப்பதிப்பில் சேர்த்திருக்கிறேன்.
அறிக்கையானது அதற்குரிய ஒரு வரலாற்றை உடையதாகும். அது வெளிவந்த காலத்தில், எண்ணிக்கையில் அதிகம் இல்லாத விஞ்ஞான சோஷலிச முன்னணிப்படையினர் அதை ஆர்வத்தோடு வரவேற்றனர். (முதலாவது முகவுரையில் குறிக்கப்படும் மொழிபெயர்ப்புகளின் விவரம் இதற்கு நிரூபணமாகும்). அதன் பின் சீக்கிரமே அது பின்னிலைக்குத் தள்ளப்பட்டது, 1848 ஜூனில் பாரிஸ் தொழிலாளர்களின் தோல்வியைத் தொடர்ந்து மூண்ட பிற்போக்கு இப்படி அதைத் தள்ளி்ற்று. முடிவில், 1852 நவம்பரில் கொலோன் கம்யூனிஸ்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது (20)//// “சட்டத்தின்படி” அது தீண்டாததாய் விலக்கி வைக்கப்பட்டது. பிப்ரவரிப் புரட்சியுடன் ஆரம்பமான தொழிலாளர் இயக்கம் பொது அரங்கிலிருந்து மறைந்துவிடவே, அதோடு கூட அறிக்கையும் பின்னிலைக்குப் போய்ச் சேர்ந்தது.
ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களது ஆட்சியதிகாரத்தி்ன் மீது தாக்குதல் தொடுக்கப் போதிய பலத்தைத் திரட்டியதும் அகிலத் தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த தொழிலாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே பெரும் படையாய் ஒருசேர இணைத்திடுவதே இந்தச் சங்கத்தின் நோக்கமாய் இருந்தது, ஆகவே இச்சங்கம் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளிலிருந்து தொடங்க முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களையும் பிரெஞ்சு. பெல்ஜிய. இத்தாலிய. ஸ்பெயின் நாடுகளது பூருதோனியர்களையும் ஜெர்மன் லஸ்ஸாலியர்களையும் (* லஸ்ஸால் எங்களுடன் பேசுகையில் எப்போதுமே தாம் மார்க்சின் சீடராய் இரு்ப்பதாகவும், எனவே. அறிக்கையையே அடிநிலையாய்க் கொண்டிருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால் அவரைப் பின்பற்றியோரின் நிலை முற்றிலும் வேறு விதமாய் இருந்தது, அரசுக்கடன்களை ஆதாரமாய்க் கொண்ட உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வேண்டுமென்ற லஸ்ஸாலின் கோரிக்கைக்கு மேல் அவர்கள் செல்லவில்லை.
தொழிலாளி வர்க்கம் முழுவதையுமே அவர்கள் அரசு உதவியின் ஆதரவாளர்களாகவும் தன்னுதவின் ஆதரவாளர்களாகவும் பிளவுபடுத்தினார்கள் (எங்கெல்ஸ் குறிப்பு)) வெளியே வைத்துக் கதவடைக்காத ஒரு வேலைத் திட்டத்தை இந்தச் சங்கம் ஏற்க வேண்டியிருந்தது. அகிலத்தின் விதிகளது முகப்புரையாய் அமைந்த (21) இந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தார், பக்கூனினும் அராஜகவாதிகளுங்கூட அங்கீகரிக்கும்படி தேர்ந்த திறமையுடன் இதைச் செய்தார். அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு, ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்தி்லிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்கக் ஞான வளர்ச்சியைத்தான் முற்றும் நம்பியிருந்தார். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும். நல்லதும் கெட்டதுமான மாறுதல்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விடஅதிகமாய்த் தோல்விகளும், போராடுவோருக்கு எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல சஞ்சீவியாய் இதுகாறும் அவர்கள் கருதியிருந்தவை எவ்வளவு குறைபாடானவை என்பதைத் தெரியப்படுத்தவே செய்யும், தொழிலாளர்களது விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலைமைகளைத் தீர்க்கமாய்ப் புரிந்து கொள்வதற்கு அவர்களது மனத்தைப் பக்குவமடையதாக்கவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே நடைபெற்றது.
அகிலம் கலைக்கப்பட்ட ஆண்டான 1874ல் இருந்த தொழிலாளி வர்க்கம், அகிலம் துவக்கப்பட்ட காலமாகிய 1864ம் ஆண்டின் தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் மாறானதாய் இருந்தது. லத்தீனிய நாடுகளில் புருதோனியமும் ஜெர்மனிக்கு உரியதாய் இருந்த தனிவகை லஸ்ஸாலியமும் மடிந்து மறைந்து கொண்டிருந்தன. அக்காலத்தில் கடைந்தெடுத்த பழமைவாதப் போக்கு கொண்டிருந்த ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுங்கூட படிப்படியாய் முன்னேறி 1887ல் அவற்றின் ஸ்வான்சி காங்கிரசில் அவற்றின் தலைவர் “கண்டத்தின் சோஷலிசம் எங்களுக்குக் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்து விட்டது” என்பதாய் அச்சங்கங்களின் சார்பில் அறிவிக்கத் துணியும்படியான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஆயினும் கண்டத்து சோஷலிசமானது 1887க்குள் அனேகமாய் முழு அளவுக்கு, முன்பு அறிக்கை முரசறைந்து அறிவித்த அதே தத்துவத்தைக் குறிப்பதாய் இருந்தது. இவ்வாறு அறிக்கையின் வரலாற 1848ம் ஆண்டு முதலான நவீனத் தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றை ஓரளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது சோஷலிச இலக்கியம் அனைத்திலும் அறிக்கைதான் மிகவும் அதிகமாய்ப் பல்கிப்பரவி, மிகப் பெரும் அளவுக்கு சர்வதேசியத் தன்மை கொண்ட படைப்பாகும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரை எல்லா நாடுகளிலும் கோடானுகோடியான தொழிலாளர்களது பொது வேலைத்திட்டமாகும் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் முதலில் வெளிவந்த போது நாங்கள் அதற்கு சோஷலிஸ்டு அறிக்கை என்று பெயரளிக்க முடியவில்லை.
1847ல் இரு வகையானோர் சோஷலிஸ்டுகளாய்க் கருதப்பட்டனர், ஒருபுறத்தில் பற்பல கற்பனாவாதக் கருத்தமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; இங்கிலாந்தில் ஓவனியர்களம். பிரான்சில் பூரியேயர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்; இரு தொகுதியோரும் அக்காலத்திலேயே சிறிது சிறிதாய் மறைந்து சென்ற குறுங் குழுக்களாய்க் குறுகிச் சிறுத்து விட்டவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட ரகங்களைச் சேர்ந்த சமூக மருத்தவப் புரட்டர்கள் இருந்தார்கள்; மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி இவர்கள் தமது சர்வரோக நிவாரணிகள் மூலமும் எல்லா விதமான ஒட்டையடைப்புச் சில்லறைப் பணிகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினார்கள். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே இருந்தவர்கள், படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடியவர்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து கொண்டு, சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று கோரிற்று; இந்தப்பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது அரைகுறையானதாகவே, உள்ளுணர்வால் உந்தப்பட்டதாகவே, பல சந்தர்ப்பங்களி்லும் அவ்வளவாய்ப் பக்குவமில்லாத ஒரு கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைவுகளை – பிரான்சில் காபேயின் “ஐகேரியக்; கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் 22 கம்யூனிசம் – தோற்றுவிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாய் இருந்தது.
1847ல் சோஷலிசம் முதலாளித்துவ இயக்கத்தையும், கம்யூனிச்ம் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாய் இருந்தன. சோஷலிசமானது, எப்படிப்பட்ட கண்டத்திலேனும் கண்யவான் மனப்பாங்குடைத்ததாய் இருந்தது, ஆனால் கம்யூனிசம் இதற்கு நேர்மாறானதாய் இருந்தது. நாங்கள் அந்த ஆரம்பக் காலத்திலேயே “தொழிலாளி வர்க்கத்தின் செயலால் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்”என்ற உறுதிமிக்க கருத்துடையோராய் இருந்ததால். இரண்டு பெயர்களில் எதைத் தேர்ந்தெடுத்தூக கொள்வதென்பது குறித்து எங்களிடம் தயக்கத்துக்கு இடமில்லை. அன்று முதலாய் இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டாளி வர்ககம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில் நாங்கள் இந்த முழக்கத்தைப் பிரகடனம் செய்தோம், அப்போது ஒருசில குரல்களே இதை எதிரொலித்து எழுந்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ல் பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளிகள் அழியாப் புகழ் நினைவுக்குரிய அகிலத் தொழிலாளர் சங்கத்தில் கைகோர்த்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளுக்கே நீடித்தது என்பது மெய்தான். ஆனால் எல்லா நாடுகளையும் சேர்ந்த பாட்டாளிகளிடத்தே அது உருவாக்கிய அமர ஐக்கியமானது இன்றும் நிலைத்து நிலவுகிறது என்பதோடு, என்றையும் விட வலிமைமிக்கதாய் இருக்கிறது என்பதற்கு இன்றைய தினத்தைக் காட்டிலும் சிறப்பான சான்று ஏதுமில்லை. நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்நத பாட்டாளி வர்க்கம் தனது போர்ப் படைகளை ஒத்திகை நடத்திப் பார்வையிடுகின்றது, இந்தப் படைகள் முதன் முதலாய் ஒரே சேனையாய், ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப் பெற்றனவாய் அணிவகுத்து நிற்கின்றன.
1886-ல் அகிலத்தின் ஜினீவா காங்கிரசாலும், மீண்டும் 1889ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசாலும், மீண்டும் 1889-ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசாலும் பறைசாற்றப்பட்டது போல் சட்டம் இயற்றி முறையான எட்டு மணி நேர வேலை நாளை நிலை நாட்ட வேண்டுமெனற் உடனடிக் கோரிக்கையை எழுப்பிப் பாட்டாளிப் படை வாரிசைகள் அணி திரண்டிருக்கின்றன. இன்றைய இந்தக் காட்சி எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் மெய்யாகவே இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதை எல்லா நாடுகளின் முதலாளிகளுக்கும். நிலப்பிரபுக்களுக்கும் தெற்றெனப் புலப்படுத்தும். இதை நேரில் தம் கண் கொண்டு களிக்க என்பக்கத்தில் மார்க்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
1892 ஆம் ஆண்டு போலிஷ் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு புதிய போலிஷ் பதிப்பு அவசியமாகியிருப்பதானது பற்பல சிந்தனைகளை எழச் செய்கிறது.
முதலாவதாக, அண்மையில் அறிக்கை ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில் துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு குறியீடு போலாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட ஒரு நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடைவதற்கு ஒத்த வீதத்தில் அந்நாட்டின் தொழிலாளர்களிடத்தே, சொத்துடைத்த வர்க்கங்கள் சம்பந்தமாயத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் தமது நிலை என்ன என்பது குறித்து அறிவொளி பெற வேண்டிய தேவை அதிகமாகிறது. அவர்களிடையே சோஷலிஸ்டு இயக்கம் பரவுகின்றது, அறிக்கையின் தேவையும் அதிகரிக்கின்றது. இவ்விதம் அந்தந்த நாட்டிலும் பெருவீதத் தொழில் துறையினது வளர்ச்சி மட்டுமன்றி, பெருவீதத் தொழில்துறையினது வளர்ச்சி நிலையையும் கூட, அந்நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையின் பிரதிகளது எண்ணிக்கையைக் கொண்டு பெருமளவுக்குச் சரியானபடி அளவிட முடிகின்றது..
புதிய போலிஷ் பதிப்பு இவ்வாறு போலிஷ் தொழில் துறையானது குறிப்பிடத்தக்கவாறு முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய பதிப்பு வெளிவந்த பின் இந்த முன்னேற்றம் மெய்யாகவே ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ருஷ்யப் போலந்து, காங்கிரஸ் போலந்து 23 ருஷ்ய முடிப்பேரரசின் பெரிய தொழிற் பிராந்தியமாகியிருக்கிறது. ருஷ்யாவின் பெருவீதத் தொழில் துறை அங்குமிங்குமாய் சிதறுண்டு காணப்படுகிறது. ஒரு பகுதி பின்லந்து வளைகுடாவைச் சுற்றிலும், இன்னொன்று மையப் பிரிவிலும் (மாஸ்கோவிலும் விளதீமிரிலும்), மூன்றாவது ஒன்று கருங்கடல், அஸோவ் கடல் கரையோரங்களிலும் மற்றும் சில பகுதிகள் வேறு இடங்களிலுமாய் அமைந்திரு்க்கிறது. ஆனால். போலந்தின் தொழில்துறை இவ்வாறன்றி ஒப்பளவில் சிறிய பரப்பில் நெரிசலாய் அமைந்து, இந்த ஒன்று குவிந்த நிலையின் அணுகூலங்களையும் பிரதிகூலங்களையும் ஒருங்கே அனுபவிக்கிறது. போட்டியிடும் ருஷ்யத் தொழிலதிபர்கள் போலிஷ்காரர்களை ருஷ்யர்களாக்குவதில் தமக்குள்ள ஆர்வத்தையும் மீறி போலந்துக்கு எதிராய்க் காப்புச் சுங்க வரிகள் வேண்டுமெனக் கோரியதன் மூலம் இந்த அணுகூலங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். பிரதிகூலங்கள் – போலிஷ் தொழிலதிபர்களுக்கும் மற்றும் ருஷ்ய அரசாங்கத்துக்கும் இருப்பதானது, போலிஷ் தொழிலாளர்களிடையே சோசலிசக் கருத்துகள் வேகமாய்ப் பரவுவதிலும் அறிக்கையிற்கு இருக்கும் கிராக்கி பெருகிச் செல்வதிலும் காணக் கிடக்கிறது.
1893 ஆம் ஆண்டு இத்தாலியப் பதிப்பின் முகவுரை
இத்தாலிய வாசகருக்கு
எங்கும் அந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கம் புரிந்தசெயலாகவே இருந்தது, தெருவில் தடுப்பரண்கள் அமைத்து உயிர் இரத்தத்தையும் அளித்துப் போராடியது தொழிலாளி வர்க்கம்தான். ஆனால் பாலிஸ் தொழிலாளர்கள் மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்தவ ஆட்சியமைப்பை வீ்ழ்த்திடும் திட்டவட்டமான நோக்கம் கொண்டோராய் இருந்தார்கள். தமது வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலுள்ள ஜென்மப் பகையை அவர்கள் உண்ர்ந்திருப்பினும் கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ. பிரெஞ்சுத் தொழிலாளர்களி்ல் பெரூந்திரளானோரின் அறிவுத்துறை வளர்ச்சியோ சமுதாயப் புத்தமைப்பைச் சாத்தியமாக்கக் கூடிய கட்டத்தினை இன்னமும் வந்தடைந்து விடவில்லை. ஆகவே இறுதியில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் வசப்படூததிக் கொண்டு விட்டது. பிற நாடுகளாகிய இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை உயர்த்தி ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதை அன்றி எதுவும் செய்யவில்லை. தேச சுதந்திரம் பெறாமல் எந்த நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் பெறுவது சாத்தியமன்று. எனவே. 1848ம் ஆண்டுப் புரட்சி அதுகாறும் ஒற்றுமையும் தன்னாட்சியும் பெறாதிருந்த தேசங்களுக்கு இவை கிடைக்கச் செய்தாக வேண்டியிருந்தது. இத்தாலியும் ஜெர்மனியும் அங்கேரியும் இவ்வாறுதான் இவற்றைப் பெற்றுக் கொண்டன. அடுத்து போலந்தும் இவற்றைப் பெற்றுக் கொள்ளும்.
1848-ம் ஆண்டு புரட்சி இவ்விதம் சோசலிசப் புரட்சியாய் இருக்கவில்லை; ஆயினும் அது சோசிலிசப் புரட்சிக்குப் பாதையைச் செப்பனிட்டது. எல்லா நாடுகளிலும் முதலாளித்தவ ஆட்சியமைப்பு பெருவீதத் தொழில் துறைக்குத் தூண்டுதல் அளித்ததன் மூலம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் எங்கும் மிகுந்த எண்ணிக்கையுடையதாய், ஒன்று குவிந்ததிருக்கும், சக்தி மிக்கதான பாட்டாளி வர்க்கத்தைத் தோற்றுவி்த்திருக்கிறது. இவ்வாறு அது, அறிக்கையின் சொற்களில் சொல்வோமாயின், தனக்குச் சவக்குழி தோண்டுவோரை எழச் செய்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கும். தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை உண்டாக்குவதோ, பொது நோக்கங்களுக்காக இந்தத் தேசங்களிடையே சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோ முடியாத காரியம். 1848க்கு முன்பிருந்த அரசியல் நிலைமைகளில் இத்தாலிய, அங்கேரிய, ஜெர்மன், போலி்ஷ், ருஷ்யத் தொழிலாளர்கள்கூட்டாய்ச் சர்வதேச நடவடிக்கை எடுத்திருக்க முடியுமென நினைப்பதும் கூட சாத்தியம் அல்லவே!
ஆகவே, 1848ல் புரியப்பட்ட போர்கள் வீணாகி விடவில்லை, அந்தப் புரட்சி சகாப்தத்துக்குப் பிற்பாடு கழிந்திருக்கும் நாற்பத்தைந்து ஆண்டுகளும் வீணில் கழிந்து விரயமாகி விடவில்லை. இவற்றின் பலன்கள் முற்றிப் பக்குவமடைந்து வருகின்றன. நான் விரும்புவது எல்லாம், முன்பு மூல மொழிப் பதிப்பு சர்வதேசப் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது போல், இப்போது இந்த இத்தாலிய மொழி பெயர்ப்பு இத்தாலியத் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான்.
கடந்த காலத்தில் முதலாளித்துவம் ஆற்றிய புரட்சிகரப் பங்கினை அறிக்கை தக்கச் சிறப்புடன் எடுத்துரைக்கிறது. இத்தாலிதான் முதலாவது முதலாளித்தவ தேசம். பிரபுத்துவ மத்திய காலத்தின் இறுதியையும் நவீன முதலாளித்துவச் சகாப்தத்தின் துவக்கத்தையும் குறிப்பவனாய் விசுவ உருவம் தரித்து நிற்கும் மாமனிதன் ஓர் இத்தாலியன், மத்திய காலத்தின் கடைசிக் கவிஞனும் நவீன காலத்தின் முதற் கவிஞனுமான தாந்தே என்பான், 1300 ம் ஆண்டைப் போலவே இன்றும் ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தம் நெருங்கி வருகின்றது, இந்தப் புதிய, பாட்டாளி வர்க்கச் சகாப்தத்தைக் குறிப்பவனாய் ஒரு புதிய தாந்தேயை இத்தாலி நமக்கு அளிக்குமா?
பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன், 1893, பிப்ரவரி 1
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭
ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜாரரசனும், மெட்டர்னிகிம் கிஸோவும் (26) பிரெஞ்சுத் தீவிரவாதிகளும், ஜெர்மின் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஒட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திரூக்கின்றன.
- கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகி விட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டன.
- பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
முதலாளிகளும் பாட்டாளிகளும்…
முதலாளிகளும் பாட்டாளிகளும்
இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்.
முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது [இன்றைய] நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள்; கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது [இன்றைய] நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருப்பவர்கள். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
அதாவது, எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் என்று பொருள். வரலாற்றுக்கு முந்தைய சமுதாயம் பற்றி, அதாவது, எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு பற்றி, 1847-இல் அனேகமாக எதுவுமே அறியப்படவில்லை. அதன்பிறகு, ஹாக்ஸ்தவுசென் (Haxthusen) ருஷ்யாவில் நிலம் பொது உடைமையாக இருப்பதைக் கண்டுபிடித்தார். டியூட்டானிய (Teutonic) இனங்கள் அனைத்தும், அத்தகைய நிலப் பொது உடைமையைச் சமூக அடித்தளமாகக் கொண்டுதான் வரலாற்றில் தம் வாழ்வைத் தொடங்கின என்று மவுரர் (Maurer) நிரூபித்தார். இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எங்குமே [நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்ட] கிராமச் சமூகங்கள் (Village Communities) சமுதாயத்தின் புராதன வடிவமாக இருக்கின்றன அல்லது இருந்துள்ளன என்பது காலப்போக்கில் அறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டியதுபோல, கணம் (gens) என்னும் [இனக்குழு] அமைப்பின் உண்மையான தன்மையையும், பூர்வகுடியோடு (tribe) அதற்குள்ள உறவையும் கண்டுபிடித்து, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் முன்மாதிரியான வடிவத்தில் மார்கன் (Morgan) வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தப் புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்தவுடன், சமுதாயம் தனித்தனியான, இறுதியில் பகைமை பாராட்டும் வர்க்கங்களாகப் பிளவுபடத் தொடங்குகிறது. “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” (இரண்டாம் பதிப்பு, ஷ்டுட்கார்ட், 1886) என்னும் நூலில் [புராதனச் சமூகங்கள் சிதைந்தழிந்த] இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் வரைந்து காட்ட நான் முயன்றுள்ளேன். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.
கைவினைக் குழும எஜமான் (guild-master), அதாவது, கைவினைக் குழுமத்தின் முழு உறுப்பினன், கைவினைக் குழுமத்துக்கு உட்பட்ட எஜமான், கைவினைக் குழுமத்தின் தலைவன் அல்ல. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
வரலாற்றின் தொடக்ககாலச் சகாப்தங்களில், அனேகமாக எங்கும், பல்வேறு அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒரு சமுதாய ஏற்பாட்டைக் காண்கிறோம். சமூக அந்தஸ்தில் பல்வேறு படிநிலை அமைப்புகள் இருக்கக் காண்கிறோம். பண்டைய ரோமாபுரியில் உயர்குலச் சீமான்கள், வீர மறவர்கள், பாமரக் குடிமக்கள், அடிமைகள் எனவும், மத்திய காலத்தில் நிலப்பிரபுக்கள், மானியக்காரர்கள் (vassals), கைவினைக் குழும எஜமானர்கள், கைவினைப் பணியாளர்கள், பயிற்சிப் பணியாளர்கள், பண்மையடிமைகள் எனவும் பல்வேறு வர்க்கப் பிரிவினர் இருக்கக் காண்கிறோம். மேலும், அனேகமாக இந்த வர்க்கங்கள் அனைத்திலும் ஒன்றன்கீழ் ஒன்றான உட்பிரிவுகள் இருந்ததையும் காண முடிகிறது.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து முளைத்தெழுந்துள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளை ஒழித்துவிடவில்லை. ஆனால், பழையவற்றுக்குப் பதிலாகப் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் உருவாக்கி வைத்துள்ளது.
எனினும், நமது சகாப்தமான முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம் ஒரு தனித்த பண்பியல்பைக் கொண்டுள்ளது: வர்க்கப் பகைமைகளை அது எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் – முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் – இருபெரும் வர்க்கங்களாக, மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
ஆதி நகரங்களின் சுதந்திரமான நகரத்தார், மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிலிருந்து உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் தொடக்கக் கூறுகள் வளர்ந்தன. அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி அறியப்பட்டதும், வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்துக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டன. கிழக்கிந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்கக் காலனியாக்கம், காலனிகளுடனான வியாபாரம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாக விற்பனைப் பண்டங்களிலும் ஏற்பட்ட பெருக்கம் – ஆகிய இவையெல்லாம், வணிகத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதற்குமுன் என்றும் கண்டிராத அளவுக்கு உத்வேகம் ஊட்டின. தள்ளாடிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறின் அதிவிரைவான வளர்ச்சிக்கும் அதன்மூலம் தூண்டுதல் அளித்தன.
நிலப்பிரபுத்துவம் சார்ந்த தொழில்துறை அமைப்புமுறையின்கீழ், தொழில்துறை உற்பத்தியானது, குறிப்பிட்டவர் மட்டுமே அங்கம் வகிக்கும் கைவினைக் குழுமங்களின் ஏகபோகமாக இருந்தது. இத்தகைய தொழில்துறை அமைப்புமுறையால், தற்போதைய சூழலில், புதிய சந்தைகளின் வளர்ந்துவரும் தேவைகளை இனிமேலும் நிறைவு செய்ய இயலவில்லை. அதன் இடத்தில் பட்டறைத் தொழில் அமைப்புமுறை வந்தது. பட்டறைத் தொழில்சார்ந்த நடுத்தர வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களைப் புறந்தள்ளியது. தொழில்முறையில் இணைந்து செயல்பட்ட வெவ்வேறு கைவினைக் குழுமங்களுக்கு இடையே நிலவிய உழைப்புப் பிரிவினை, ஒவ்வொரு தனித்த பட்டறையிலும் ஏற்பட்ட உழைப்புப் பிரிவினைக்கு முன்னே மறைந்தொழிந்தது.
இதற்கிடையே, சந்தைகள் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருந்தன. தேவையோ மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பட்டறைத் தொழில்முறையுங்கூட இப்போது ஈடுகட்ட இயலாமல் போனது. இந்த சூழ்நிலையில்தான் நீராவியும் எந்திரங்களும் தொழில்துறை உற்பத்தியைப் புரட்சிகரமானதாக ஆக்கின. பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள், ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர்.
நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த செயல் இதற்குப் பாதையமைத்துக் கொடுத்தது. உலகச் சந்தையானது, வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழித் தகவல் தொடர்புக்கும் அளப்பரும் வளர்ச்சியைத் அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில்துறையின் விரிவாக்கத்துக்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்தனவோ அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது. அது தனது மூலதனத்தைப் பெருக்கியது. மத்திய காலம் விட்டுச் சென்றிருந்த ஒவ்வொரு வர்க்கத்தையும் பின்னிலைக்குத் தள்ளியது.
இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே, நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு – என்பதை நாம் காண்கிறோம்.
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவ்வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வர்க்கத்தின் அரசியல் முன்னேற்றமும் சேர்ந்தே வந்தது. நிலப்பிரபுத்துவச் சீமான்களின் ஆதிக்கத்தின்கீழ் அது ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருந்தது. மத்திய காலக் கம்யூனிலோ ஆயுதமேந்திய, சுயாட்சி நடத்தும் சங்கமாக இருந்தது. இங்கே (இத்தாலியிலும் ஜெர்மனியிலும் காணப்பட்டது போல) சுதந்திரமான நகர்ப்புறக் குடியரசாகவும், அங்கே (ஃபிரான்சில் காணப்பட்டது போல) வரி செலுத்தும் ‘மூன்றாவது வகையின’ (third estate) மக்கள் குழுவாகவும் விளங்கியது. அதன்பின்னர் பட்டறைத் தொழில் மேலோங்கிய காலகட்டத்தில், பிரபுத்துவச் சீமான்களுக்கு எதிரான ஈடுகட்டும் சக்தியாக இருந்துகொண்டு, அரை நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு அல்லது ஏதேச்சதிகார முடியாட்சிக்குச் சேவை செய்தது. பொதுவாகப் பார்த்தால், உண்மையில் மாபெரும் முடியாட்சிகளின் ஆதாரத் தூணாக விளங்கியது. முடிவாக, முதலாளித்துவ வர்க்கம், நவீனத் தொழில்துறையும் உலகச் சந்தையும் நிறுவப்பட்ட பின்னர், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசமைப்பில் ஏகபோக அரசியல் ஆதிக்கத்தைத் தனக்கென வென்று கொண்டது. நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
“கம்யூன்”என்பது ஃபிரான்சில் புதிதாக உருவாகி வந்த நகரங்களுக்கு இடப்பட்ட பெயராகும். நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்தும் எஜமானர்களிடமிருந்தும், “மூன்றாவது வகையினம்” (Third Estate) என்ற முறையில் வட்டார சுயாட்சியையும், அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதற்கும் முன்பே, அந்நகரங்கள் இப்பெயரை ஏற்றன. பொதுவாகக் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இங்கிலாந்தும், அதன் அரசியல் வளர்ச்சிக்கு ஃபிரான்சும், மாதிரி நாடுகளாக இந்த அறிக்கையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
இத்தாலி, ஃபிரான்சு ஆகிய நாடுகளின் நகரவாசிகள், அவர்களின் நிலப்பிரபுத்துவச் சீமான்களிடமிருந்து சுயாட்சிக்கான தொடக்க உரிமைகளை விலைகொடுத்து அல்லது போராடிப் பெற்ற பிறகு, தங்களின் நகர்ப்புற சமூகங்களுக்கு [“கம்யூன்” என்னும்] இப்பெயரை இட்டுக் கொண்டனர். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடுகால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்ப்புகளையும், சிலுவைப் போர்களையும் மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.
மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும். தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.
முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?
ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.
எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.
முதலாளித்துவ வர்க்கம், அதாவது மூலதனம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும். தம்மைத்தாமே கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய நிலையிலுள்ள இந்தத் தொழிலாளர்கள், ஏனைய பிற விற்பனைப் பொருள்களைப் போன்று ஒரு பரிவர்த்தனைப் பண்டமாகவே இருக்கிறார்கள். அதன் விளைவாக, வணிகப் போட்டியின் அனைத்து வகையான சாதக பாதகங்களுக்கும், சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் இலக்காகிறார்கள்.
பரந்த அளவில் எந்திரங்களின் பயன்பாடு, உழைப்புப் பிரிவினை ஆகியவற்றின் காரணமாக, பாட்டாளிகளின் வேலையானது அதன் தனித்தன்மை முழுவதையும் இழந்துவிட்டது. அதன் விளைவாக, தொழிலாளிக்கு தன் வேலை மீதிருந்த ஈர்ப்பு முழுவதும் இல்லாமல் போனது. அவர் எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாக ஆகிவிடுகிறார். அவரது வேலையைச் செய்ய அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் மிகவும் எளிமையான, மிகவும் சலிப்பூட்டும்படியான, மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் மட்டுமே. எனவே ஒரு தொழிலாளியின் உற்பத்திச் செலவு என்பது, அனேகமாக முற்றிலும் அவருடைய பராமரிப்புக்காகவும், அவருடைய இன விருத்திக்காகவும், அவருக்குத் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவுக்குக் குறுகிவிடுகிறது. ஆனால் ஒரு பண்டத்தின் விலை – ஆகவே உழைப்பின் விலை – அதன் உற்பத்திச் செலவுக்குச் சமம் ஆகும். எனவே, வேலையின் வெறுப்பூட்டும் தன்மை அதிகரிக்கும் அளவுக்கு கூலி குறைகிறது. அதுமட்டுமல்ல, எந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையைக் கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ, இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது. நவீனத் தொழில்துறையானது, தந்தைவழிக் குடும்ப எஜமானனின் மிகச்சிறிய தொழில்கூடத்தைத் தொழில் முதலாளியின் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் குவிக்கப்பட்டுள்ள திரளான தொழிலாளர்கள் படைவீரர்களைப்போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை ராணுவத்தின் படைவீரர்கள் என்ற முறையில் இவர்கள், அதிகாரிகளையும் அணித்தலைவர்களையும் (officers and sergeants) கொண்ட, ஒரு துல்லியமான படிநிலை அமைப்பினுடைய அதிகாரத்தின்கீழ் வைக்கப்படுகிறார்கள். இவர்கள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிமைகளாக இருப்பது மட்டுமல்ல, நாள்தோறும் மணிதோறும் எந்திரத்தாலும், மேலாளர்களாலும், அனைத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முதலாளித்துவத் தொழிலதிபராலும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். லாபமே தன் இறுதி லட்சியம், குறிக்கோள் என இந்தக் கொடுங்கோன்மை, எந்த அளவுக்கு அதிக வெளிப்படையாகப் பிரகடனம் செய்கிறதோ அந்த அளவுக்கு அது மேலும் அற்பமானதாக, மேலும் வெறுக்கத்தக்கதாக, மேலும் கசப்பூட்டுவதாக இருக்கிறது.
உடலுழைப்புக்கான திறமை மற்றும் உடல் வலிமை எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம். அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆகும் செலவு மட்டும் அவர்களின் வயதுக்கும் பாலினத்துக்கும் தக்கவாறு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கிறது.
ஆலை முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி, முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம், முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர், கடைக்காரர், அடகுக்காரர், மற்றும் இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார்.
நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டுகளைச் சேர்ந்தவர்களான சிறிய வணிகர்கள், கடைக்காரர்கள், பொதுவாகப் பரந்த வணிகத் தொடர்புகளின்றிக் குறுகிய அளவில் வணிகம் செய்வோர், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் படிப்படியாகத் தாழ்வுற்றுப் பாட்டாளி வர்க்கத்தில் கலந்துவிடுகின்றனர். அவர்களின் சொற்ப மூலதனம் நவீனத் தொழில்துறையின் வீச்சுக்கு ஈடுகொடுத்துத் தொழில்நடத்தப் போதாமல், பெரிய முதலாளிகளுடனான போட்டியில் மூழ்கிப் போய்விடுவது ஒருபாதிக் காரணமாகும். அவர்களுடைய தனிச்சிறப்பான திறைமைகள் புதிய உற்பத்தி முறைகளால் மதிப்பற்றதாகி விடுவது மறுபாதிக் காரணமாகும். இவ்வாறாக, மக்கள் தொகையின் அனைத்து வர்க்கங்களிடமிருந்தும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆட்கள் சேர்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாக, இந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும், அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும், தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர். தொழிலாளர்கள், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கு எதிராகத் தங்களின் தாக்குதல்களைத் தொடுக்கவில்லை. உற்பத்திக் கருவிகளை எதிர்த்தே தாக்குதல் தொடுக்கின்றனர். அவர்களின் உழைப்போடு போட்டியிடும் இறக்குமதிப் பொருள்களை அவர்கள் அழிக்கின்றனர்; எந்திரங்களைச் சுக்கு நூறாக உடைத்தெறிகின்றனர்; தொழிற்சாலைகளைத் தீவைத்துக் கொளுத்துகின்றனர்; மறைந்துபோய்விட்ட, மத்திய காலத்துத் தொழிலாளியின் அந்தஸ்தைப் பலாத்காரத்தின் மூலம் மீட்டமைக்க முயல்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் தொழிலாளர்கள், இன்னமும் நாடு முழுமையும் சிதறிக் கிடக்கின்ற, தமக்குள்ளே ஒத்திசைவில்லாத ஒரு கூட்டமாகவே உள்ளனர். அவர்களுக்கிடையே நிலவும் பரஸ்பரப் போட்டியால் பிளவுபட்டுள்ளனர். அவர்கள் எங்காவது மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புகளில் ஒன்றுபட்டுள்ளார்கள் எனில், அந்த ஒற்றுமை இன்னமும்கூட அவர்கள் தாமாக முன்வந்து ஒன்றுபட்டதன் விளைவாக இல்லாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமையால் ஏற்பட்ட விளைவாகவே உள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தன் சொந்த அரசியல் லட்சியங்களை அடையும் பொருட்டு, ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தைக் களத்தில் இறக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. மேலும், சிறிது காலத்துக்கு அவ்வாறு செய்யவும் அதனால் முடிகிறது. எனவே, இந்தக் கட்டத்தில் பாட்டாளிகள் அவர்களின் பகைவர்களோடு போராடவில்லை; பகைவர்களின் பகைவர்களாகிய எதேச்சாதிகார முடியாட்சியின் மிச்சமீதங்கள், நிலவுடைமையாளர்கள், தொழில்துறை சாராத முதலாளிகள், குட்டி முதலாளிகள் ஆகியோரை எதிர்த்துத்தான் போராடுகின்றனர். இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்துள்ளது; இவ்வகையில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றியும் முதலாளித்துவ வர்க்கத்துக்கே வெற்றியாக அமைகிறது.
ஆனால் தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றி, பெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறது; அதன் வலிமை வளர்கிறது; அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்து, அனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும், வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் தொழிலாளர்களின் கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற்சங்கங்களை) அமைத்துக் கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக் கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். இங்கும் அங்கும் [சில இடங்களில்] இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.
அவ்வப்போது சில வேளைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. யாவும் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும். மத்திய காலத்து நகரத்தார், அவர்களுடைய படுமோசமான சாலைகளின் துணைகொண்டு, எந்த ஒற்றுமையைச் சாதிக்கப் பல நூறு ஆண்டுகள் தேவைப்பட்டனவோ அந்த ஒற்றுமையை, நவீனப் பாட்டாளிகள் ரயில்பாதைகளின் துணைகொண்டு ஒருசில ஆண்டுகளிலேயே சாதித்துவிட்டனர்.
தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன் மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும் ஆக்கிக் கொள்ளும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பானது, தொழிலாளர்களுக்கு உள்ளேயே நிகழும் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. எனினும் பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியிலேயே நிலவும் பிளவுகளைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் குறிப்பிட்ட நலன்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கட்டாயப்படுத்துகிறது. இவ்வாறுதான் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைநாள் மசோதா சட்டமாக்கப்பட்டது.
மொத்தமாகப் பார்க்குமிடத்து, பழைய சமுதாயத்தின் வர்க்கங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்குக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் இடையறாத ஒரு போராட்டத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. முதலில் பிரபுக் குலத்துடன் போராட வேண்டியிருந்தது; அதன் பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் நலன்கள் தொழில்துறை முன்னேற்றத்துக்கு எதிராகிவிடும் போது, அந்தப் பகுதிகளுடன் போராட வேண்டியுள்ளது; எந்தக் காலத்திலும் அன்னிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் அது போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும், அதன் உதவியை நாடவும், அப்படியே அதனை அரசியல் அரங்குக்கு இழுத்து வரவும் வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது.
மேலும், நாம் ஏற்கெனவே அறிந்தபடி, தொழில்துறை முன்னேற்றத்தின் விளைவாக ஆளும் வர்க்கங்களில் பல பிரிவுகள் முழுமையாகப் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்படுகின்றன. அல்லது, குறைந்தபட்சம் அவற்றின் வாழ்வாதார நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளும் பாட்டாளி வர்க்கத்தின் ஞானோதயத்துக்கும் முன்னேற்றத்துக்குமான பல புத்தம் புதிய கூறுகளை வழங்குகின்றன.
இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நிலையை நெருங்கும் நேரத்தில், ஆளும் வர்க்கத்தினுள்ளே, சொல்லப்போனால் பழைய சமுதாயம் முழுமையினுள்ளும், நடைபெறுகின்ற கரைந்துபோகும் நிகழ்வுப் போக்கானது, வெகு உக்கிரமான, பகிரங்கமான நிலையை எட்டுகிறது. ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவு தன்னைத் தனியே துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் புரட்சிகர வர்க்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. ஆக, முந்தைய காலகட்டத்தில், எவ்வாறு பிரபுக்களில் ஒரு பிரிவு முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சென்றதோ, அதேபோல இப்போது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதி பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கிறது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளுள், வரலாற்று இயக்கத்தின் முழுப் பரிமாணத்தையும் தத்துவ ரீதியில் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தம்மை உயர்த்திக்கொண்ட ஒரு பிரிவினர் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் செல்கின்றனர்.
இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பான, சாரமான விளைபொருளாகும்.
அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர், சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் அனைவரும், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாகத் தம் இருப்பை அழிவிலிருந்து காத்துக் கொள்ள முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். எனவே, இவர்கள் பழமைவாதிகளே அன்றிப் புரட்சிகரமானவர் அல்லர். மேலும் இவர்கள் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் செலுத்த முயல்வதால், இவர்கள் பிற்போக்காளரும் ஆவர். இவர்கள் ஏதோ தற்செயலாகப் புரட்சிகரமாக இருக்கிறார்கள் எனில், அவ்வாறு இருப்பதற்கு இவர்கள் பாட்டாளி வர்க்கமாக மாறிவிடும் தறுவாயில் உள்ளனர் என்பது மட்டுமே காரணம் ஆகும். இவ்வாறாக, இவர்கள் தமது நிகழ்கால நலன்களை அல்ல, எதிர்கால நலன்களையே பாதுகாத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலையில் தம்மை வைத்துக்கொள்ளும் பொருட்டு, தமது சொந்தக் கருத்துநிலையையே கைவிடுகின்றனர்.
பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்” இங்குமங்கும் ஒருசில இடங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இயக்கத்துக்குள் இழுக்கப்படலாம். எனினும், அந்த வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், பிற்போக்குச் சூழ்ச்சியின் லஞ்சம் பெற்ற கைக்கூலியாகச் செயலாற்றவே அதனைப் பெரிதும் தயார் செய்கின்றன.
ஏற்கெனவே பாட்டாளி வர்க்க வாழ்க்கை நிலைமைகளில், பழைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை நிலைமைகள் அனேகமாகப் புதையுண்டு போயின. பாட்டாளிக்குச் சொத்துக் கிடையாது; மனைவி மக்களிடம் அவனுக்குள்ள உறவுக்கும், முதலாளித்துவக் குடும்ப உறவுகளுக்கும் இடையே பொதுவான கூறுகள் எதுவும் இனிமேல் இல்லை. ஃபிரான்சில் இருப்பதுபோலவே இங்கிலாந்திலும், ஜெர்மனியில் இருப்பதுபோலவே அமெரிக்காவிலும், நவீனத் தொழில்துறை உழைப்பும், மூலதனத்துக்குக் கீழ்ப்படும் நவீன கால அடிமைத்தனமும், பாட்டாளியிடமிருந்து தேசியப் பண்பின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தெறிந்துவிட்டன. சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்து கொண்டுள்ளன.
மேலாதிக்கம் பெற்ற முந்தைய வர்க்கங்கள் யாவும், [உற்பத்திப் பொருள்களைக்] கையகப்படுத்தலில் தம்முடைய நிபந்தனைகளுக்கு ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் உட்படுத்துவதன் மூலம், அவை ஏற்கெனவே பெற்றிருந்த அந்தஸ்துக்கு அரண் அமைத்துக்கொள்ள முற்பட்டன. ஆனால் பாட்டாளிகள் அவர்களுக்கே உரிய முந்தைய கையகப்படுத்தும் முறையையும், அதன்மூலம் முந்தைய பிற கையகப்படுத்தும் முறைகள் அனைத்தையும் ஒழித்திடாமல், சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கு எஜமானர்கள் ஆக முடியாது. அவர்கள் பாதுகாத்து வைக்கவும் அரணமைத்துக் கொள்ளவும் சொந்தமாக ஏதும் பெற்றிருக்கவில்லை. தனிநபர் சொத்துடைமைக்கான முந்தைய பாதுகாப்புகளையும், அதன் காப்புறுதிகளையும் தகர்த்தெறிவதே பாட்டாளிகளின் லட்சியப் பணியாகும்.
இதற்குமுன் நடைபெற்ற வரலாற்று ரீதியான இயக்கங்கள் அனைத்தும் சிறுபான்மையினரின் இயக்கங்களாகவோ, அல்லது சிறுபான்மையினரின் நலனுக்கான இயக்கங்களாகவோ இருந்தன. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கமோ மிகப் பெரும்பான்மையினர் பங்குபெறும், மிகப் பெரும்பான்மையினரின் நலனுக்காக நடக்கும், தன்னுணர்வுடன் கூடிய சுயேச்சையான இயக்கமாகும். இன்றைய நமது சமுதாயத்தின் மிகக் கீழான அடுக்காகவுள்ள பாட்டாளி வர்க்கம், அதிகாரப்பூர்வ சமுதாயத்தின் மேலமைந்துள்ள அடுக்குகள் முழுவதையும் விண்ணில் தூக்கி வீசி எறியாமல், தன்னால் [சிறிதும்] அசைய முடியாது; தன்னை உயர்த்திக் கொள்ளவும் முடியாது.
முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.
பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் – முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம் வரையில் – நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.
இதுநாள் வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின் கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.
பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்…
ஒட்டுமொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள். பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை.
ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து கம்யூனி்ஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டும் தான்:
- வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொது நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள்.
- முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
ஆகவே, நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித்தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்: தத்துவார்த்தத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழி நடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெருந்திரளினருக்கு இல்லாத அனுகூலத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய எல்லா பாட்டாளி வர்க்கக் கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவே தான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாய் உருப்பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதும் தான்.
கம்யூனிஸ்டுகளுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இல்ல அல்லது அந்தச் சீர்திருத்ததாளர் புனைந்தமைத்தோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துகக்களை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்க் கொண்டவையல்ல.
நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்விதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.
வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன.
எடுத்துக் காட்டாய் பிரெஞ்சுப் புரட்சியானது பிரபுத்துவச் சொத்துடைமை ஒழித்து அதனிடத்தில் முதலாளித்துவச் சொத்துடைமை நிலைநாட்டிற்று.
பொதுப்பட சொத்துடைமையை ஒழிப்பதல்ல, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. ஆனால், நவீன முதலாளித்துவத் தனிச் சொத்துடைமையானது வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில், ஒரு சிலர் மிகப் பலரைச் சுரண்டுவதன் அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் சுவீகரிப்பதற்குமான அமைப்பின் இறுதியான, மிகவும் நிறைவான வெளிப்பாடாகும்.
இந்த அர்த்தத்தில் கம்யூனிஸ்டுகளுடைய தத்துவத்தை இரத்தனச் சுருக்கமாய், தனிச் சொத்துடைமையை ஒழித்திடல் என்பதாய்க் கூறலாம்.
ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள். இந்தத் தனிச் சொத்துதான் தனியாளின் சுதந்திரம், செயல்பாடு, சுயேச்சை வாழ்வு ஆகியவற்றுக்கு எல்லாம் அடிநிலை என்கிறார்கள்.
பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது. இங்கே நீங்கள் குறிப்பிடுவது எந்தச் சொத்து-? சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரது சொத்தா-? அதாவது முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முற்பட்டதாகிய சொத்து வடிவமா? இம்மாதிரியான சொத்தை ஒழிக்கத் தேவை இல்லை. தொழில் வளர்ச்சியானது இதை ஏற்கனவே பெருமளவுக்கு அழித்து விட்டது. இனியும் தொடர்ந்து நாள்தோறும் அழித்து வருகிறது.
அல்லது நவீன கால முதலாளித்துவத் தனிச் சொத்தையா குறிப்பிடுகிறீர்கள்-?
ஆனால், கூலியுழைப்பானது பாட்டாளிகளுக்குச் சொத்தையா படைத்தளி்க்கிறது? இல்லவே இல்லை. அது படைப்பது மூலதனம் தான். அதாவது கூலியுழைப்பைச் சுரண்டுவதும், புதிதாய்ச் சுரண்டுவதற்குப் புதிதாய்க் கூலியுழைப்பு கிடைக்காவிடில் அதிகரிக்க முடியாததுமாகிய சொத்து வகைதான். சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான பகைமையை அடிப்படையாய்க் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரு தரப்புகளையும் பரிசீலிப்போம்.
முதலாளியாய் இருப்பதற்கு அர்த்தம் பொருளுற்பத்தியில் தனியாள் வழியில் மட்டுமின்றி சமூக வழியிலுமான அந்தஸ்து வகிப்பதாகும். முலதனமானது கூட்டுச் செயற்பாட்டினால் விளைவதாகும். சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இறுதியாய்ப் பார்க்குமிடத்து சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே அதை இயங்க வைக்க முடியும்.
எனவே, மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி. ஆகவே, மூலதனமானது பொதுச் சொத்தாய், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்குமான சொத்தாய் மாற்றப்படும் போது, தனியாளின் சொத்து அதன் மூலம் சமூகச் சொத்தாய் மாற்றப்படவில்லை. சொத்தின் சமூகத் தன்மைதான் மாற்றப்படுகிறது. சொத்தானது அதன் வர்க்கத் தன்மையை இழந்துவிடுகிறது.
இனி கூலியுழைப்பைப் பரிசீலிப்போம்
கூலியுழைப்பின் சராசரி விலைதான் குறைந்தபட்சக் கூலி, அதாவது தொழிலாளி தொழிலாளியாய்த் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்படும் பிழைப்புச் சாதனங்களின் மொத்த அளவு. ஆகவே, கூலித் தொழிலாளி தமது உழைப்பின் மூலம் சுவீகரித்துக் கொள்வது எல்லாம், தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் மட்டும்தான் போதுமானது. உழைப்பின் உற்பத்திப் பொருள்களிலான இந்த தனியாள் சுவீகரிப்பை, மனித உயிர் வாழ்வின் பராமரிப்புக்காகவும் புனர் உற்பத்திக்காகவும் வேண்டியதை மட்டும் அளித்து, ஏனையோரது உழைப்பின் மீது ஆண்மை செலுத்த உபரியாய் எதையும் விட்டு வைக்காத இந்தச் சுவீகரிப்பை ஒழிக்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்குக் கிஞ்சித்ததும் இல்லை. இந்தச் சுவீகரிப்பின் இழவான தன்மையைத்தான், மூலதனத்தைப் பெருகச் செய்வதற்கு மட்டுமே தொழிலாளி வாழ்கிறான், ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் ஒழித்திட விரும்புகிறோம்.
முதலாளித்துவ சமுதாயத்தில் உயிருள்ள உழைப்பு சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பைப் பெருகச் செய்வதற்குரிய ஒரு சாதனமாகவே இருந்து வருகிறது. கம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது தொழிலாளியின் வாழ்வை விரிவு பெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும்.
ஆகவே, முதலாளித்துவ சமுதாயத்தில் கடந்த காலம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் புரிகிறது. கம்யூனிச சமுதாயத்தில் நிகழ் காலம் கடந்த காலத்தன் மீது ஆதிக்கம் புரியும். முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் சுயேச்சையான தாய், தனித்தன்மை கொண்டதாய் இருக்கிறது. அதேபோல உயிருள்ள ஆள் சுயேச்சையற்றவனாய், தனித்தன்மை இல்லாதவனாய் இருக்கின்றான்.
இப்படிப்பட்ட உறவுகளை ஒழிப்பதைத்தான் தனியாளது தனித்தன்மையின் ஒழிப்பாய், சுதந்திரத்தின் ஒழிப்பாய்க் கூறுகிறார்கள் முதலாளிகள்.
இப்படிப்பட்ட உறவுகளை ஒழிப்பதைத்தான் தனியாளது தனித்தன்மையின் ஒழிப்பாய், சுதந்திரத்தின் ஒழிப்பாய்க் கூறுகிறார்கள் முதலாளிகள். சந்தேகமே வேண்டாம், முதலாளித்துவத் தன்ித்தன்மையையும் முதலாளித்துவ சுயேச்சையையும் முதலாளித்துவ சுதந்திரத்தையும் ஒழிப்பதுதான் குறிக்கோள்.
தற்போதுள்ள முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளில், சுதந்திரம் என்பதற்கு சதந்திரமான வாணிபம், சுதந்திரமான வி்ற்பனையும் வாங்குதலும் என்றே அர்த்தம்.
ஆனால் விற்பனையும் வாங்குதலும் மறையும் போது சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் கூடவே மறைந்து போகும். சுதந்திரமான பிற்பனை. வாங்குதல் என்ற பேச்சுக்கம் பொதுப்பட சுதந்திரத்தை பற்றிய நமது முதலாளித்துவ வர்க்கத்தாரது ஏனைய எல்லாத் “தீரச் சொல்வீச்சுகளுக்கும்” ஏதாவது அர்த்தம் இருக்குமாயின், அது மத்திய காலத்திய கட்டுண்ட விற்பனையுடனும் வாங்குதலுடனும் வணிகர்களுடனும் ஒப்பிடும்போது மட்டும்தான். ஆனால் விற்பனையும் வாங்குதலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளும், இவற்றோடு முதலாளித்துவ வர்க்கமுங்கூட கம்யூனிச்த்தின் ஷ்ரீலம் ஒழிக்கப்படுவதற்கு எதிராய் முன்வைக்கப்படுகையில் இந்தப் பேச்சுக்கள் யாவும் அர்த்தமற்றுப் போகின்றன.
தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக்கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்குத் தனிச்சொத்து ஏற்கனவே இல்லாமல் ஒழிக்கப்பட்டு விட்டது; ஒரு சிலரிடத்தே தனிச்சொத்து இருப்பதற்கே காரணம் இந்தப்பத்தில் ஒன்பது பங்கானோரிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான். ஆக சமுதாயத்தின் மிக்ப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்.
சுருங்கச் சொல்வதெனில், உங்களுடைய சொத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று ஏசுகிறீர்கள். ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்;
எத்தருணம் முதல் உழைப்பை மூலதனமாய், பணமாய், நில வாடகையாய் – ஏகபோகமாக்கிக் கொண்டு விடுவதற்கு ஏற்ற ஒரு சமூக சக்தியாய் – மாற்ற முடியாமற் போகிறதோ, அதாவது எத்தருணம் முதல் தனியாளின் சொத்தினை முதலாளித்துவச் சொத்தாய், மூலதனமாய் மாற்ற முடியாமற் போகிறதோ, அத்தருணம் முதற்கொண்டே தனியாளின் தனித்தன்மை மறைந்து விடுவதாய் நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆதலால் “தனியாள்” என்னும்போது நீங்கள் முதலாளியையே தவிர, மத்தியதர வர்க்கச் சொத்துடைமையாளரையே தவிர, வேறு யாரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இம்மாதிரியான தனியாள் மெய்யாகவே மறையத்தான் வேண்டும், இருக்க முடியாதபடிச் செய்யப்படத்தான் வேண்டும்.
சமுதயாத்தின் உற்பத்திப் பொருள்களைச் சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை; இப்படிச்சுவீகரித்துக் கொள்வதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப் படுத்துகிறவனாகும் வாய்ப்பைத்தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது.
தனிச்சொத்தை ஒழித்ததும் எல்லாச் செயல்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது.
இது மெய்யானால், முதலாளித்தவ சமுதாயம் நெடு நாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்க வேண்டும். ஏனெனில் முதலாளித்து சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை, சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை. மூலதனம் இல்லாமற் போகும் போது கூலியுழைப்பு இரூகக முடியாதென்ற ஒருண்மையையே திருப்பித் திருப்பிப் பலவாறாய்ச் சொல்லும் கூற்றே ஆகும் இந்த ஆட்சேபம் அனைத்தும்.
பொருளாயதப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரப்புக்குமான கம்யூனிச வழிமுறைக்கு எதிராய் எழுப்பப்படும் எல்லா ஆட்சேபங்களும், அறிவுத்துறைப் படைப்புகளின் உற்பத்திக்கும் சுவீகரிப்புக்குமான கம்யூனிச வழிமறைக்கு எதிராகவும் எழுப்பப்படுகின்றன.. எப்படி வர்க்கச் சொத்துடைமையின் மறைவு முதலாளி்க்குப் பொருளுற்பத்தியே மறைந்து போவதைக் குறிப்பதாகின்றதோ, அதே போல வர்க்கக் கலாச்சாரத்தின் மறைவு அவரூக்கு எல்லாக் கலாசாரமுமே மறைவதற்கு ஒப்பானதாகின்றது.
அழிந்து விடுமென அவர் அழுது புலம்பும் அந்தக் கலாசாரம் மிகப் பெருவாரியான மக்களுக்கு இய்ந்திரமாய்ச் செயல்படுவதற்கு வேண்டிய பயிற்சியாகவே இருந்து வருகிறது.
ஆனால் முதலாளித்துவச் சொத்துடைமையின் ஒழிப்பை நீங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் சட்ட நெறியையும் இன்ன பிறவற்றையும் பற்றிய உங்களது முதலாளித்துவக் கருத்துக்களைப் பிரமாணமாய்க் கொண்டு மதிப்பீடு செய்யும் வரை எங்களுடன் சர்ச்சைக்கு வர வேண்டாம். உங்களுடைய சட்டநெறி உங்கள் வர்க்கத்தின் சித்தத்தை எல்லாருக்குமான சட்டமாய் விதைத்திடுவதுதான்; உங்களது இந்தச் சித்தத்தின் சாரத்தன்மையும் போக்கும் உங்களது வர்க்கம் நிலவுவதற்கு வேண்டிய பொருளாதார நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறவைதாம். இதே போல் உங்கள் கருத்துக்ள் எல்லாமே உங்களது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சொத்துடைமைக்கும் வேண்டிய நிலைமைகளிலிருந்து பிறந்தெழுகிறவைதாம்.
தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக அமைப்பு வடிவங்களை, பொருளற்பத்தியின் முன்னேற்றத்தின் போது வரலாற்று வழியில் தோன்றி மறைந்த போகும் உறவுகளாகிய இவற்றை, என்றும் நிலையான சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னலக் கருத்தோட்டம் உங்களைத் தூண்டுகிறது. இந்தத் தவறான கருத்தோட்டம் உங்களுக்கு மட்டும் உரியதன்று, உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வர்க்கங்கள் யாவற்றுக்குமே உரியதாய் இரூந்தது தான். பண்டைக்காலத்துச் சொத்துடைமையைப் பொறுத்தவரை நீங்கள் தெட்டத் தெளிவாய் காண்பதை, பிரபுத்துவச் சொத்துடைமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை, உங்களுடைய முதலாளித்துவச் சொத்துடைமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை, நீங்கள் தடுக்கப்பட்டு விடுகிறீர்கள்.
குடும்பத்தை ஒழிப்பதாவது! கம்யூனிஸ்டுகளுடைய இந்தக் கேடுகெட்ட முன்மொழிவை எதிர்த்து அதி தீவிரவாதிகளுங் கூட கொதித்தெழுகிறார்கள்.
இக்காலத்துக் குடும்பத்துக்கு, முதலாளித்துவக் குடும்பத்துக்கு, அடிப்படையாய் அமைவது எது? மூலதனம்தான், தனியார் இலாபம்தான். இந்தக்குடும்பம் அதன் முழு வளர்ச்சியிலுமான வடிவில் முதலாளித்துவ வர்க்கத்தாரிடையே மட்டும்தான் இரூந்து வருகிறது. ஆனால் இந்நிலைமையின் உடன்நிகழ்வாய் குடும்பவாழ்வு பாட்டாளிகளிடத்தே அனேகமாய் அற்றுப் போயிருப்பதையும், பொது நிலையிலான விபசாரத்தையும் காண்கிறோம்.
முதலாளித்துவக் குடும்பத்துடன் உடன்நிகழ்வு மறையும் போது கூடவே முதலாளித்துவக் குடும்பமும் இயல்பாகவே மறைந்து போகும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்து விடும்.
குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான், ஒப்புக் கொள்கிறோம.
ஆனால் வீட்டுக் கல்விக்குப் பதிலாய் நாங்கள் சமூக முறையிலான கல்வியைப் புகுத்தி மனிதர்களிடையிலான உறவுகளிலேயே மிகப் புனிதமானவற்றை நாசமாக்க விரும்புகிறோம் என்பீர்கள்.
உங்களுடைய கல்வி இருக்கிறதே, அது மட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே? எந்தச் சமூக நிலைமைகளில் நீங்கள் கல்வி போதிக்கிறீர்களோ அந்த நிலைமைகளாலும், பள்ளிக்கூடங்கள் மூலமும் இன்ன பிறவற்றின் மூலமும் சமுதாயத்தின் நேரடியான அல்லது மறைமுகமான தலையீட்டாலும் தீர்மானிக்கப்பட்டதுதானே அது? கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பதுகம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும். ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவும் கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்.
குடும்பம், கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன; ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு. பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி விடுவீர்களே என்று முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமாய்ச் சேர்ந்து கூக்குரலிடுகிறது.
முதலாளியாய் இருப்பவர் தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பாவிக்கிறார், உற்பத்திக் கருவிகள் எல்லார்க்கும் பொதுவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படப் போவதாய்க் கேள்விப்பட்டதும், உடனே அவர் எல்லார்க்கும் பொதுவாகி விடும் இதே கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயற்கையாகவே முடிவு செய்து கொண்டு விடுகிறார்.
பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளின் நிலையில் இருத்தப்பட்டிருப்பதை ஒழிக்க வேண்டும். உண்மையில் இது தான் நோக்கம் என்பது அவருக்குக் கனவிலும் கருத முடியாத ஒன்றாகும்.
இருப்பினும், பெண்களைக் கம்யூனிஸ்டுகள் பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் எல்லார்க்கும் பொதுவாக்கப் போகிறார்களென நமது முதலாளிமார்கள் புரளி பண்ணி நல்லொழுக்கச் சீலர்களாய் சீற்றம் கொள்கிறார்களே, அதைக் காட்டிலும் நகைத்தக்கது எதுவும் இருக்க முடியாது. பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கும் கைங்கரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்யத் தேவையில்லை. நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே இது செய்யப்பட்டு வருகிறது.
நமது முதலாளிமார்கள் சாதாரண விபசாரிகளிடம் செல்வதைச் சொல்லவே வேண்டாம், அதோடு அவர்கள் தமது பிடியிலுள்ள பாட்டாளிகளது மனைவியரும் பெண்டிரும் போதாமல் தமக்குள் ஒருவர் மனைவியை ஒருவர் வசப்படுத்திக் களவொழுக்கம் கொள்வதில் ஆகப் பெரிய இன்பம் காண்கிறார்கள்.
முதலாளித்தவத் திருமணமானது உண்மையில் மனைவியரைப் பொதுவாக்கிக் கொள்ளும் ஒரு முறையே ஆகும். ஆகவே கள்ளத்தனமாய்த் திரைமறைவில் பெண்களை எல்லார்க்கும் பொதுவாக்கி வைக்கும் முறைக்குப் பதில், ஒளிவுமறைவற்ற சட்டபூர்வ முறையைக் கொண்டுவர விரும்புகிறார்கள் கம்யூனிஸ்டுகள் என்று இவர்கள் கண்டிக்கலாமே தவிர அதிகமாய் ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியும், இன்றைய பொருளுற்பத்தி அமைப்பு ஒழிக்கப்படும் போது, இந்த அமைப்பிலிருந்து எழும் பொதுப் பெண்டிர் முறையும் – அதாவது பகிரங்கப் பொது விபசாரமும் இரகசியத் தனி விபசாரமும் – கூடவே ஒழிந்தே ஆக வேண்டும் என்பது தெளிவு.
மேலும் தாய்நாட்டையும் தேசியத் தன்மையும் இல்லாதொழிக்க விரும்புவதாகவும் கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
தொழிலாளர்களுக்குத் தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம், பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும், தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ததாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும், அதுவரைபாட்டாளி வர்க்கம் தேசியத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது, ஆனால் இச்சொல்லுக்குரிய முதலாளித்துவ அர்த்தத்தில்அல்ல,
முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சி, வாணிபச் சுதந்திரம் அனைத்துலகச் சந்தை. பொருளுற்பத்தி முறையிலும் இம்முறைக்கு உரித்தான வாழ்க்கை நிலைமைகளிலும் நாடுகள் ஒருபடித்தானவை ஆதல் – இவற்றின் காரணமாய் வெவ்வேறு நாடுகளது மக்களுக்கும் இடையிலுள்ள தேசிய வேறுபாடுகளும் பகைமைகளும் நாள்தோறும் மேலும் மேலும் மறைந்து வருகின்றன.
பாட்டாளி வர்க்க மேலாண்மையானது இவற்றை மேலும் துரிதமாய் மறையச் செய்யும். குறைந்தது தலைமையான நாகரிக நாடுகளின் அளவிலாவது அமைந்த செயல் ஒற்றுமை, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய தலையாய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
தனியொருவர் பிறர் ஒருவரைச் சுரண்டதல் எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசம் பிறிதொன்றைச் சுரண்டுதலும் ஒழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கங்களுக்கிடையிலான பகைநிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அந்த அளவுக்குத் தேசங்களுக்கிடையிலான பகைமையும் இல்லாதொழியும்.
சமயத்தின், தத்துவவியலின், பொதுவாய்ச் சித்தாந்தத்தின் நோக்குநிலையிலிருந்து கம்யூனிசத்துக்கு எதிராய்க் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விவரமாய்ப் பரிசீலிக்கத் தக்கவையல்ல.
மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது – அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா, என்ன?
பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது – கருத்துக்களின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தி்னுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன.
சமுதாயத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமுதாயத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டு விட்டன, பழைய வாழ்நிலைமைகள் சிதைவற்கு ஒத்தபடி, பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத் தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பண்மைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறிஸ்தவ சமயம் வெற்றி கொண்டது. பிறகு 18-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமயக் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சமயத்துறை சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துகள் கட்டற்ற சுதந்திரப் போட்டியின் ஆதிக்கத்தின் அறிவு உலகப் பிரதிமைகளே ஆகும்.
“வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்கநெறி, தத்துவவியல், சட்டநெறி இவை சம்பந்தமான கருத்துகள் உருத்தெரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்கநெறியும் தத்துவவியலும் அரசியல் விஞ்ஞானமும் சட்டமும் இந்த மாற்றங்களால் அழிந்துபடா எப்போதுமே இவற்றைச் சமாளித்து வந்திருக்கின்றன” என்று நம்மிடம் கூறுவார்கள்.
“இதன்றி சுதந்திரம், நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன, இவை சமுதாயத்தின் எல்லாக் கட்டடங்களுக்கும் பொதுவானவை. ஆனால் கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது; சமயம், ஒழுக்கநெறி ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் அமைப்பதற்குப் பதில் இவற்றை ஒழித்துக் கட்டிவிடுகிறது, ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்துக்கும் முரணாய்ச் செயல்படுகிறது.”
இந்தக் கு்ற்றச்சாட்டில் அடங்கியுள்ள சாரப் பொருள் என்ன? கடந்த கால சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்கப் பகைமைகளின் இயக்கமாய் இருந்திருக்கிறது, இந்தப் பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கின்றன.
ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்ற வடிவம் எதுவானாலும், சமுதாயத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பது கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் பொதுவான உண்மையாகும். எனவே. கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாகவும் இரூநதிருப்பினும், வர்க்கப் பகைமைகள் அறவே மறைந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் வட்டத்தினுள்ளே தான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது, இதில் வியப்பு ஏதுமில்லை.
கம்யூனிசப் புரட்சி பாரம்பரியச் சொத்துடைமை உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொண்டு விடும புரட்சியாகும், ஆகவே இந்தப் புரட்சியினது வளர்ச்சியின்போது பாரம்பரியக் கருத்துகளிடமிருந்து மிகவும் தீவிரமாய்த் துண்டித்துக் கொள்ளும்படி நேர்வதில் வியப்புக்கு இடமி்ல்லை.
போதும், கம்யூனிசத்தை எதிர்த்து எழுப்பப்படும் முதலாளித்துவ ஆட்சேபங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி என்பதை மேலே காண்போம்.
பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழுவேகத்தில் அதிகமாக்கும்.
ஆரம்பத்தில் இந்தப் பணியினைச் சொத்துடைமை உரிமைகளிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளிலும் எதேச்சதிகார முறையில் குறுக்கிட்டுச் செயல்படுவதன் மூலம்தான் நிறைவேற்ற முடியும். அதாவது, பொருளாதார வழியில் போதாமலும் வலுக்குறைவாகவும் தோன்றும் நடவடிக்கைகளாய் இருப்பினும், இயக்கப் போக்கின் போது தம்மை மிஞ்சிச் சென்று விடுகிறவையும் பழைய சமூக அமைப்பினுள் மேலும் குறுக்கிடும்படியான அவசியத்தை உண்டாக்குகிற்வையுமாகிய நடவடிக்கைகள் மூலம்தான், பொருளுற்பத்தி முறையைப் புரட்சிகரமாய் அடியோடு மாற்றியமைத்திடும் பாதையில் தவிர்க்க முடியாதவையாகிய இந்நடவடிக்கைகள் மூலம்தான், இந்தப் பணியினை நிறைவேற்ற முடியும்.
இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறானவையாகவே இருக்கும்.
ஆயினும் மிகவும் வளர்ந்து முன்னேறிய நாடுகளுக்குப் பொதுவாய்ப் பெருமளவுக்குப் பொருந்தக் கூடிய நடவடிக்கைகள் வருமாறு:
- நிலத்தில் சொத்துடைமையை ஒழித்தலும் நில வாடகைகள் அனைத்தையும் பொதுக் காரியங்களுக்காகப் பயன்படுத்தலும்.
- கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி.
- பரம்பரை வாரிசாய்ச் சொத்துடைமை பெறும் உரிமை அனைத்தையும் ஒழித்தல்.
- நாட்டைவிட்டு வெளியேறிவிடுவோர், கலகக்காரர்கள் ஆகியோர் எல்லோரது சொத்தையும் பறிமுதல் செய்தல்.
- அரசு மூலதனத்துடன் தனியுரிமையான ஏகபோகம் கொண்ட தேசிய வங்கியின் மூலமாய், கடன் செலாவணியை அரசின் கைகளில் ஒரு சேர மையப்படுத்தல்.
- செய்தித் தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்தல்.
- பொதுத் திட்டத்தின் பிரகாரம் ஆலைகளையும் உற்பத்திக் கருவிகளையும் விரிவாக்குதலும், தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வருதலும், பொதுவாய் மண் வளத்தை உயர்த்தலும்.
- உழைப்பைச் சரிசமமாய் எல்லாருக்கும் உரிய கடமையாக்குதல், முக்கியமாய் விவசாயத் துறைகாகத் தொழிற் பட்டாளங்களை நிறுவுதல்.
- விவசாயத்தைத் தொழில் துறையுடன் இணைத்தல், தேச மக்களை மேலும் சீரான முறையில் நாடெங்கும் பரவியமையச் செய்வதன் மூலம் நகரத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையிலான பாகுபாட்டைப் படிப்படியாய் அகற்றுதல்.
- எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல். ஆலைகளில் குழந்தைகளது உழைப்பின் தற்போதைய வடிவை ஒழித்திடல். கல்வியைப் பொருள் உற்பத்தியுடன் இணைத்தல், இன்ன பிற.
வளர்ச்சியின் போது வர்க்க பேதங்கள் மறைந்துவிடும் போது, தேச மக்கள் அனைவராலுமான மாபெரும் கூட்டமைப்பின் கைகளில் பொருளுற்பத்தி அனைத்தும் ஒருசேர மையமுற்றுவிடும் போது, பொது ஆட்சியதிகாரம் அதன் அரசியல் தன்மையை இழந்துவிடும். அரசியல் ஆட்சியதிகாரம் என்பது அதன் சரியான பொருளில், ஒரு வர்க்கத்தின் ஒழுங்கமைந்த பலவந்த அதிகாரத்தையே, பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக அமைந்த பலவந்த அதிகாரத்தையே குறிக்கின்றது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் சந்தர்ப்பங்களது நிர்ப்பந்தம் காரணமாய்த் தன்னை ஒரு வர்க்கமாய் ஒழுங்கமைத்துக் கொள்கிறதெனில், புரட்சியின் மூலம் தன்மை ஆளும் வர்க்கம் என்ற முறையில் பழைய பொருளுற்பத்தி உறவுகளைப் பலவந்தமாய் ஒழித்திடுகிறதெனில், அப்போது அது இந்தப் பழைய பொருளுற்பத்தி உறவுகளுடன் கூடவே வர்க்கப் பகைமைகளும் பொதுவாய் வர்க்கங்களும் நிலவுவதற்குரிய நிலைமைகளையும் ஒழித்திடுவதாகிறது, அதன் மூலம் அது ஒரு வர்க்கமாய்த் தனக்குள்ள மேலாண்மையையும் ஒழித்திடுவதாகிறது.
வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்டிருந்த பழைய முதலாளித்துவ சமுதாயத்துககுப் பதிலாய், ஒவ்வொருவரும் தங்கு தடையின்றி சுதந்திரமாய் வளர்வதையே எல்லாரும் தங்குதடையின்றி சுதந்திரமாய் வளர்வதற்கான நிபந்தனையாய்க் கொண்ட மக்கட்கூட்டு ஒன்று எழுந்துவிடும்.
சோசலிச, கம்யூனிச இலக்கியம்…
பிற்போக்கு சோசலிசம்…
பிரபுத்துவ சோசலிசம்…
பிரான்சையும் இங்கிலாந்தையும் சேர்ந்த பிரபுக் குலத்தோருக்கு வரலாற்று வழியில் ஏற்பட்ட நிலையின் காரணமாய், நவீன முதலாளித்துவ சமுதாயத்தை எதிர்த்து பிரசுரங்கள் எழுதுவது அவர்களது வாழ்க்கை பணியாயிற்று. 1830 ஜுலையில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியிலும், இங்கிலாந்துப் பாராளுமன்றச் சீர்திருத்தக் கிளர்ச்சியிலும் இந்தப் பிரபுக் குலத்தோர் திடீர் ஏற்றம் கண்டுவிட்ட வெறுக்கத்தக்க புதுப் பணக்கார அற்பர்களால் திரும்பவும் தோற்கடிக்கப்பட்டார்கள். இதற்குப் பிற்பாடு மெய்யான அரசியல் போராட்டத்துக்கு வழி இல்லாமற் போயிற்று. இனி சாத்தியமானது எல்லாம் இலக்கியப் போர் ஒன்றுதான். ஆனால் இலக்கியத் துறையிலுங் கூட முடியாட்சி மீட்சிக் காலத்திய (இங்கு குறிப்பிடப்படுவது 1660-க்கும் 1689-க்கும் இடையில் ஏற்பட்ட இங்கிலாந்து முடியாட்சி மீட்சி அல்ல, 1814-க்கும் 1830-க்கும் இடையில் பிரான்சு கண்ட முடியாட்சி மீட்சியே குறிப்பிடப்படுகிறது (1888 ஆம் ஆண்டு ஆங்கில பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு)) கூப்பாடுகளை எழுப்புவது சாத்தியமற்றதாகிவிட்டது.
பிரபுக் குலத்தோர் தம்மீது அனுதாபம் உண்டாகும்படி செய்யும் பொருட்டு, வெளிப்பார்வைக்குத் தமது சொந்த நலன்களை மறந்து, சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருதுவோராய் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தமது குற்றச்சாட்டை வகுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவ்விதம் பிரபுக் குலத்தோர் தமது புதிய எஜமானர்கள் மீது வசை பொழிந்தும், நெருங்கி வரும் பெரும்கேடு குறித்து அச்சம் தரும் ஆரூடங்களை அவர்கள் காதுக்குள் முணுமுணுத்தும் வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள்.
இவ்வாறுதான் உதயமாயிற்று பிரபுத்துவ சோசலிசம்; கடந்த காலத்தின் எதிரொலியாகவும், பாதி எதிர்காலத்தைப் பற்றிய மிரட்டலாகவும், சிலநேரங்களில் அதன் கசப்பான, கிண்டலான, கருகெனத் தைக்கும்படியான விமர்சனத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்தின் நெஞ்சின் நடுமையத்துள் தாக்குவதாகவும், ஆனால் தற்கால வரலாற்றின் போக்கைப் புரிந்து கொள்ளும் திறன் கொஞ்சமும் இல்லாததால் எப்போதுமே கோமாளித்தனமான விளைவை உண்டாக்குவதாகவுமே இருந்தது.
மக்களைத் தம் பக்கத்தில் திளரச் செய்யும் பொருட்டு, பிரபுக் குலத்தோர் பாட்டாளியின் பிச்சைத் தட்டினைக் கொடி போல் தமக்கு முன்னால் உயர்த்திக் காட்டினர். ஆனால் மக்கள் அவர்களோடு சேர்ந்த போதெல்லாம் அவர்களது முதுகுப் புறத்தில் பழைய பிரபுத்துவக்குல இலட்சினைகள் இருக்கக் கண்டார்கள். உடனே மரியாதையின்றி வாய்விட்டுச் சிரித்தவாறு அவர்களிடமிருந்து தூர ஓடினார்கள்.
பிரெஞ்சு மரபுவழி முடியாட்சிவாதிகளிலும் “இளம் இங்கிலாந்துக்காரர்களிலும்” (33) ஒரு பிரிவினர் இப்படித்தான் நாடகமாடினர்.
தமது சுரண்டல் முறை முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் முறையிலிருந்து மாறுபட்டிருந்ததைச் சுட்டிக்காட்டும் பிரபுத்துவவாதிகள், முற்றிலும் வேறுவகைப்பட்ட சூழலிலும் நிலைமைகளிலும் தாம் சுரண்டியதையும், இவை தற்போது காலங் கடந்தனவாகி விட்டதையும் மறந்து விடுகிறார்கள். தங்களுடைய ஆட்சியில் நவீனப் பாட்டாளி வர்க்கம் இருந்ததில்லை என்பதை எடுத்துரைக்கும் இவர்கள், தங்களுடைய சமூக அமைப்பு தவிர்க்க முடியாதபடி பெற்றெடுத்ததே நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
மற்றபடி இவர்கள் தமது விமர்சனத்தின் பிற்போக்குத்தன்மையை மூடிமறைக்க முயற்சி செய்யவில்லை; இவர்களது விமர்சனத்தின் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாய்க் கூறப்படுவது என்னவெனில், பழைய சமுதாய அமைப்பு முறையினை வேரோடு வெட்டி வீழ்த்துவதற்கென்றே விதிக்கப்பட்ட ஒரு வர்க்கத்தை இந்த முதலாளித்துவ ஆட்சி வளர்ந்துயரச் செய்கிறது என்பது தான்.
பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பது கூட அவ்வளவாய்க் காரணமல்ல, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை அல்லவா உருவாக்குகிறது என்று முதலாளித்துவ வர்க்கத்தை இவர்கள் நிந்தனை செய்கிறார்கள்.
எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளிலும் சேர்ந்து கொள்கி்ன்றார்கள். இவர்களுடைய ஆடம்பரமான வாய்ப்பேச்சுகள் எப்படி இருப்பினும், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இவர்கள் தயங்காது குனிந்து, தொழில்துறை மரத்திலிருந்து விழும் பொற்கனிகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள், ஆட்டு ரோமத்திலும் வள்ளிக்கிழங்கு சர்க்கரையிலும் உருளைக்கிழங்கு சாராயத்திலுமான வாணிபத்தில் கிடைக்கும் ஆதாயத்துக்காக வாய்மையையும் அன்பையும் கண்யத்தையும் விலைக்கு விற்கிறார்கள். (குறிப்பாய் ஜெர்மனிக்கு இது பொருந்துவதாகும். ஜெர்மன் நிலப்பிரபுக்களும் பிரஷ்ய நில வேந்தர்களும் தமது பண்ணைகளில் பெரும் பகுதியை நேரே தமது காரியக்காரர்களைக் கொண்டு சொந்தத்தில் விவசாயம் நடத்தியதோடு, பெரிய அளவில் வள்ளிக்கிழங்கு சர்க்கரைத் தயாரிப்பாளர்களாகவும், உருளைக்கிழங்கு சாராயம் வடிப்போராகவும் தொழில் புரிகின்றனர். இவர்களிலும் செல்வச் செழிப்புடைத்தவர்களாய் இருக்கும் பிரிட்டிஷ் பிரபுக்குலத்தினர் இன்னும் சரிந்து செல்லும் நிலவாரங்களுக்காக ஈடு செய்து கொள்ளும் பொருட்டு, அதிகமாகவோ குறைவாகவோ கபடமான கூட்டுப் பங்குக் கம்பெனிகளது அமைப்பாளர்களுக்கு உதவியாய்த் தமது பெயரைக் கடன் கொடுத்து ஆதாயமடையத் தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர், (1883/ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு))
எப்படி சமயகுரு எப்போதுமே நிலப்பிரபுவுடன் கை கோத்துச் செயல்பட்டு வந்திருக்கிறாரோ, அதேபோல் சமயவாத சோஷலிசமும் பிரபுத்துவ சோஷலிசத்துடன் சேர்ந்து நடைபோட்டு வந்திருக்கிறது.
கிறி்ஸ்தவத் துறவு மனப்பான்மைக்கு சோஷலிசச் சாயமிட்டுக் காட்டுவதை விட எளியது எதுவும் இல்லை. தனிச்சொத்தையும் திருமணத்ையும் அரசையும் எதிர்த்துக் கிறிஸ்தவம் கண்டன முழக்கமிடவில்லையா? இவற்றுக்குப் பதில் அது பரோபகாரத்தையும் வறுமையையும், பிரம்மசரியத்தையும் ஊன் ஒடுக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும் புனித மாதாவாகிய சமயச் சபையையும் போற்றி உபன்யாசம் புரியவி்ல்லையா? பிரபுத்துவக் கோமானுடைய மனப்புகைச்சலைப் புனிதம் பெறச் செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனித தீர்த்தமே கிறிஸ்தவ சோஷலிசம்.
முதலாளித்துவ சோசலிசம்…
முதலாளித்துவ வர்க்கத்தால் நாசத்துக்கு உள்ளாக்கப்பட்டது பிரபுத்துவக் கோமான்களது வர்க்கம் மட்டுமல்ல; நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் சூழலில் வாட்டமுற்று நசித்தவை இந்தப் பிரபுத்துவ வர்க்கத்தின் வாழ் நிலைமைகள் மட்டும் அல்ல, மத்திய கால நகரத்தாரும் சிறு விவசாய உடையாளர்களும்தான் நவீன முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னோடிகளாவர். தொழில் துறையிலும் வாணிபத்துறையிலும் சொற்ப அளவே வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளி்ல் இவ்விரு வர்க்கங்களும் உதித்தெழுந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்தில் செயலிழந்த நிலையில் இன்னமும் காலமோட்டிக் கொண்டிருக்கின்றன.
நவீன நாகரிகம் முழு அளவுக்கு வளர்ந்து விட்ட நாடுகளில் குட்டி முதலாளித்துவப் பகுதியோராலான ஒரு புதிய வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவ்வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது, முதலாளித்துவ சமுதாயத்தின் வால் பகுதியாய் ஓயாமல் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவ்வர்க்கத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் போட்டியினது செயற்பாட்டால் இடையறாது வீழ்த்தப்பட்டுப் பாட்டாளி வர்க்கத்தினுள் தள்ளப்படுகின்றனர்.
நவீனத் தொழில் துறை வளர்வதைத் தொடர்ந்து நவீன சமுதாயத்தில் இவர்கள் சுயேச்சையான ஒரு பிரிவாய் நீடிக்க முடியாமல் அறவே மறைந்து போய். வாணிபத்திலும் தொழிலிலும் விவசாயத்திலும் தம்மிடத்தில் மேலாளர்களும் சம்பள அலுவலர்களும் அமர்த்தப்பட்டு விடும் காலம் நெருங்கி வருவதைப் பார்க்கின்றனர்.
தேச மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் விவசாயிகளாய் இருக்கும் பிரான்சு போன்ற நாடுகளில், முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்ப் பாட்டாளி வர்க்கத்தை ஆதரித்த எழுத்தாளர்கள், முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தமது விமர்சனத்தில் விவசாயிகளும் குட்டி முதலாளித்துவப் பகுதியோருமானவர்களது பார்வையைப் பயன்படுத்த நேர்வதும், இந்த இடைத்தட்டு வர்க்கங்களது நோக்குநிலையிலிருந்து தொழிலாளி வர்க்கத்துக்காக வாதாட முற்படுவதும் இயற்கையே. இவ்வாறுதான் எழுந்தது குட்டி முதலாளித்துவ சோஷலிசம். பிரான்சில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் இவ்வகையினருக்கு சிஸ்மொண்டீ (34) தலைமை தாங்கினார்.
இவ்வகைப்பட்ட சோஷலிசம் நவீனப் பொருளுற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளைக் கண்டு மிகுந்த மதிநுட்பத்துடன் அவற்றை விவரித்தது. பொருளியலாளர்களுடைய கபடமான நியாயவாதங்களை அது அம்பலப்படுத்திற்று. இயந்திரங்களும் உழைப்புப் பிரிவினையும் உண்டாக்கும் நாசகர விளைவுகளையும் மூலதனமும் நிலமும் ஒருசிலரன் கைகளில் குவிவதையும் அமி உற்பத்தியையும் நெருக்கடிகளையும் அது மறக்க முடியாத வகையில் நிரூபித்துக் காட்டிற்று. குட்டி முதலாளித்துவப் பகுதியோருக்கும் விவசாயிகளுக்கும் தவிர்க்க முடியாதவாறு ஏற்படும் அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கொடுந்துன்பத்தையும், பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வத்தின் வினியோகத்தில் ஏற்படும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகளையும், தேசங்களிடையிலான படுநாசத் தொழில் துறைப் போரையும், பழைய ஒழுக்கநெறியும் பழைய குடும்ப உறவுகளும் பழைய தேசிய இனங்களும் குலைந்து செல்வதையும் அது எடுத்துரைத்தது.
ஆயினும் இவ்வகைப்பட்ட சோஷலிசம் அதன் நேர்முகக் குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களையும் அவற்றுடன் கூடவே பழைய சொத்துடைமை உறவுகளையும் பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்கவே விரும்புகிறது; அல்லது நவீன உற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களை அவற்றால் தகர்த்தெறியப்பட்டுள்ள, தகர்த்தெறியப்பட்டே ஆக வேண்டிய பழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்பினுள் இருத்தி வைத்து அடைத்திடவே விரும்புகிறது. இவை இரண்டில் எது அதன் விருப்பமாயினும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் ஒருங்கே பிற்போக்கானதும் கற்பனாவாதத் தன்மையதுமே ஆகும்.
தொழில் அரங்கில் ஒருங்கிணைந்த கைவினைச் சங்கங்கள், விவசாயத்தில் தந்தைவழிச் சமூக உறவுகள் – இவையே அதன் இறுதி முடிவான முழக்கங்கள்.
முடிவில், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயலுவதன் மதிமயக்கங்களை எல்லாம் முரட்டுப் பிடிவாதம் கொண்ட வரலாற்று உண்மைகள் சிதிறியோடச் செய்ததும், இவ்வகைப்பட்ட சோஷலிசம் பரிதாபத்துக்குரிய மனச் சோர்விலும் வேதனையிலும் மூழ்கி முடிவு எய்துகிறது.
ஜெர்மானிய, அல்லது மெய்யான சோசலிசம்…
பிரெஞ்சு நாட்டு சோஷலிச, கம்யூனிச இலக்கியமானது ஆட்சியதிகாரம் செலுத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒடுக்குமுறையின் பலனாய் உருவாகி எழுந்தது. இந்த ஆட்சியதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாய் விளங்கிற்று. ஜெர்மனியில் வரைமுறையற்ற பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் தனது போராட்டத்தை அப்போதுதான் ஆரம்பித்திருந்த ஒரு நேரத்தில் இந்த இலக்கியம் இந்நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
ஜெர்மன் தத்துவவியலாளர்களும் அரைவேக்காட்டுத் தத்துவவியலாளர்களும் ஆடம்பர அடுக்குமொழிப் பித்தர்களும் இந்த இலக்கியத்தை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டனர். ஆனால் பிரெஞ்சு நாட்டிலிருந்து இந்த எழுத்துகள் ஜெர்மனிக்குள் இடம் பெயர்ந்து வந்தபோது பிரெஞ்சு நாட்டுச் சமூக நிலைமைகளும் அவற்றுடன் சேர்ந்து இடம் பெயர்ந்து வரவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொண்டார்கள் இல்லை. ஜெர்மனியில் நிலவிய சமூக நிலைமைகளில் இந்த பிரெஞ்சு இலக்கியம் அதன் உடனடி நடைமுறை முக்கியத்துவத்தை அறவே இழந்து முழுக்க முழுக்க இலக்கியத் தன்மையதான ஒரு போக்காய்த் திரியலாயிற்று. இவ்விதம், பதினெட்டாம் நூற்றாண்டின் ஜெர்மன் தத்துவவியலாளர்களுக்கு, முதலாவது பிரெஞ்சு புரட்சியின் கோரி்க்கைகள் பொதுவான “நடைமுறை வழியிலான பகுத்தறிவின்” கோரிக்கைகளேயன்றி வேறல்ல என்றாயின; புரட்சிகர பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தினது சித்தத்தின் வெளிப்பாடானது அவர்களுடைய கண்களுக்குத் தூய சி்த்தத்தின் – எத்தகையதாய் இருந்தாக வேண்டுமோ அத்தகைய சித்தத்தின், பொதுப்படையான உண்மை மனித சித்தத்தின் – விதிகளைக் குறிப்பனவாயின.
ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமதுபண்டைத் தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துகளைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.
இந்தக் கிரகிப்பு அயல் மொழி ஒன்று எப்படி கிரகிக்கப் படுகிறதோ அதே வழியில், அதாவது மொழி பெயர்ப்பு மூலமாய் நடந்தேறியது.
பண்டைக் காலப் புறச்சமயத்தாரின் முதுபெரும் இலக்கியங்கள் தீட்டப் பெற்றிருந்த எழுத்துசூ சுவடிகளின் மேல் மடாலயத் துறவிகள் கத்தோலிக்கப் புனிதர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய அசட்டுக்குறிப்புகளை எழுதி வைத்ததை நாம் நன்கறிவோம். இதே செயல் முறையைத்தான் ஜெர்மன் இலக்கியத்துறையினர் அனாசார பிரெஞ்சு இலக்கியம் சம்பந்தமாய் நேர் எதிர்த் திசையில் செய்து முடித்தார்கள். பிரெஞ்சு மூலத்துக்கு அடியில் அவர்கள் தமது தத்துவவியல் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் அவர்கள் “மனிதத்தன்மை அன்னியமாதல்” என்று எழுதினார்கள். முதலாளித்துவ அரசு பற்றிய பிரெஞ்சு விமர்சனத்துக்கு அடியில் “பொதுமை எனும் கருத்தினம் அரியாசனத்திலிருந்து அகற்றப்படுதல்” என்றும், இன்ன பலவாறாகவும் எழுதினார்கள்,
பிரெஞ்சு வரலாற்றியல் விமர்சனங்களுக்கு அடியில் இப்படி இந்தத் தத்துவவியல் பதங்களைப் புகுத்துவதற்குத்தான் அவர்கள் “செயல்துறை தத்துவவியல்,” “மெய்யான சோஷிலிசம்”. “ஜெர்மன் சோஷலிச விஞ்ஞானம்”. “சோஷலிசத்தின் தத்துவவியல் அடிப்படை” என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர்.
பிரெஞ்சு சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு இலக்கியம் இவ்வாறு அறவே ஆண்மையிழக்க நேர்ந்தது. ஜெர்மானியரின் கைக்கு வந்ததும் இப்படி அது ஒரு வர்க்கம் பிறிதொன்றை எதிர்த்து நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடாய் இருக்கும் தன்மையை இழந்து விட்டதால், அவர் “பிரெஞ்சுக்காரருடைய ஒரு சார்பினைக்” கடந்து முன் செல்கிறோமென நினைத்துக் கொண்டார்; உண்மையான தேவைகளுக்குப் பதிலாய் உண்மையின் தேவைகளை, பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்குப் பதிலாய் மனித சாரத்தன்மையின் நலன்களை, எந்த தத்துவவியல் கற்பனையின் பனிமூட்டத்தில் மட்டும் இருக்கக்கூடிய பொதுப்படையான மனிதனின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோமென எண்ணிக் கொண்டார்.
இந்த ஜெர்மன் சோஷலிசம், பள்ளிக்கூட மாணவனது பாடத்துக்கு ஒப்பானதை அத்தனை மகத்தான காரியமாய்க் கொண்டு தனது அவலச் சரக்கை அவ்வளவு பிரமாதமாய் விளம்பரப்படுத்தி வந்த அது, பகட்டுப் புலமை வாய்ந்த தனது அப்பாவித்தனத்தை படிப்படியாய் இழக்க வேண்டியதாயிற்று.
பிரபுத்துவ கோமான்களையும் வரம்பில்லா முடியாட்சியையும் எதிர்த்து ஜெர்மன் முதலாளித்தவ வர்க்கமும், குறிப்பாய் பிரஷ்ய முதலாளித்துவ வர்க்கமும் நடத்திய போராட்டம், அதாவது மிதவாத இயக்கம் சூடு பிடித்து மும்முரமாயிற்று.
இதன் மூலம் ‘மெய்யான’ ஜெர்மன் சோஷலிசத்துக்கு நெடுநாளாய் அது விரும்பிக் காத்திருந்த வாய்பபு கிட்டிற்று; அரசியல் இயக்கத்துக்கு எதிராக சோஷலிஸ்டுக் கோரிக்கைகளை எழுப்புவதற்கும், மிதவாதத்துக்கு எதிராகவும், பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கு எதிராகவும், முதலாளித்துவப் போட்டிக்கும் முதலாளித்துவப் பத்திரிகை சுதந்திரத்துக்கும் முதலாளித்துவ சட்ட நெறிக்கும் முதலாளித்துவச் சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிராகவும் வழக்கமான சாபங்களைப் பொழிவதற்கம் அதற்கு வாய்ப்பு கிட்டிற்று, மக்கள் திரளினர் இந்த முதலாளித்துவ இயக்கத்தின் மூலம் யாவற்றையும் இழக்க வேண்டியிருக்குமே தவிர எந்த ஆதாயமும் பெற முடியாது என்று அவர்களுக்கு உபதேசி்ப்பதற்கு வாய்ப்பு கிட்டிற்று. ஆனால் சரியான தருணத்தில் ஜெர்மன் சோஷலிசத்துக்கு மறதி ஏற்பட்டு விட்டது. அது எதனுடைய அசட்டு எதிரொலியாய் இருந்ததோ, அந்தப் பிரெஞ்சு விமர்சனமானது நவீன முதலாளித்துவ சமுதாயம் அதற்குரிய பொருளாதார வாழ் நிலைமைகளோடும் அதற்கு ஏற்றதாகிய அரசியல் அமைப்போடும் ஏற்கனவே நிலவுவதையே, அதாவது ஜெர்மனியில் நடைபெறவிருந்த போராட்டம் எதைச் சாதிக்க நினைத்ததோ அது ஏற்கனவே நிலவுவதையே தனது அடிப்படை முற்கோளாய்க் கொண்டிருந்தது என்பது குறித்து மறதி ஏற்பட்டு விட்டது.
எதேச்சதிகார அரசாங்கங்களுக்கும் அவற்றின் பாதிரிமார்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் அதிகாரிகளுக்கும், தம்மை அச்சுறுத்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் காட்டி மிரட்டுவதற்கு ஏற்ற கிலியூட்டும் பொம்மையாய் இந்த ஜெர்மன் சோஷலிசம் பயன்பட்டது.
இதே அரசாங்கங்கள் சரியாய் இதே காலத்தில் ஜெர்மன் தொழிலாளி வர்க்க எழுச்சிகளை அடக்குவதற்காக உபயோகித்த கசப்பு மரூநதுகளாகிய கசையடிகளுக்கும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பிற்பாடு இந்த ஜெர்மன் சோஷலிசம் கசப்பகற்றும் இனிப்பான கடைசிக் கவளமாயிற்று.
இவ்வாறு “மெய்யான” சோஷலிசம் ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துபூ போராடுவதற்கான ஆயுதமாய் இந்த அரசாங்கங்களுக்குப் பயன்பட்ட அதே நேரத்தில், பிற்போக்கான ஒரு தரப்பின், ஜெர்மன் பிலிஸ்தியர்களது நலத்தின் குட்டி முதலாளித்துவ வர்க்கமானது, பதினாறாம் நூற்றாண்டின் மிச்சக் கூறுகளாய் அமைந்து, அது முதலாய்ப் பல்வேறு வடிவங்களில் இடைவிடாமல் தலைகாட்டி வருகிறது; தற்போதுள்ள நிலைவரங்களுக்கு இந்த வர்க்கம் தான் மெய்யான சமூக அடித்தளமாய் இருக்கிறது.
இந்த வர்க்கம் அழியாது நீடிக்க வேண்டுமாயின் ஜெர்மனியின் தற்போதைய நிலைவரங்கள் அப்படியே நீடித்தாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கம் தொழில் துறையிலும். அரசியலிலும் செலுத்தும் மேலாண்மையானது இந்த வர்க்கம் நிச்சயமாய் அழிந்து போகும்படியான அபாயத்தை உண்டாக்குகிறது – ஒருபுறத்தில் மூலதனம் ஒருசிலரிடம் குவிவதன் மூலமும், மறுபுறத்தில் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் எழுவதன் மூலமாகவும் அதற்கு இந்த அபாயம் ஏற்படுகிறது. “மெய்யான” சோஷலிசம் ஒரே கல்லால் இந்த இரண்டையும் அடித்து வீ்ழ்த்தக் கூடியதாய்த் தோன்றிற்று. உடனே கொள்ளை நோய் போல் அது பல்கிப் பரவிற்று.
கற்பிதச் சிலந்தி வலை அங்கி, சொல்லோவியப் பூ்க்களால் அலங்கரிக்கப்பட்டது; பி்ணி கொண்ட பசப்புணர்ச்சிக் கண்ணீரில் தோய்ந்தது – அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட இந்த அங்கியால்தான் ஜெர்மன் சோஷலி்ஸ்டுகள் எலும்பும் தோலுமாய் அவல உருக் கொண்ட தமது “நிரந்தர உண்மைகளை” மூடிப் போத்தியிருந்தனர். இந்த அங்கி அவர்களது சரக்குகளின் விற்பனையை இம்மாதிரியான குட்டி முதலாளித்துவக் கூறுகளிடத்தே ஏகமாய் பெருகச் செய்வதற்கு உதவியாய் இருந்தது.
ஜெர்மன் சோஷலிசத்தைப் பொறுத்தவரை அது குட்டி முதலாளித்துவ பிலிஸ்தியர்களது படாடோபமான பிரதிநிதியாய் விளங்குவதே தனக்குரிய பணி என்பதை மேலும் மேலும் நன்றாகவே உணர்ந்து கொண்டது.
ஜெர்மன் தேசமே முன்மாதிரியான தேசம், ஜெர்மணியின் பிலிஸ்திய அற்பனே முன்னுதாரணமான மனிதன் என்பதாய் அது பறைசாற்றிற்று. இந்த முன்னுதாரண மனிதனின் இழிகுணம் ஒவ்வொன்று்க்கும் அதன் உண்மைப் பண்புக்கு இழி்குணம் ஒவ்வொன்றுக்கும் அதன் உண்மைப் பண்புக்கு நேர்விரோதமாய், மறைபொருளான மகோன்னத சோஷலிசத் தன்மையதான விளக்கம் தந்தது. கடைகோடி நிலைக்குச் செல்ல வேண்டுமென்று அது கம்யூனிசத்தின் “முரட்டுத்தனமான நாசப்” போக்கை நேர் நின்று எதிர்த்தது; எல்லா வர்க்கப் போராட்டங்களையும் வெறுத்து ஒதுக்கி யாவற்றுக்கும் மேம்பட்டதான பாரபட்சமற்ற தனதுஉன்னத நிலையைப் பிரகடனம் செய்தது. சோஷலிஸ்டு, கம்யூனி்ஸ்டு வெளியீடுகள் என்பதாய்க் கூறிக் கொண்டு தற்போது (1847) ஜெர்மனியில் விநியோகமாகி வருபவை யாவும்- விதிவிலக்காய் ஒருசிலவற்றைத் தவிர்த்து- அறவே வலுவிழக்கச் செய்யும் இந்த கேடுகெட்ட இலக்கிய வகையினைச் சேர்ந்தவையே, (1848/ஆம் ஆண்டின் புரட்சிப்புயல் இந்த ஈனப்போக்கு அனைத்தையுமே துடைத்தொழித்தது, இனி சோஷலிசத்தின் பக்கம் தலைகாட்டும் விருப்பமே இப்போக்கினருக்கு ஏற்படாதபடி பாடம் கற்பித்தது, ஹெர் கார்ல் குரூன் தான் (35) இந்தப் போக்கின் பிரதான முன்மாதிரிப் பிரதிநிதியாக இருந்தவர், (1890ம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு,)
பழமைவாத, அல்லது முதலாளித்துவ சோசலிசம்…
முதலாளித்துவ வர்க்கத்தில் ஒருபகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது.
இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே பொருளியலாளர்களும். கொடைவள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித்துறையாளரும், ஜீவகாருண்ய சங்கத்தாரும், மதுக்குறைப்பு வீரர்களும், எல்லாவிதமான துக்கடாச் சீர்திருத்தக்காரர்களும், இந்த முதலாளித்துவ சோஷலிசம் முழுநிறைத் தத்துவ அமைப்புகளாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன,
புருதோனின் Philosophie de la Misere (வறுமையின் மெய்யறிவு) என்ற புத்தகத்தை இவ்வகை சோஷலிசத்துக்கு ஓர் உதாரணமாய்க் குறிப்பிடலாம்,
சோஷலிச நாட்டங் கொண்ட முதலாளிமார்கள் நவீன சமூக நிலைமைகிள் எல்லா அனுகூலங்களும் வேண்டும், போராட்டங்களும் அபாயங்களும் இருக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறார்கள், தற்போதுள்ள சமூக முறையை அப்படியே வைத்தக் கொண்டு அதன் புரட்சிகரக் கூறுகளையும் சிதைவுக் கூறுகளையும் மட்டும் நீக்க வேண்டுமென்பதே இவர்களது விருப்பம். பாட்டாளி வர்க்கம் இல்லாமல் முதலாளித்தவ வர்க்கம் மட்டும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். முதலாளித்துவ வர்க்கம் தான் அதிபதியாய் அமைந்திருக்கின்றது. இந்த வசதியான கருத்தை முதலாளித்துவ சோஷலிசம் அதிகமாகவோ குறைவாகவோ நிறைவு பெற்ற தத்துவ அமைப்பாய் வளர்த்திடுகிறது, இம்மாதிரியான அமைப்பைப் பாட்டாளி வர்க்கம் செயல்படுத்தி இவ்வழியில் நேரே ஒரு புதிய சமூக ஜெருசலத்தை நோக்கி நடைபோட வேண்டுமென கோருவதன் மூலம் உண்மையில் அது கேட்பது என்னவெனில், பாட்டாளி வர்க்கம் தற்போதுள்ள சமுதாயத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாய்த் தொடர்ந்து இருந்து கொண்டு, அதேபோது முதலாளித்துவ வர்க்கத்தைப் பற்றி அதற்குள்ள வெறுக்கத்தக்க கருத்துக்களை எல்லாம் விட்டொழித்துவிட வேண்டும் என்பதுதான்.
இவ்வகை சோஷலிசத்தின் இன்னொரு வடிவம் குறைவாகவே முறைப்படுத்தப்பட்டது, ஆனால் அதிகமாய் நடைமுறைத் தன்மை வாய்ந்தது. தொழிலாளி வர்க்கத்துக்கு அனுகூலமாய் இருக்கக் கூடியது பொருளாயத வாழ் நிலைமைகளில், பொருளாதார உறவுகளில் ஏற்படும் மாறுதல் மட்டுமேதான், வெறும் அரசியல் சீர்திருத்தத்தால் பயன் ஏதுமில்லை என்று எடுத்துரைப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்தின் கண்களில் எவ்விதமான புரட்சி இயக்கமும் மதிப்பிழந்து விடும்படிச் செய்ய முயன்றது இது. ஆனால் பொருளாயத வாழ் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதன் மூலம் இவ்வகைப்பட்ட சோஷலிசம் எவ்வகையிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகளின் ஒழிப்பை, புரட்சியால் மட்டுமே சாதிக்கப்படக்கூடிய இந்த ஒழிப்பைக் குறிக்கவில்லை; நிர்வாகச் சீர்திருத்தங்களையே குறிக்கிறது. இந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி உறவுகள் தொடர்ந்து நீடிப்பதை அடிப்படையாய்க் கொண்டவை, ஆகவே மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான உறவுகளை எவ்விதத்திலும் பாதிக்காதவை, அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்வாகப் பணியை எளிமையாக்குவதற்கும் மேல் அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாதவை.
முதலாளித்துவ சோஷலிசம் வெறும் சொல் அலங்காரமாகும் போது மட்டுமே அது தன்னைச் சரியானபடி வெளிப்படுத்திக் கொள்கிறது.
தடையில்லா வாணிபம்: தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக, காப்புச் சுங்க வரிகள்; தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக. சிறைச் சீர்திருத்தம்; தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக, இதுதான் முதலாளித்துவ சோஷலிசத்தின் இறுதி நிலையைக் குறிக்கும் சொல், விளையாட்டாய் அமையாத ஒரே சொல்.
முதலாளித்துவ சோஷலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்; முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.
விமர்சன – கற்பனாவாத சோஷலிசமும் கம்யூனிசமும்
பாபெஃபின் (36) எழுத்துகளையும் ஏனையோரது எழுத்துகளையும் போல் நவீன காலத்தின் மாபெரும் புரட்சி ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கக் கோரிக்கைகளின் குரலாய் எப்போதும் ஒலித்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.
பிரபுத்துவச் சமுதாயம் வீழ்த்தப்படுகையில் எங்கும் ஒரே பரபரப்பு மிகுந்திருந்த காலங்களில் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக முதன் முதலாய் நேரடியாய் மேற்கொண்ட முயற்சிகள் தவிர்க்க முடியாதபடி தோல்வியுற வேண்டியதாயிற்று; ஏனெனில், பாட்டாளி வர்க்கம் அப்போது வளர்ச்சியுறாத நிலையிலேயே இருந்தது என்பதுடன், அது விடுதலை பெறுவதற்குத் தேவையான பொருளாதார நிலைமைகள் இன்னமும் தோன்றியாகவில்லை. இந்த நிலைமைகள் பி்ற்பாடுதான் தோற்றுவிக்கப்படவிருந்தன, வரவிருந்த முதலாளித்துவச் சகாபத்தத்தால் மட்டுமே இந்த நிலைமைகள் தோற்றுவிக்கப்படக் கூடியவை. பாட்டாளி வர்க்கத்தின் இந்த ஆரம்பக் கால இயக்கங்களின் உடன் பிறப்பாய் எழுந்த புரட்சி இலக்கியமானது தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத்தன்மை கொண்டதாகவே இருந்தது. அனைவரும் துறவி மனப்பாங்கு கொள்ள வேண்டுமென்றும், கொச்சையான முரட்டு வழியில் சமுதாயம் சமனமாக்கப்பட வேண்டுமென்றும் அது போதித்தது.
சரியானபடி சோஷலிச, கம்யூனிச கருத்தமைப்புகள் என்பதாய்க் கூறத்தக்கவை, செயின்ட்- சிமோனும் ஃபூரியேயும் ஓவனும் (37) ஏனையோரும் எடுத்துரைத்த இவை, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் மேலே விவரிக்கப்பட்ட வளர்ச்சியுறாத ஆரம்பக் காலக் கூறில் உருவாகி எழுந்தவையே, (பிரிவு I. ‘முதலாளிகளும் பாட்டாளிகளும்’ என்பதைப் பார்க்கவும்).
இந்த அமைப்புகளின் மூலவர்கள் அன்றைய சமுதாயத்தினுள் இருக்கும் வர்க்கப் பகைமைகளையும் சிதைவு உண்டாக்கும் கூறுகளின் செயலையும் கண்னுறுவது மெய்தான். ஆனால் இன்னமும் பிள்ளைப் பருவத்திலேயே இருந்த பாட்டாளி வர்க்கம் வரலாறு படைக்கும் முன்முயற்சியோ. சுயேச்சையான அரசியல் இயக்கப்பாடோ சிறிதும் இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது.
வர்க்கப் பகைமையின் வளர்ச்சியானது தொழில் வளர்ச்சியுடன் சேர்ந்து அதே வேகத்தில் நடைபோடுவதால், அவர்கள் கண்னுறும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வேண்டிய பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குத் தெரியும்படி வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர்கள் இந்த நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளை தேடிச் செல்கிறார்கள்.
வரலாற்று வழிப்பட்ட செயல் சொந்த முறையிலான அவர்களது கண்டுபிடிப்புச் செயலுக்கும். விடுதலைக்காக வரலாற்று வழியில் உருவான நிலைமைகள் கற்பனை முறையில் வகுக்கப்பட்ட நிலைமைகளுக்கும், பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கென புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கும் அடிபணிய வேண்டும் என்றாகியது. இவர்களது கண்களுக்கு, இவர்களுடைய சமூகத் திட்டங்களுக்கான பிரசாரமும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைப் பணியும்தான் வருங்கால வரலாறு என்றாகி விடுகிறது.
ஏனையவற்றை விட மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கமாய் இருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில்தான் தலையாய கருத்து செலுத்த வேண்டும் என்ற உணர்வோடு இவர்கள் தமது திட்டங்களை வகுத்தமைக்கிறார்கள், இவர்களுக்குப் பாட்டாளி வர்க்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதெனில், அது மிக அதிகமாய்த் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் மட்டும்தான்.
வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடு இவ்வகை சோஷலி்ஸ்டுகளுடைய சுற்றுச்சார்புகளும் இவர்களை வர்க்கப் பகைமைகள் யாவற்றுக்கும் தாம் மிகவும் மேலானோராய் இருபூபதாய்க் கருதிக் கொள்ளச் செய்கின்றன. இவர்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு உறப்பினரின் நிலையையும். மிகவும் சலுகை படைத்தவர்களின் நிலையையுங்கூட மேம்படுத்த விரும்புகிறார்கள். ஆகவே, வழக்கமாய் இவர்கள் வர்க்க பேதம் கருதாமலே, ஒட்டுமொத்தமாய் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்; அது மட்டுமன்றி, எல்லோருக்கும் முதலாய் ஆளும் வர்க்கத்துக்கே வேண்டுகோள் விடுக்கிறார்கள், ஏனெனில், இவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினைப் புரிந்து கொள்ளும் எவரும் சமுதாயத்தின் சாத்தியமான மிகச் சிறந்த நிலைக்குரிய சாத்தியமான மிகச் சிறந்த திட்டமாகும் இந்த அமைப்பு என்பதைக் காண தவறவும் முடியுமோ?
எனவே. இவர்கள் எல்லா அரசியல் செயற்பாட்டையும், முக்கியமாய் எல்லாப் புரட்சிகரச் செயற்பாட்டையும் நிராகரிக்கிறார்கள். சமாதான வழிகளில் இவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்; அ்ற்பமான சோதனைகள் மூலமும் – நிச்சயம் தோல்வியுறவே செய்யும் என்னும்படியான இவற்றின் மூலமும் – முன்னுதாரணத்தின் சக்தி மூலமும் இவர்கள் இந்தப் புதிய சமூக வேதத்துக்குப் பாதையைச் செப்பனிட முயலுகிறார்கள்.
வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இப்படிப்பட்ட கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாததாய் இருந்து கொண்டு தனக்குரிய நிலை குறித்து கற்பனைப் புனைவான கருத்தோட்டத்தையே பெற்றிருக்கும் ஒரு காலத்தில் தீட்டப் பெற்ற இந்தச் சி்த்திரங்கள், பொதுவாக சமுதாயத்தைத் திருத்தியமைக்க வேண்டுமென்று அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வாய் எழும் அந்த ஆரம்பக் கால ஆர்வங்களுக்கு ஏற்பவே அமைந்திருக்கின்றன.
ஆனால் இந்த சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு வெளியீடுகளில் விமர்சனக் கூறும் ஒன்று அடங்கியிருக்கிறது. நடப்பிலுள்ள சமுதாயத்தின் ஒவ்வொரு அடிப்படை ஏற்பாட்டையும் இந்த வெளியீடுகள் தாக்குகின்றன. ஆகவே தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கு அவற்றின் மதிப்பிடற்கரிய விவரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றி்ல் முன் மொழியப்பட்டிருக்கும் நடைமுறைத் திட்டங்கள் யாவும் – நகரத்துக்கும் கிராமப்புறத்துக்குமுள்ள பாகுபாட்டையும், குடும்ப அமைப்பையும், தனியாட்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்தப்படுவதையும், கூலியுழைப்பு முறையையும் ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரகடனம் செய்தல், அரசின் செயற்பாடுகளைப் பொருளுற்பத்தியை மேற்பார்வையிடுதலாய் மட்டும் மாற்றிடுதல் ஆகிய இத்தகைய திட்டங்கள் யாவும் – வர்க்கப் பகைமைகள் மறைந்து போவதை மட்டும் குறிப்பனவாய் இருக்கின்றன. இந்த வர்க்கப் பகைமைகள் அக்காலத்தில் அப்போதுதான் தலைதூக்கிக் கொண்டிருந்தன, இவற்றின் ஆரம்பக்காலத்துக்குரிய தெளிவற்ற, வரையறை செய்யப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகள் இவற்றைக் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த முன்மொழிவுகள் முற்றிலும் கற்பனாவாதத் தன்மையனவாகவே இருக்கின்றன.
விமர்சன – கற்பனாவாத சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர்விகிதச் சார்புறவு கொண்டதாகும். நவீன கால வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று திட்டவட்டமான உருவம் பெறுகிறதோ, போராட்டத்திலிருந்து கற்பிதமாய் விலகி நிற்பதும், கற்பிதமாய் அதனைத்தாக்குவதும் அந்த அளவு நடைமுறை மதிப்பையும் தத்துவார்த்த நியாயத்தையும் முற்றும் இழந்து விடுகின்றன. ஆகவே, இந்த அமைப்புகளின் மூலவர்கள் பல விதத்திலும் புரட்சிகரமானோராய் இருந்திருப்பினுங் கூட, இவர்களது சீடர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெறும் பிற்போக்குக் குறுங்குழுக்களாகவே அமைந்திருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்று வழி வளர்ச்சிக்கு எதிராய், அவர்கள் தமது ஆசிரியர்களுடைய மூலக் கரூததுக்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் வர்க்கப் போராட்டத்தை மழுக்கடிக்கவும் வர்க்கப் பகைமைகளுக்கு இணக்கம் காணவும் முயலுகின்றனர். அதுவும் முரணின்றி முறையாய் முயலுகின்றனர். தமது கற்பனாவாத சமூகத்திட்டங்களைச் சோதனை முயற்சிகள் மூலம் சி்த்தி பெறச் செய்யலாமென்று, தனிப்பட்ட சில “பலான் ஸ்டேர்களையும்”, “உள்நாட்டுக் குடியேற்றங்களையும்”, “சிறு ஐகேரியாவையும்” (*) புதிய ஜெருசலத்தின் இந்தக் குட்டிப்பதிப்புகளை – அமைத்திடலாமென்று இன்னமும் கனவு காண்கிறார்கள். இந்த ஆகாயக் கோட்டைகளை எல்லாம் சித்தி பெறச் செயற்வதற்காக இவர்கள் முதலாளிமார்களது பரிவு உணர்ச்சியையும் பணத்தையும் எதிர்பார்த்து வேண்டுகேள் விடுக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. படிப்படியாய் இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டுகளது பிரிவுக்குத் தாழ்ந்து விடுகிறார்கள். இவர்களது பகட்டுப் புலமை அதிகமாய் முறைப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது என்பதும், இவர்கள் தமது சமூக விஞ்ஞானத்தின் அதிசய சக்தியில் வெறித்தனமான மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்பதும்தான் மேலே விவரிக்க்ப்பட்டோருக்கும் இவர்களுக்குமுள்ள ஒரே வித்தியாசம்.
எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் எந்த அரசியல் நடவடிக்கையையும் கடுமையாய் எதிர்க்கின்றனர். புதிய வேதத்தில் குருட்டுத்தனமாய்க் கொண்டுள்ள அவநம்பிக்கையின் விளைவாகவே இம்மாதிரியான நடவடிக்கை எழுகிறதெனக் கருதுகின்றனர்.
இங்கிலாந்தில் ஓவனியர்களும், பிரான்சில் ஃபூரியேயர்களும் முறையே சார்ட்டிஸ்டுகளையும் (38) La Reforme ஆதரவாளர்களையும் (39) எதிர்க்கின்றனர்.
தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை
இங்கிலாந்திலுள்ள சார்ட்டிஸ்டுகளையும் அமெரிக்காவிலுள்ள நிலச் சீர்திருத்தாளர்களையும் போல் தற்போதுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவு நிலை இரண்டாவது பிரிவில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
கம்யூனி்ஸ்டுகளின் தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்கள் சித்தி பெறுவதற்காக, உடனடி நலன்கள் நிறைவேற்றம் பெறுவதற்காகப் போராடுகிறார்கள்; ஆனால் தற்காலத்திய இயக்கத்தில் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து பேணிப் பாதுகாக்கின்றனர். பிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வரக்கத்தாருக்கு எதிராய் சமூக * ஜனநாயகவாதிகளுடன் (‘அக்காலத்தில் பாராளுமன்றத்தில் லெத்ரூ – ரொலேனும், இலக்கியத்தில் லுயீ பிளானும், 40 நாளேடுகளில் Reforme பத்திரிகையும் பிரதிநிதித்துவம் செய்த கட்சி. சமூக – ஜனநாயகம் என்னும் பெயர், அதைக் கண்டு பிடித்தவர் சோசலிஷச் சாயல் கொண்ட ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவைக் குறிப்பதாய் இருந்தது. (1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு,
பிரான்சில் அக்காலத்தில் தன்னை சமூக – ஜனநாயகக் கட்சி என்று அழைத்துக் கொண்ட கட்சியை அரசியல் வாழ்க்கையில் லெத்ரூ-ரொலேனும், இலக்கியத்தில் லுயீ பிளானும் பிரதிநிதித்துவம் செய்தனர்; இவ்வாறு அது இன்றைய ஜெர்மன் சமூக – ஜனநாயகத்திடமிருந்து வெகுவாய் வேறுபடுவதாய் இருந்தது, (1890ம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு,)) கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள்; ஆனால் மாபெரும் புரட்சியிடமிருந்து மரபு வழியில் வந்துள்ள தொடர்கள் குறி்த்தும் பிரமைகள் குறித்தும் விமர்சனப் பார்வை கொண்ட ஒரு நிலையை ஏற்பதற்கான உரிமையை விட்டு விடாமல் தம் கையில் வைத்திருக்கிறார்கள்.
போலந்தில் தேச விடுதலைக்கு விவசாய நிலவுடைமையிலான புரட்சி தலையாய முன்நிபந்தனையென வற்புறுத்தும் கட்சியை, 1846ம் ஆண்டு கிராக்கோவ் எழுச்சியை உசுப்பிவிட்ட கட்சியை அவர்கள் ஆதரிக்கிறார்கள். 41
ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கம் எதேச்சாதிகார முடியாட்சியையும் பிரபுத்துவ நிலவேந்தர் அமைப்பையும் பிற்போக்குவாதக் குட்டி முதலாளித்துவப் பகுதிகளையும் எதிர்த்துப் புரட்சிகரமாய்ச் செயல்படும் போதெல்லாம், அவர்கள் அதனுடன் சேர்ந்து நின்று போராடுகிறார்கள்.
ஆனால் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள தீராப் பகைமை குறித்து கணப்பொழுதும் ஓயாமல் அவர்கள் சாத்தியமான முழு அளவுக்குத் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டுகிறார்கள்; முதலாளித்துவ வர்க்கம் தனது மேலாண்மையுடன் கூடவே தவிர்க்க முடியாதபடி கொண்டு வந்தாக வேண்டியிருக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை ஜெர்மன் தொழிலாளர்கள் அப்படியே நேரே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஆயுதங்களாய்ப் பயன்படுத்தும் பொருட்டும், ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்கள் வீழ்ச்சியுற்றதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் உடனடியாகவே ஆரம்பமாகிவிடும் பொருட்டும் அவர்கள் இப்படித் தொழிலாளர்கள் உணர்வூட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் பிரதானமாய் ஜெர்மனியிடம் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள்.ஏனெனில் ஜெர்மனியானது முதலாளித்துவப் புரட்சி நடைபெறும் தருவாயில் இரூக்கிறது; இங்கு இந்த முதலாளித்துவப் புரட்சி ஐரோப்பிய நாகரிகம் அதிகம் முன்னேறியிருக்கும் நிலைமைகளிலும், பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிலும் இரூந்ததைக் காட்டிலும் மிக அதிக வளர்ச்சி பெற்றுள்ள ஒரு பாட்டாளி வர்க்கம் இருந்து வரும் சூழலிலும் நடைபெறவிருக்கிறது என்பதுடன், ஜெர்மனியில் முதலாளித்துவப் புரட்சியானது அதை உடனடியாகவே பின்தொடரும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒத்திசைவே ஆகும்.
சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் நிலவரங்களது அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிப்பவர்கள் ஆவர்.
இந்த இயக்கங்கள் யாவற்றிலும் அவர்கள் சொத்துடைமைப் பிரச்சனையை, இதுவரை அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தலைமையான பிரச்சனையாய் முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள்.
முடிவில், எல்லா நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளது ஒற்றுமைக்காகவும் அவற்றினிடையிலான உடன்பாட்டுக்காகவும் அவர்கள் பாடுபடுகிறார்கள்.
முடிவில், எல்லா நாடுகளையும் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளது ஒற்றுமைக்காகவும் அவற்றினிடையிலான உடன்பாட்டுக்காகவும் அவர்கள் பாடுபடுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடி மறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும், அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஔிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று, பாட்டாளிகள் தமது அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது.
☭☭☭☭ உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்! ☭☭☭☭
பதிப்பாசிரியர் குறிப்புகள்…
1.
2.
3.
4.
.
.
.
32. (இங்கு குறிக்கப்படுவது பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தல் சீர்திருத்தம். இதற்கான சட்டம் 1831 இல் காமன்ஸ் சபையால் நிறைவேற்றப்பட்டு, முடிவில் 1832 ஜுனில் திருத்தம் நிலமுடைத்த, நீதித்துறைப் பிரபுக் குலத்தால் வகித்த அரசியல் ஏகபோகத்துக்கு எதிரானதாகும். பாராளுமன்றத்தினுள் தொழில் துறை முதலாளித்துவ வர்க்கம் இடம் பெறுவதற்கு இது வகை செய்தது. இந்தச் சீர்திருத்தத்துக்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தாரும் குட்டிமுதலாளித்துப் பகுதியோரும் உந்து விசையாய்ச் செயல்பட்டனர். ஆனால் மிதவாத முதலாளித்துவ வர்க்கம் இவர்களை ஏமாற்றி, தேர்தல் உரிமைகள் பெற முடியாதபடி தடுத்துவிட்டது).
33.