கரும்புக்கு ரூ. 4000 /- விலை வழங்கிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்)-ன் மாநிலக்குழு கூட்டம் நவம்பர் 17, 18, 19 தேதிகளில் கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில் இன்று (19.11. 2013) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :-

ஒரு டன் கரும்புக்கு ரூ. 4000 /- விலை வழங்கிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்:

மத்திய அரசு தொடர்ந்து டீசல் விலையை உயர்த்தி வருவதாலும், உரத்தின் விலைக்கான கட்டுப்பாடுகளை நீக்கி சம்மந்தப்பட்ட உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கியதன் காரணமாக உரத்தின் விலை  தொடர்ந்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு இடுபொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள கரும்புக்கு உண்டான கொள்முதல் விலை விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது. எனவே, மத்திய அரசும், மாநில அரசும் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 4000/- விலை தீர்மானித்திட வேண்டும்.

மத்திய அரசு- சர்க்கரை இறக்குமதியை தடை செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்:

இந்தியாவில் உற்பத்தியான சர்க்கரை சுமார் 80 லட்சம் டன் தேங்கியுள்ள நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவால் உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை தடை செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த ...

Leave a Reply