கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனை: மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாநிலம் முழுவதுமுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோழி வளர்ப்பு கூலியை ரூ.3லிருந்து 16 ஆக உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் கோழிப்பண்ணையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவின் அடிப்படையில் கடந்த 18 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16.08.2013 லிருந்து போராடி வரக்கூடிய சங்கப் பிரநிதிகளுக்கும் கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக கூலி உயர்வு கோரி ஜனநாயகப் பூர்வமாக பலகட்ட போராட்டம் நடைபெற்றுள்ளது. கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் இதுவரை முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்பதோடு இவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராடும் கறிக்கோழி விவசாயிகள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண தமிழக அரசு  தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply