கல்விக் கூடங்களில் பாஜகவின் அரசியல் திணிப்பு

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பாஜக அதன் அரசியலை வலிந்து கல்விக் கூடங்களில் திணிக்கும் முயற்சியினை அம்பலமாக்குகிறது. அந்த அமைச்சரகம் டிசம்பர், 25-ந் தேதி (கிறிஸ்துமஸ் விடுமுறை தினம்) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகா சபாவின் தலைவராக இருந்த மதன்மோகன் மாளவியா ஆகியோரது பிறந்த தினமாகிய அன்று மத்திய அரசின் கீழ் நடத்தப்படும் நவோதயா பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. டிசம்பர் 24, 25 தேதிகளில் அந்த கட்டுரைப் போட்டி நடைபெறும்; அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார். அதை “நல்ல நிர்வாக நாள்” என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் எந்த நேரத்திலும் இந்த ஆணை பிறப்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட விடுமுறை தினத்தன்று பள்ளிகளை திறந்து வைத்து பாஜகவின் இத்துத்வா அரசியல் முடிவினை செயல்படுத்த பள்ளிகளை நிர்ப்பந்திப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

இது பள்ளிகளின் கிறிஸ்துமஸ் விடுமுறை (டிசம்பர் 23லிருந்து துவங்கும்) காலத்தை சிதைக்கும் மோசமான தலையீடு மட்டுமின்றி கிறிஸ்துவ சமூகத்தினரின் மத உரிமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

இந்த சுற்றறிக்கையினை உடனடியாக மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. டிசம்பர் 25 ஐ “நல்ல நிர்வாக நாள்” கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பினால், அதை பள்ளிகளை எந்த வகையிலும் இணைக்காமல் செயல்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தையும் கட்சி முன்வைக்கிறது.

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...