கல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

புதுதில்லி, ஜூலை 30-

மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சரவை, புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள வளர்ச்சித்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசாங்கங்களும் அளித்த ஆட்சேபணைகளையும் எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிவிட்டு, ஒருதலைப்பட்சமாகத் திணித்திருப்பது, அரசமைப்புச்சட்டத்தை ஒட்டுமொத்தமாக மீறும் செயலாகும்.

இதுபோன்ற வடிவத்தில் வரும் புதிய கொள்கை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு விவாதிக்கப்படும் என்று அரசாங்கம் முன்பு வாக்குறுதி அளித்திருந்தது. இதன் வரைவு, அரசின் நெறிமுறைகளின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இவற்றின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் திருத்தங்களை/ஆலோசனைகளை அளிக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிச்சயத்து தாக்கல் செய்யப்பட வேண்டும். இதில் நாடாளுமன்றம் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் வரைவு, பொது வெளியில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் மூலம் கல்வியுடன் இணைந்த அனைத்துத்தரப்பினரின் ஆலோசனைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பல அறிவுஜீவிகளும் தங்கள் கருத்துக்களை அனுப்பி இருந்தார்கள். ஆயினும் இவை எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்தியக் கல்வி அமைப்பை மிகப்பெரிய அளவில் மத்தியத்துவப்படுத்தும், மதவெறிக்கு உள்ளாக்கும் மற்றும் வணிகமயப்படுத்தும் இந்தப் புதியக் கல்விக் கொள்கை, நாட்டின் கல்வி அமைப்பை ஒழித்துக்கட்டிவிடும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பாஜக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. அரசியல் தலைமைக்குழு இதன் அமலாக்கம் தொடங்குவதற்கு முன்னர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...