கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

02.06.2017

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

 

தமிழின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், சாகித்ய அகதமி விருதுபெற்றவருமான கவிக்கோ அப்துல் ரகுமான் வியாழன் அன்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் அஞ்சலி செலுத்துகிறது.

பால்வீதி, நேயர் விருப்பம், ஆலாபனை உள்ளிட்ட ஏராளமான நூல்களை அவர் எழுதியுள்ளார். வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய அவர் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா மாநாடு உட்பட தமுஎகசவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். தன்னுடைய கவிதைகளில் மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்திய அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும்  ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...