காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் மீது கொலைவெறித் தாக்குதல்!

சிஐடியுவின் தமிழ்நாடு மாநிலக்குழு தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., அவர்கள், “காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தலைவர்களை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், சிஐடியு தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், கொலை மிரட்டல் விடுத்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை விசாரிக்க வேண்டுமென” வலியுறுத்தி நேற்று (30.3.2013) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடம் நேரில் அளித்துள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. இதே கடிதம் தமிழக டி.ஜி.பி. அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

/ஒப்பம்/

(. சவுந்தரராசன் எம்.எல்..,)

சட்டமன்றக்குழுத் தலைவர் – சிபிஐ (எம்)


30.03.2015

பெறுதல்:

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

அன்புடையீர்! வணக்கம்.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்தது. இங்கே 320 நிரந்தர ஊழியர்கள் உறுப்பினராக உள்ளனர். எங்களுடைய சங்கம் அங்குள்ள ஒரே சங்கமாகும்.

சங்கம் ஆரம்பித்த போதே கடுமையான மிரட்டல் மற்றும் தாக்குதல்களில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டது. நீண்ட சட்டப்படியான போராட்டங்களுக்கு பிறகே சங்கத்தோடு நிர்வாகம் தொழிலாளர்துறை முன்பு பேச்சுவார்த்தைக்கே வந்தது.

இந்த மருத்துவமனையில் அரசு சட்டப்படி நிர்ணயித்திருக்கிற குறைந்தபட்சக் கூலியே வழங்கப்படாமல் இருந்தது. சம்பள பட்டியல் ரசீது கூட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. சட்டப்படி பிடித்தம் செய்யப்படுகிற வைப்பு நிதி நம்பகத்திற்கு செலுத்தாமலும் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இதில் எல்லாம் எங்களது சங்கம் சட்டப்படியாக எடுத்த நடவடிக்கை காரணமாக நிர்வாகம் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் முத்துக்குமாரையும், சங்க நிர்வாகிகளையும் தொடர்ந்து அச்சுறுத்தியும், மிரட்டியும் வந்தது.

குறைந்தபட்சக் கூலி வழங்கப்படாத காலத்திற்கு பின்தேதியிட்டு பாக்கித் தொகையோடு அவற்றை வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டு வழக்கு முடியும் நிலையில் உள்ளது.

எங்களது சங்கத்தின் செயலாளர் திரு. கே. பாஸ்கர் அவர்களையும், நிர்வாகி ஜெகன் அவர்களையும் மருத்துவமனையிலேயே நிர்வாகத்தின் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் கொலை மிரட்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் 23.3.2015 அன்று காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திரு. கே. பாஸ்கர் வேலைக்குச் செல்லும் போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். தலையிலும், உடம்பிலும் காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 26.3.2015 அன்று தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் அன்றைய தினம் காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர் முறையீடுகளுக்கு பிறகே 27.3.2015 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் நிர்வாகத்தின் மூலம் அந்தச் சங்கத்தின் தலைவரும், சிஐடியு மாவட்டக்குழுவின் செயலாளருமான இ. முத்துக்குமாருக்கும் இதர நிர்வாகிகளுக்கும் ஆபத்து உள்ளது என அஞ்சுகிறோம்.

எனவே தாங்கள் நிலைமையின் தீவிரம் கருதி திரு. கே. பாஸ்கரை தாக்கிய சமூக விரோதிகளை கைது செய்வதோடு, மருத்துவமனை நிர்வாகத்தையும் விசாரித்து எங்களது அச்சத்தை போக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எங்கள் சங்க நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுகிறேன். இத்துடன் 29.3.2015 தேதிய இ. முத்துக்குமார் அவர்கள் காவல்துறை, காஞ்சிபுரம் மாவட்ட, கண்காணிப்பாளர் அவர்களுக்கு வழங்கிய கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

தங்களன்புள்ள,

/ஒப்பம்/

(. சவுந்தரராசன் எம்.எல்..,)

சட்டமன்றக்குழுத் தலைவர் – சிபிஐ (எம்)

பெரம்பூர் தொகுதி

Check Also

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு ...