காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக !

பண்டிகை காலம் நெருங்கி வரும் பல காரணங்களால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் காய்கறி விலைகளும் உயர்ந்திருக்கின்றன. கொரோனா தொற்றின் காரணமாக பெருளாதாரமும், தனி மனிதர்களின் வருமானமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மிகப்பெரும் சுமையாக ஏழை,எளிய , நடுத்தர மக்களை பாதிக்கும்.

எனவே, உரிய முன்னெச்சரிக்கையுடன் வெங்காயம் உட்பட காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.

அறிவிப்புகளாலும், ஆணைகளாலும் மட்டும் விலைவாசியை குறைத்துவிட முடியாது. மாறாக, கேரள மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மாவேலி ஸ்டோர் என்னும் கடைகளின் மூலம் அரசே குறைந்த லாபத்தில் கடைகளை நடத்தி மக்களை துயர சுமையிலிருந்து பாதுகாத்து வருவது போல தமிழக அரசும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், தடையில்லாமல் கிடைப்பதற்கும் ரேசன் கடைகள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நடமாடும் கடைகள் மூலம் இந்த பொருட்களை விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...