காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

காவிரி நதிநீர்ப்பிரச்சனை குறித்து 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. 5 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.  கடந்த ஆண்டு இறுதியில் நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வலியுறுத்திய போது, டிசம்பர் இறுதிக்குள் வெளியிடுவோம் என மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் அறிவித்தார். ஆனால், அது நடக்கவில்லை. மீண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. 2-வது முறையும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலை அமலாக்கவில்லை.
 
தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும், தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிடவில்லை.  இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தையே 5 ஆண்டு காலமாக மீறி வருகிறது என மத்திய அரசை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்ததோடு,  பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்குள் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.  எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply