கீழ்வேளூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கீழ்வேளூர் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்…

 1. வேளாண்மை கல்லூரி  அமைத்திட
 2. கீழையூர் மக்கள் பயன்பாட்டிற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி க்கிளை அமைத்திட
 3. வேளாங்கண்ணி கடற்கரையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் நலன் கருதியும் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்திட, தூண்டில் வளைவு தடுப்பு அமைத்திட
 4. வேளாங்கண்ணி கீழ்வேளூர் பேரூராட்சிக்கு 100 நாள் வேலையை கொண்டு வந்திட
 5. தொகுதியில் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா பெற்றுத்தந்திட
 6.  கீழ்வேளூரில் காகித தொழிற்சாலை அமைத்திட
 7. அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்தை நவீனமயமாக்கிட
 8. திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து, சுற்றுலா தலமாக அறிவித்திட
 9. நாகை பரவை காய்கறி சந்தையில் வியாபாரிகளை நஷ்டத்திலிருந்து பாதுகாத்து, காய்கறி குளிரூட்டல் பெட்டகம் வசதி ஏற்படுத்திட
 10. கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தோர் அனைவருக்கும் கான்க்ரீட் வீடு கட்டிட
 11. தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்திட
 12. போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் மாணவ மாணவிகளுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்திட
 13. மாம்பழம் அதிகம் விளையும் பகுதியில் மாம்பழம் கூழ் தொழிற்சாலை அனைத்து காலங்களிலும் இயங்க வழிவகை செய்திட

வாக்களிப்பீர்
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் 

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related