குமரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு 17.10.2016 காலை ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை
வஞ்சிக்கும் மத்திய அரசைக்ககாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது எனக் கூறி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து 17-10-2016 காலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில்
மறியலை மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு கொடுக்க முடிவு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலளார் என்.முருகேசன்ம மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, விடுதலைசிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:

காவிரி நதி நீர் பிரச்சனையில் அக்டோபர் 4-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்சநீதிேன்றம் தீர்ப்பளித்தது.ஆனால் அக்டோபர் 3-ம் தியதி மத்திய அரசு உச்சநீதிேன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “காவிரி மேலாண்மை வாரியத்னத உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவி முடியாது” என்றும்
தெரிவித்தது. அரசியல் சட்டத்தின்படியும் உச்சநீதின்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நடுவர்மன்றம்
அமைக்கப்பட்து. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்னதயும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு இந்த கடமையை நினறடவற்ற தவறிவிட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்பிற்கு எதிராக செயல்படுகிறது. இது தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க அரசு இனழத்துள்ள மிகப் பெரிய துரோகமாகும். எனவே தமிழத்தை பாதுகாக்க, தமிழக விவசாயிகளின்உரிமையை பெற்றிட ரயில் மறியல் போராட்டத்தில் மக்கள்நலக்கூட்டணி கட்சியினர் பெரும்திரளாக கலந்து கொள்வர்

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...