குமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம்

பத்திரிகை செய்தி
பண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. இதுபோல், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் விலைகட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 03.11.2015(செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் பெரும்திரள் ஆர்பாட்டம் நடைபெறும்.

ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மாவட்ட செயலாளர் என்.முருகேசன் தலைமை தாங்குகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என்.தில்லை செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் ப.பகலவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்பாட்ட போராட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றுகிறார்.

என்.முருகேசன்
மாவட்ட செயலாளர்.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...