கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 

கூட்டுறவு சங்கத் தேர்தலுகளுக்கான வேட்பு மனுத் தாக்கல வெள்ளியன்று தொடங்கிய போது சில இடங்களில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் மற்ற கட்சியைச் சார்ந்தவர்களை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அதிகாரிகள் வேட்பு மனுவை வாங்க மறுத்துள்ளனர். சில இடங்களில் வேட்பு மனுக்களைக் கொடுக்கவும் வாக்காளர் பட்டியலைக் காண்பிக்கவும் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மறுத்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற போது சமயநல்லூரில் ஆளுங்கட்சி பிரமுகர் வேட்பு மனுவை பறித்துச் சென்றுள்ளார். 

தேனி, தஞ்சை, மதுரை, கரூர் என்று மாநிலத்தில் பலவேறு பகுதிகளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் இத்தகைய வன்முறைகளும் அராஜகங்களும் நடைபெற்றதன் காரணமாகவே கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போதும் அதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணானது. கூட்டுறவுத் தேர்தல்களை நடத்த தனி ஆணையம் ஏற்படுத்தப்பட்ட பிறகும் இத்தகைய முறைகேடுகள் தொடர்வது நியாயமற்றது. 

எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு முறைகேடுகளுக்கும் அராஜகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தவறிழைத்த ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply