கூலிப்படைகளை பிடிக்காத காவல்துறை போராடுபவர்களை தாக்குவதா?

கோவையில் நடைபெற்று வரும் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டத்தின் பத்திரிகையாளர்களைச் சந்திப்பின்போது:-

தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது, கூலிப்படைகளை பிடிக்காமல் ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது தாக்குதலை தொடுக்கிறது.

கடந்த மூன்றாண்டு கால பாஜக ஆட்சியில்  அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது.  இதில் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்து இருக்கின்றது. குறிப்பாக நீட் தேர்வு, உதய் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும்,  நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மத்திய மோடி அரசு  மாடுகளை விற்க விதித்துள்ள தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை.  மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மாநில அரசு விமர்சிப்பதில்லை, அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக காலுன்ற பார்க்கின்றது. தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி பல்வேறு துறைகளில்  பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது, சட்டம் ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மாற்றுக் கருத்தை மதிக்கும் பண்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு இல்லை, ஐஐடியில் தாக்குதலுக்குள்ளான சூரஜ் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து காவல் துறைஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது, தாக்கப்பட்ட சூரஜ் மீது போடப்பட்ட  வழக்கை வாபஸ் பெற வேண்டும். சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாணவரின் கையை முறிக்கும் காவல் துறை, கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றது.

ஜி.ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...