கொச்சி மெட்ரோ 5 தனித்துவமான முயற்சிகள் – ஓரடி முன்னால் பயணிக்கும் இடதுசாரி மாற்று

45 மாதங்களில் முடித்த சாதனை: மும்பை மெட்ரோ 11 கி.மீ கட்டமைக்க 75 மாதங்கள் ஆகின. சென்னை 4 கி.மீ கட்டமைக்க 72 மாதங்கள் ஆகின. தில்லி, ஜெய்ப்பூர், பெங்களூர் அனைத்தைக் காட்டிலும் விரைவாக முடித்த கட்டுமானம்.

பசுமையில் அக்கறை:  மெட்ரோ ரயில் திட்டத்தின் மின்சாரத் தேவைகளில் 25 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பயன்படுத்தப்படுகிறது. 23 ஸ்டேசன்களில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் 2.3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நகராட்சி குப்பைக் கிடங்கிலிருந்து உரம் தயாரித்து தோட்ட வளர்ப்பு.

இலவச சைக்கிள்: ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேசனிலும் பயணியர் கட்டணமில்லாமல் சைக்கிள்கள் எடுத்து, நகரத்தை சுற்றலாம்.

மாற்றுப் பாலினத்தார் 60 பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்த ஒரே அரசாங்க நிறுவனம்.

80 சதவீதம் பெண்களைக் கொண்ட முதல் மெட்ரோ நிறுவனமாக, கொச்சி மெட்ரோ அமையும்.

10 தீவுகளை இணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ திட்டம் ரூ.819 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. அதன் முதல் கட்டுமானம் 2018 இல் திறக்கப்படும். படகுப்பயண வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...