கொரோனா வைரசுக்கு எதிராக… நாளை மக்கள் ஒற்றுமை தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

புதுதில்லி, மார்ச் 20- வரும் மார்ச் 22ஆம் தேதியன்று கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் ஒற்றுமை தினமாக அனுசரித்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக் குழு வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத் தின் மக்கள் ஒற்றுமை தினமாக மார்ச் 22 ஆம் தேதியை அனுசரித்திட வேண்டும் என்று மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும், பிரதமர் இந்தப் போராட்டத்தின் சுகா தார மற்றும் பொருளாதார அம்சங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து எது வும் கூறவில்லை. மேலும் அவற்றைக் கட்டுப்படுத் திட அரசாங்கம் எவ்விதமான உருப்படியான நட வடிக்கைகளையும் முன்மொழிந்திடவுமில்லை. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்ச் 22 அன்றைய தினத்தை கீழ்க்கண்ட கோரிக் கைகளுக்கான தினமாக அனுசரித்திட வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று இருக்கி றதா என்று விரிவாக மக்கள் பிரிவினர் மத்தி யில் பரிசோதனைகள் செய்திட வேண்டும். குறிப்பாக ஜலதோஷம், காய்ச்சல், இரு மல் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர் கள் கட்டாயமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட வேண்டும்.

இலவசமாகப் பரிசோதனை, மருத்துவ வசதிகள், தனிமை வார்டுகள் (isolation wards), வெண்டிலேடர்கள் (ventilators) போன்றவை போதுமான அளவிற்கு இருக்கக்கூடிய விதத்தில் பொது சுகா தார அமைப்பு வலுப்படுத்தப்பட போது மான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக வரு வோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப் பட வேண்டும்.

அனைத்து ‘ஜன் தன்’ கணக்குகளுக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனை வருக்கும் ஐயாயிரம் ரூபாய் ரொக்கப் பரி மாற்றம் செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி அளித் திட வேண்டும்.

புலம்பெயர்ந்து வந்தவர்கள் உட்பட அனைவருக்கும் பொது விநியோக முறை மூலமாக ஒரு மாதத்திற்கு இலவச ரேசன் வழங்கிட வேண்டும். இவற்றிற்கு இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் வீணா கிக் கொண்டிருக்கும் 7.5 கோடி டன் உணவு தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான வேலை நாட்களை ஆண்டுக்கு 150 ஆக உயர்த்த வேண்டும். வேலை தேடி வரும் அனை வருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.

பொது விநியோக முறையை விரிவாக்கி, வலுப்படுத்திட வேண்டும். அனைத்து அத்தி யாவசியப் பொருள்களையும் பொது விநி யோக முறையில் வழங்கிட வேண்டும். 

பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்திற்குப் பதிலாக, அக்குழந்தைகளுக்கு உதவு வதற்காக அக்குழந்தைகளின் வீடுகள், குடும்பங்களுக்கு தேவையான ரேசன் பொருட்கள் அளித்திட வேண்டும்.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட துறை களுக்கு நிதி உதவிகள் செய்திட வேண்டும். இவ்வாறு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் கதவடைப்பு செய்து தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிடக் கூடாது. அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தத் தொழிலாள ரையும் பணிநீக்கம் செய்திடக் கூடாது.

முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருந்து வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி/ஊதி யங்கள் வழங்கிட ஒரு நிதியம் ஏற்படுத்திட வேண்டும்.

கொரோனா வைரசால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும்.

கொரோனா வைரசால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கூறியுள்ளது. 

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...