கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் காவல்துறையினர் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாய் சென்று டவுன்ஹால் அருகில் இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்கச் சொல்லி முழக்கங்களை எழுப்பி அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசி கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தை அடுத்து கோவையின் அமைதியை பாதுக்க வேண்டும் என்கிற உணர்வோடு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் பாதிக்கப்பட்ட வியாரிகளை சந்தித்து ஆறுதலையும், நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அமைதி திரும்பியுள்ள கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக, தோல்வி பயத்தில் மீண்டும் கலவரம் ஏற்படுத்த சங்பரிவார அமைப்புகள் முயற்சி மேற்கொள்கிறது. கோவையின் அமைதியை பாதுகாக்க ஒன்றுபட்டு நின்று பாசிச சக்திகளை முறியடிப்போம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் இருதரப்பினர் மீது வழக்கு என்பதை ஏற்க முடியாது.

கற்களை வீசி கலவரம் ஏற்படுத்த முயற்சித்தவர்களை இங்குள்ளவர்கள் ஒன்றுபட்டு தடுத்துள்ளனர். இதன் காரணமாக பிரச்சனை பெரிதாகாமல் அமைதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதோடு, கலவரம் ஏற்படுத்த முயற்சித்தவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து கோவையின் அமைதி பாதுகாக்க வேண்டும் என்றார்.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் மூத்த தலைவர் என்.வி.தாமோதரன், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...