கோவை வழக்கறிஞர் தாக்கப்பட்​ட சம்பவம் குறித்து‍ – சிபிசிஐடி‍ விசாரணைக்கு‍ உத்தரவிடுக

கோவை, துடியலூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்   கோவையில், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் தனது கட்சிக்காரரின் வழக்கு சம்பந்தமாக துடியலூர் காவல்நிலையம் சென்று அங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அவருக்கு முறையான பதிலளிக்காமல் அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்ளிட்டு 5 காவலர்கள் ஆனந்தீஸ்வரனை லத்தி மற்றும் ஹாக்கி மட்டையால் அடித்ததோடு பூட்ஸ் காலாலும் மிதித்துள்ளனர்.  இதன் விளைவாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்ட செய்தியறிந்த வழக்கறிஞர்கள் துடியலூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக காவல்துறை அதிகாரிகள் 5 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துடியலூர் காவல்துறை அதிகாரிகளின் அத்துமீறிய இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்டு 5 தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்யப்படுவதுடன், இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.  

காவல்துறையினர் பரமக்குடியில் நடத்திட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்ளிட்டு பல இடங்களில் வரம்பு மீறி செயல்பட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கோவையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் ஆகும். காவல்துறையினரின் அத்துமீறிய செயலை உடனடியாக தடுத்து நிறுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. (ஜி. ராமகிருஷ்ணன்) மாநிலச் செயலாளர் 

Check Also

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

Leave a Reply