சங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான தோழர் பினராயி விஜயனை குறிவைத்து பெயரிடப்படாத திரிக்கப்பட்ட வாட்சாப் செய்திகள், சங்கி அடிமைகளால் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பரப்படுகிறது. இந்தச் செய்திகள் பரப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் கோபத்துடன் எதிர்வினையாற்றுகிறார்கள், சைபர் செல் விசாரணையும் நடவடிக்கையும் கோரி புகார் செய்கிறார்கள்.

1971 ஆம் ஆண்டு தலசேரி நடைபெற்ற கலவரத்தில் பினராயி விஜயன் மீது குற்றம்சாட்டி மத வெறுப்புக் கொண்ட மொழியில் வகுப்புவாத நோக்கம் கொண்ட செய்திகளை பரப்புகின்றனர். அந்த சமயத்தில், பினராயி விஜயன் அந்த தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அந்த கலவரத்தை தடுப்பதில் முன்னணியில் நின்று செயல்பட்வர் அவர். அந்தக் கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் விதயில் ஆணையம் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டது. “ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் தங்கள் கிளைகளை அமைத்த பிறகுதான் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது” என சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வகுப்புவாத வெறித்தூண்டல் பிரச்சாரத்தை விவரிக்கிறது. மேலும் அந்த அறிக்கையில் “மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு தலைவர் கூட கலவரச் செயல்களில் ஈடுபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை” என்கிறது…

கலவரம் பரவுவதை தடுப்பதைத்தான் கம்யூனிஸ்டுகள் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒரு மசூதியை தாக்குவதற்காக வந்தபோது தடுத்து நின்ற குன்னிராமன் என்ற முன்னணி தோழர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது கேரளாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த அஜித் தோவல், பினராயி விஜயனை கைது செய்ததாகவும் கூட சங்கிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொய், பொய்களே சங்கிகள்.

இந்தியா முழுவதும் மாநில அரசுகளை கவிழ்க்க முடிகிறது. பாஜக – ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை எதிர்த்து வீழ்த்துவதில் உறுதியாக உள்ள கட்சியையும், மக்கள் நலனை முதன்மையாக கருதிச் செயல்படும் அரசாங்கத்தையும் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.

மோடி அரசாங்கம் அல்ல, பாஜக தலைமையிலான எந்த அரசாங்கமும் அல்ல, பினராயி விஜயன் தலைமையில் இயங்கும் இடது ஜனநாயக அரசு மட்டுமே சர்வதேச அளவில் அங்கீகாரத்தை குவித்து வருகிறது. இதனால் பாஜகவினர் விரக்தியில் இருக்கிறார்கள்.

மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...