சங்பரிவாரின் அட்டூழியம் தோழர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

7-6-2017

சங்பரிவாரின் அட்டூழியம்

தோழர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயற்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்பரிவாரின் வழக்கமான கோழைத்தனங்களைப் போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர் போர்வையில் நுழைந்து தோழர் சீத்தராம் யெச்சூரியை தாக்கியுள்ளனர். தத்துவார்த்த ரீதியாக அம்பலப்பட்டுப் போயிருக்கும் சங்பரிவார், விமர்சனங்களை முன்வைப்பவரை நேரடியாக தாக்குவது அவர்களின் அவக்கேடான வரலாறாக இருக்கிறது.

மகாத்மா காந்தி, கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் என்று மாற்றுக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரையும் அவர்களது கருத்தை எதிர்கொள்ள முடியாததால் கொலைசெய்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்போது தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சங்பரிவாரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சாதாரண உறுப்பினர் கூட அஞ்சமாட்டார்கள். இன்னும் வேகத்துடனும், வீரியத்துடனும் சங்பரிவாரின் நாசகர கொள்கைகளையும், குணத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் அம்பலப்படுத்துவார்கள்.

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அமைப்புகளும் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக கண்டன இயக்கங்களை வலுவாக நடத்திட வேண்டுமெனவும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் சங்பரிவாரின் இந்த அவக்கேடான செயலை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஐநா சபை வாக்கெடுப்பு : இலங்கை தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் துரோகம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் !

இலங்கையில் நீண்டகாலமாகவும், இறுதிக்கட்ட போரின் போதும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித ...