சாந்தன், முருகன், பேரறிவாளன் மீதான மரணதண்டனை ரத்து சிபிஐ(எம்) வரவேற்பு!!

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் ஏற்கனவே நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியிருந்தது. இந்த மரண  தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று மூவரும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இவர்கள் மீதான மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்துள்ளது. மேற்கண்ட மூவர் மீதும் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply