சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடித்திட வேண்டும் தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்!

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது. சிறந்த பாரம்பரிய மிக்கதும், ஏராளமான நிலம், சொத்துக்கள், நகைகள் மற்றும் அன்றாட பக்தர்களிடமிருந்து பெறப்படும் வருமானம் போன்ற அனைத்தையும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வாகிக்க வேண்டுமென நூறாண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் இழுத்தடித்து தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள பொது தீட்சிதர்கள் நீதிமன்றங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் பகுதியாக தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகள் மற்றும் சொத்துக்கள் பராமரிப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாகவும் அவைகளை முறைப்படுத்திட 1982ம் ஆண்டு தனி நிர்வாக அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கம் போல் இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் பல கட்ட வழக்குகள் நடந்து அரசின் உத்தரவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் தற்போது தீட்சிதர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு வழக்கு நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுக்கு வந்துள்ளன. இருப்பினும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்பிக்க மேலும் அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவ்வழக்கிற்கு அரசு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எனவே தற்போதுள்ள அவகாசத்தை பயன்படுத்தி கோயில் நிர்வாகத்தை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும் வகையில் அழுத்தமாக தனது வாதங்களை முன்வைக்க வேண்டுமென மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது. கோயில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் நீடிக்கும் போது தான் சொத்துக்கள், கோயில் பாரம்பரியம் போன்றவற்றை பாதுகாத்திட முடியும். மேலும் சுமார் 1000 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ள கலை சிற்ப கட்டுமானங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இயலும்.

கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் அதே நேரத்தில் தெய்வ வழிபாட்டு முறைகளை தீட்சிதர்களே மேற்கொள்ள வழியுள்ளதால் பொது தீட்சதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அரசு கணக்கில் கொண்டு – கோவில் நிர்வாகத்தை தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் நீடித்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply