சிபிஎம் கரூர் மாவட்ட மாநாடு உற்சாகத்துடன் துவங்கியது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட 7வது மாநாடு ஞாயிறன்று க.பரமத்தியில் தோழர்.ஆர்.உமாநாத் நினைவரங்கில் (கொங்கு நாடு திருமண மன்றம்) உற்சாகத்துடன் துவங்கியது. மாநாட்டிற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.இளங் கோவன், நந்தினி ஆகியோர் தலைமை வகித்தனர்.தோழர் பஞ்சப்பட்டி மாணிக்கத் தின் நினைவு ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் கே.துரைராஜ் பெற்றுக்கொண்டார்.

கட்சியின் மூத்ததலைவர் ஜி.ரத்தின வேலு செங்கொடியை ஏற்றிவைத்தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் து.ரா.பெரியதம்பி வரவேற்றுப் பேசி னார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், மோடி அரசு கல்விக்கு அளித்துவந்த நிதி யை குறைத்ததோடு கல்வியை தனி யாருக்கு தாரைவார்க்கும் பணியை செய்துவருகிறது. சுகாதாரம், உணவு பொருட்கள், விவசாயம் உள்ளிட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டிய மக்கள் நல திட்டங்களை முடக்கிடும் விதமாக அதன் நிதிகளை குறைப்பது, சலுகைகளை பறிக்கும் செயலை மோடி அரசு செய்துவருகிறது. அந்நிய நிறுவனங்களையும், முதலாளிகளையும் இந்தியாவில் தொழில்தொடங்க மோடி அழைக்கி றார். தொழில் தொடங்க நிலம் வேண்டும் என முதலாளிகள் கேட்கி றார்கள்.

அதற்கு இங்குள்ள விவசாயி களின் நிலங்களை எடுப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களை அந்நிய முதலாளிகளுக்கு ஆதரவாக செய்திடும் பணியை செய்துவருகிறார். நடுத்தரவர்க்க மக்கள் மோடியை நம்பிக்கையோடு கொண்டுவந்தனர். ஆனால் அந்த நடுத்தர மக்கள் தெருவில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்நிய நிறுவனங்களில் தொழிற்சங் கங்கள் தொடங்க அனுமதியில்லை, நிரந்தர பணியில்லை. கடும் விலைவாசி உயர்வு, ஊழல், வகுப்புவாதம், மதவெறி உள்ளிட்ட பல்வேறு செயல்களில் மத்தி யில் உள்ள மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு மக்களை பிளவுபடுத்தும் பணிகளைச் செய்து வருகிறது. தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முதல்வர் ஊழல் வழக்கில் கைது செய் யப்பட்டுள்ளார்.

நவீன தாராளமயம் வந்த பிறகு ஊழல் என்பது வாழ்க்கை நெறியாக மாறிவிட்டது. அரசியல் என்பது ஊழலுக்கானதாக மாறிவிட்டது. ஊழலில் ஈடுபட்டவர்க ளுக்கு முன்பு குற்ற உணர்வு இருக்கும். ஆனால் தற்போது அந்த உணர்வு இல்லை. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், ஆளும் பிஜேபி, தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக கட்சிகள் ஊழல் கட்சி களாகிவிட்டன. ஊழல் இல்லாத கட்சி, ஊழல் இல்லாத அமைச்சர்கள், தலைவர்கள் உள்ள கட்சி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான். ஊழலுக்கு எதிராக வும், கடும்விலைவாசி உயர்வு, அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், முத லாளிகளுக்கும் சலுகைகளை மக்கள் பணத்தில் செய்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், தலித்மக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான போராட்டம் நடத்திடும் என பேசினார்.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...