சுதந்திர தின எழுச்சியூட்டும் பாடல்களை குழந்தைகள் இனிமையாக பாடினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்த கொண்ட குழந்தைகளுக்கு தோழர் டி.கே. ரங்கராஜன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் சுதந்திர தின விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் 73வது சுதந்திர தின கொடியேற்றல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 
முன்னதாக கமலா இசைப்பள்ளியின் சார்பில் குழந்தைகளின் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின எழுச்சியூட்டும் பாடல்களை குழந்தைகள் இனிமையாக பாடினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை நிகழ்ச்சியில் கலந்த கொண்ட குழந்தைகளுக்கு தோழர் டி.கே. ரங்கராஜன் நினைவு பரிசுகளை வழங்கினார்.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...