சிறந்த நாடாளுமன்ற பங்களிப்பிற்கான விருது பெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு வாழ்த்துக்கள்

கடந்த 12 ஆண்டுகளாக தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மக்கள் நலனை, தேச நலனை பாதுகாப்பதில் அவரது பங்கு தனித்துவமானது, சிறப்பானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின் வழி நின்று, ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்காக, மதச்சார்பின்மைக்காக அவர் ஆற்றிய உரைகள் நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவை.

நாடு முழுவதும் வயல்களில், தொழிற்சாலைகளில், கிராமங்களில், நகரங்களில், கல்விச் சாலைகளில் நடைபெறும் போராட்டங்களின் குரலை, நாடாளுமன்றத்திற்குள் எதிரொலித்த அவருடை கர்ஜனை முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறப்பான நாடாளுமன்ற பங்களிப்பிற்காக விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள்.

ஜி.ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா? க.கனகராஜ்

தமிழகம் மின்மிகை மாநிலமா? அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா? அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா? நேற்று 20.7.20 ...