சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தேவையில்லை! காங்கிரஸ் முயற்சிக்குக் கண்டனம்!!

சிறுவாணி அணையின் மிகுநீரும் அதைத் தொடர்ந்து 15 கி.மீ வரையிலான நீர் பிடிப்புப்பகுதிகளில் சேருகிற மழைநீரும் சிறுவாணி ஆற்றின் வழியாகச் பவானி ஆற்றில் சேருகிறது. இவ்வாற்றின் குறுக்காக தமிழ்நாடு எல்லையிலிருந்து 22 கி. மீ தொலைவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் சிட்டூர் பள்ளத்தாக்கின் குறுக்காக 1980ம் ஆண்டுகளில் அணைகட்டுவதற்கான பணிகள் துவங்கிய போதும் தொடர்ந்து வந்த கேரளா மாநில அரசுகள் அதைத் தேவையற்றது என்று முடிவுசெய்தன.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணைப்பகுதியில் எந்தப்பணிகளும் நடைபெறவில்லை. மேலும் ஜப்பானிய நாட்டு நிதி உதவியுடன் ரூ. 219 கோடி செலவில் அந்தப் பகுதி வளர்ச்சிக்கான திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னித்தலா அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டு விட்டு, தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இந்த தடுப்பணை கட்டப்பட்டால் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். முந்தைய கேரளா அரசுகள் ஏற்கனவே தேவையில்லை என முடிவு செய்த ஒரு பிரச்சனையை மீண்டும் கிளப்பி விட்டு தடுப்பணை கட்ட வேண்டுமென அரசுக்குப் பரிந்துரைத்திருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே கேரள அரசு  தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட, மத்திய அரசு, கேரள மாநில அரசுக்கு அறிவுறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.  

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply