சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானம் 20-வது அகில இந்திய மாநாடு

 

இந்திய கம்யூனிட் கட்சி (மார்க்சிஸ்ட்)‌

20-வது அகில இந்திய மாநாடு

சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த தீர்மானம்

(2012ஏப்ரல் 04-09வரை கோழிக்கோட்டில் நடைபெற்றஅகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது)

I

அறிமுகம்

1. 1   1930-களின் பெருமந்தச் சூழலை விட கூடுதலான தீவிரத்துடன் பல விதங்களில் விளைவுகளை வெளிப்படுத்தி வரும் இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியானது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த ஒடுக்குமுறைத் தன்மையையும், சுரண்டல் இயல்பையும் மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி உலக மக்களில் விரிவான பெரும்பான்மையினரின் மீது அதிக அளவிலான துன்ப துயரங்களை சுமத்தியுள்ளது. தனது இருப்பையும், பங்களிப்பையும் மூடி மறைப்பதற்கு அனைத்து தத்துவார்த்த முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள போதிலும், மனித சமூகத்துக்கு எதிரான தாக்குதலில் உலக முதலாளித்துவ ஏகாதிபதியத்தியமே வழிநடத்திச் செல்கிறது என்பதை இந்த நெருக்கடி மேலும் அதிக அளவில் நிரூபித்து வருகிறது. இவ்வாறு உலக மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியத்தின் முயற்சியே மனித சமூகத்தின் முழுமையான சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை மறுப்பதற்கான மூலாதாரமாக நீடித்து வருகிறது.

1. 2   சோவியத் ஒன்றியத்தின் சிதைவையடுத்து சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலங்கள் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறிவிட்டது என்று 1992ஜனவரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-வது கட்சிக் காங்கிரஸ் தீர்மானம் முடிவுக்கு வந்த பிறகு தற்போது இரண்டு பத்தாண்டுகள் கடந்து விட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் உலக அளவில் ஆழமான அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளன. இந்த மாற்றங்களுடன் இணைந்து மார்க்சியமும், சோஷலிசமும் செத்துவிட்டன என்ற ஏகாதிபத்திய மதிப்பீடுகள் அடங்கிய தீவிர தத்துவார்த்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முதலாளித்துவமே என்றும் நிலைத்திருக்கக்கூடியது என்று பிரகடனப் படுத்தப்பட்டதுடன் முதலாளித்துவமே,  மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாக இருக்கும் என்றும் வாதிடப்பட்டது.

1.3           எதிர்நோக்கப்பட்டபடியே இருபதாண்டுகாலம் அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்திய தாக்குதல் கூர்மையான முறையில் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலுடன் இணைந்து ஏகாதிபத்திய உலகமயாக்கலின் ஆதிக்கமும் நிகழ்ந்துள்ளது. அது இன்றைய தினம் உலகின் அனைத்து நாடுகளையும் உலகமயச் சுழலுக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது.

1.4           எனவே மனித குல சமத்துவம் மற்றும் விடுதலைக்கான நமது முயற்சிகளின் பிரிக்க முடியாத பகுதியாக, இன்றைய உலக வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், அவை உலகச்சூழலின் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும்,  விவாதிக்க வேண்டியுள்ளது. இவை இரண்டும்  சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலங்கள் மீதும், நமது நாட்டில் நீண்ட கால புரட்சிகரக் குறிக்கோள்களின் முன்னேற்றத்தின் மீதும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்து கின்றன என்பதையும் மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான பகுப்பாய்வு செய்ய வேண்டியது நமது கடமையாகிறது.

1.5           பிரிவுறாமல் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கவ்விப்பிடித்திருந்த திரிபுவாத பிறழ்ச்சியானது, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் அதன் மூலம் நமது மக்களின் விடுதலையையும் தடம் புரளச் செய்யும் விதத்திலான மோசமான அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்திய புரட்சியின் நீண்ட கால குறிக்கோள் மற்றும் நடைமுறை குறித்தும் இந்திய ஆளும்வர்க்கங்களின் தன்மை மற்றும் வர்க்க உள்ளடக்கம் குறித்தும் ஒரு சரியான மதிப்பீட்டினை மையமாகக் கொண்டு கடுமையானஉட்கட்சித் தத்துவார்த்தப் போராட்டத்தினை நடத்தி  திரிபுவாதத்திலிருந்து ஒரு தீர்மானகரமான முறிப்பை ஏற்படுத்திய பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாகியது. மார்க்சிய – லெனினிய புரட்சிகரக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதற்கும் அவற்றை மெய்யான இந்தியச்சூழல்களுக்குப் பொருத்திப் பார்ப்பதற்கான உறுதிப்பாட்டுடனும்  கட்சி  உருவாகியது.

1.6           இதனைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே இடதுசாரி அதிதீவிர குறுங்குழுவாத பிறழ்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை தடம் புரளச் செய்ததற்கு மீண்டுமொரு முறை அச்சுறுத்திய இத்தகைய போக்குகளுக்கு எதிராக தத்துவார்த்த ரீதியில் போராட வேண்டியிருந்தது. இந்த தத்துவார்த்தப் போராட்டத்துடன் இணைந்து எமது தோழர்கள் பலரின் இன்னுயிரைப் பலிகொண்ட கொடிய உடலளவிலான தாக்குதல்களையும்  எதிர்கொண்டு மீண்டுவர வேண்டியிருந்தது.

1.7           இந்த பிறழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியும் அதனுடன் இணைந்து இந்திய மக்களின் புகழ் பெற்ற தீரமிக்க போராட்டங்களில் (1)கிடைத்த நமது மரபுவழி உரிமையையும் நாட்டின் மிகவும் வலிமைமிக்க முன்னணி கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்தியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாவதற்கு  வழி வகுத்தது. இது இத்தகைய தத்துவார்த்தப் போராட்டங்களால் நமது மார்க்சிய – லெனினிய நிலைபாடுகள் மிகச் சரியானவை என்பதை மிக்பெரிய அளவில் மெய்ப்பித்தது.

1.8           தத்துவார்த்தப் பிறழ்வுகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்திய போராட்டங்களும், மார்க்சிய – லெனினியம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக அது மேற்கொண்ட விடாப்பிடியான முயற்சிகளும் – தாமாக வெளிப்பட்ட அனைத்துவித பிறழ்வுகளின் மீதும் – அவை உள்நாட்டளவிலானதாக இருந்தாலும், சர்வதேச அளவில் இருந்தாலும் சரி- தொடர்ச்சியான கருத்துப் போராட்டங்களை நடத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதற்காக அக்காலத்தின் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகப்பெரிய சக்திகளான சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎஸ்யு) மற்றும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) ஆகியவற்றுடன் பல நேரங்களில் தத்துவார்த்த ரீதியான மோதலில் ஈடுபட வேண்டியிருந்தது. இந்த தத்துவார்த்த போராட்டங்களே கட்சியை மிகப்பெரும் வலிமை மிக்க கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சக்தியாக மட்டுமன்றி இந்தியாவின் தேசிய அரசியல் பாதையின் மீது அழுத்தத்தையும், செல்வாக்கையும் செலுத்தும் வல்லமை கொண்ட ஒரு கட்சியாக உருவெடுக்கும் நிலையை உறுதிப்படுத்தியது.

1.9           நமது கட்சியின் நீண்ட காலக்குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கு பர்துவான் பிளீனம்  காலத்திலிருந்தே (1968) பிரச்சனைகளின் மீது இத்தகைய கருத்துப்போராட்டங்கள் அவசியமானவையாக இருந்து வந்துள்ளன. முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசம் சிதைவுண்ட சூழலில், சில தத்துவார்த்த பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தை 14-வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றியது. நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பற்றிய நமது பகுப்பாய்வின் வெளிச்சத்தில் 2000ஆண்டில் கட்சித்திட்டம் மேம்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றிய சிதைவுக்கும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மேலொங்கியதற்கும் பிந்தைய கால புதிய உலகச் சூழல் குறித்து பின்னர் நடைபெற்ற அகில இந்திய மாநாடுகள் நமது பகுப்பாய்வை மேலும் செழுமைப்படுத்தின.

1.10         மனித குலத்தின் மீது முன்னெப்போதும் இல்லாதஅளவில் துன்ப துயரங்களை ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சுமத்தி வரும் அதே வேளையில், அந்த தாக்குதலுககு எதிரான மக்களின் எதிர்ப்பியக்கமும் எழுச்சியுடன் வளர்ந்து வருகிறது. இது இன்றைய உலக சூழலில் – அதிலும் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் – தெளிவான முறையில் வெளிப்பட்டு வருகிறது. இவை போன்ற எழுச்சி மிக்க போராட்டங்கள் உலகின் பிற பகுதிகளிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வால் ஸ்ட்ரீட்டை முற்றுகை இடுவோம் இயக்கத்திலும், மக்களின் வாழ்நிலைகளின் மீது ஏகாதிபத்திய நவீன தாராளமய உலகமயமாக்கல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக குறிப்பாக ஐரோப்பாவில் நடைபெற்று வரும் போராட்டங்களிலும் இதனைக் காணலாம். இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் மந்த நிலையில் அவை கூர்மையான முறையில் தீவிரமடைந்துள்ளன. உழைக்கும் மக்கள் மற்றும் பிற சுரண்டப்படும் பிரிவு மக்களின் வாழ்க்கைத் தரம் அரிக்கப்படுவதற்கு எதிராக எழுச்சியுடன் வளர்ந்து வரும் இப்போராட்டங்கள் எதிர்காலத்தில் புரட்சிகர போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்குமான அடித்தளங்களாக அமைந்துள்ளன.

1.11.        சர்வதேச அளவில் வர்க்கச் சக்திகளின் பலாபலத்தின் இன்றைய சூழலில், இப்போராட்டங்களை மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் நிலைக்கு உயர்த்தும் கடமையைச் செய்வதற்கு பல்வேறு சவால்களைக் கடக்க வேண்டியுள்ளது. மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான வர்க்கத் தாக்குதல்களைத் தொடுக்கும் விதத்தில் இத்தகைய போராட்டங்களை தீவிரப்படுத்துவதில் வெற்றி பெறுவதானது உழைப்பாளி வர்க்கத்தின் தலைமையிலான வர்க்கப் போராட்டங்களை தீர்மானகாரமான முறையில் கூர்மைப்படுத்து வதைப் பொறுத்ததேயாகும்.  இது புரட்சிகரப் போராட்டத்தின் அகவய காரணியினை  – அதாவது சுதந்திரத்துக்காகவும், முழு விடுதலைக்காகவும் சுரண்டப்படும் அனைத்து மக்களும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் போராடும்போது வெளிப்படும் வர்க்க ஒற்றுமையினை வலுப்படுத்துவதையும் உறுதிப்படுத்துவதையுமே சார்ந்துள்ளது.

1.12         இத்தகைய சூழ்நிலையில் – குறிப்பாக விரைவான நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் – தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் ஏற்படுத்தும் சவால்கள் குறித்தும் ஒரு அறிவியல் பூர்வமான மார்க்சிய- லெனினிய பகுப்பாய்வின் மூலம் – மனித குல விடுதலைக்காக வர்க்கப்போராட்டங்களை வலுப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக – நமது புரட்சிகர உறுதிப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வது அவசியமாகியுள்ளது.

II

உலகமய காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் செயல்படும் முறை

2.1           மார்க்சீய-லெனினியத்தையும், அதன் மீற முடியாத கருவி யாகிய திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்ட வட்டமான பகுப்பாய்வையும் உறுதியாக உயர்த்திப் பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யானது இன்றைய திட்டவட்டமான சூழல்களில் ஏகாதிபத்தியத்தின் செயல்பாட்டு முறையையும், அது இந்தியாவின் மீது ஏற்படுத்திவரும் தாக்கத்தையும் பகுப்பாய்வு செய்கிறது. இதில் பின்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியச் சூழல், நமது நீண்டகாலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான மற்றும் பொருத்தமான உத்திகளை வகுப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.

2.2           உலகமயாக்கலை அதன் முழு பரிமாணத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த இயக்கமானது – மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல – மூலதனம் ஒரு சிலரின் கரங்களில் திரள்வதற்கும், குவிவதற்கும் இட்டுச் செல்கிறது. இந்த போக்கின் வளர்ச்சி குறித்த ஒரு அறிவியல் பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் ஏகபோக முதலாளித்தவ கட்டத்திலிருந்து ஏகாதிபத்தியமாக உருவானதையும், வளர்வதையும் லெனின் அடையாளம் காட்டினார். ஏகாதிபத்தியத்தின் அரசியலைப் பற்றிய லெனினின் பகுப்பாய்வு – அதாவது ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்பது – வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கான மிகச்சரியான புரட்சிகர நீண்டகாலக் குறிக்கோள் மற்றும் உத்திக்கான அடித்தளத்தை அமைத்தது. இது மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு அதாவது, 1917அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்கு இட்டுச் சென்றது.

2.3           ஏகாதிபத்திய படிநிலைக்குள் இன்றைய உலகமயமாக்கல் கட்டமானது பிரம்மாண்டமான அளவில் மூலதனம் குவிவதற்கும் மையப்படுவதற்கும் இட்டுச் சென்றது. இவ்வாறுதான் கடந்த இருபதாண்டு காலத்தில் சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையில் மூலதனத்திரள் உருவாயிற்று (2)இது உலக  ஒழுங்கமைவினை மறு சீரமைப்பதற்கு இட்டுச் சென்றது. அந்த உலகில் தனது லாபத்தை உயர்ந்த பட்சமாக அதிகரிப்பதற்காக உலகம் முழுவதும் தடையின்றிச் சென்று வருவதற்கு இந்த மூலதனம் முயல்கிறது. இது தன்னளவிலேயே மூலதன ஓட்டத்துக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் அகற்றுவதற்கான நிபந்தனைகளை விதிக்கிறது. இதுவே நிதித்துறை தாராளமய மாக்கலின் சாரமாகும். இதனுடன் இணைந்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் நவீன தாராளமய தாக்குதலானது தேசிய அரசுகளின் – அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளின் தேசிய அரசுகளின் பொருளாதார இறையாண்மைக்கும், அதன் காரணமாக – அரசியல் இறையாண்மைக்கும் கடுமையான சவாலாக அமைவதுடன், அதனை பலவீனப்படுத்தவும் செய்கிறது.

2.4           வரலாற்றில் ஒரு புதிய கட்டம் உருவாகிறது என்றால், அந்த கட்டமானது அதன் வாழ்நாள் காலத்தில் எத்தகைய மாற்றங்களுக்கும் உட்படாமல் அப்படியே நீடித்திருக்கும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்பதை கடந்த காலத்திலேயே நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும் – உதாரணமாக – கம்யூனிசத்தை நோக்கி இடைமாற்றம் பெற்றுவரும் சோஷலிசக் கட்டத்தில்; சோஷலிசத்தின் பாட்டாளி வர்க்க அரசின் செயல்பாட்டில்; அந்த விதத்தில் ஏகாதிபத்திய கட்டத்தில் அளவு மாற்றங்கள் குணமாற்றங்களைக் கொண்ட புதிய கட்டத்துக்கு இட்டுச் செல்வதன் காரணமாக பல்வேறு கட்டங்கள் உருவாகின்றன. எனவே வரலாற்றின் ஒரு காலகட்டம் நேர்கோட்டுப் பயணமாகவோ, அல்லது ஒருவழிப் பாதையாகவோ இருக்காது. ஏகாதிபத்திய கட்டத்தில் நிதி மூலதனத்தின் இயல்பு மற்றும் அதன் மேலாதிக்கச் செயல்பாட்டு முறை பற்றிய லெனினின் முன்கணிப்புகளை இன்றைய ஏகாதிபத்திய கட்டம் நிராகரிக்கவில்லை. சொல்லப் போனால், அவை சரியானவை என்பதையே மெய்ப்பித்துள்ளது.

2.5           சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலங்கள் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், முன்னுக்கு வந்துள்ள உலகமயமாக்கலின் இந்த கட்டம் லாபத்தை உயர்ந்தபட்சத்துக்கு அதிகரிப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் தேடலை ஒப்பளவில் தங்கு தடையின்றித் தொடர்வதற்கு அனுமதிக்கிறது. மக்களின்  சக்தி மிக்க எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கும் நாடுகள் இதில் விதிவிலக்காக உள்ளன. இத்தகைய தேடலானது  பிரம்மாண்டமான அளவில் மூலதனத் திரட்டலுக்கும், சர்வதேச நிதி மூலதனம் மேலும் உறுதிப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. இது பனிப்போருக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட எதிர்ப்புரட்சியும் அவை உலக முதலாளித்தவ சந்தையின் பிடிக்குள் மீண்டும் நுழைந்ததும், இத்தகைய பெரும் அளவிலான மூலதனத் திரட்டலுக்கு கணிசமான அளவில் உதவி புரிந்துள்ளன. மேலும் உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்களும் அதற்கு உதவிகரமாக அமைந்துள்ள, குறிப்பாக தகவல் தொடர்புத் தொழில் நுட்ப முன்னேற்றங்களும், ஏராளமான இயற்கை வளங்களும் மலிவான உழைப்புச் சக்தியும் உள்ள மையங்களுக்கு உற்பத்தியை மாற்றுவதற்கும் வணிக நடவடிக்கைகளை வெளியிடங்களில் ஒப்படைப்பதற்கும் இட்டுச் சென்றுள்ளன. இவ்வாறு லாபத்தை உயர்ந்த பட்சத்துக்கு அதிகரிக்கும் நடவடிக்கைகளும் மூலதனத் திரட்டலின் அளவை அதிகரிப்பதற்கு உதவி புரிந்துள்ளன.

2.6           எனினும் லெனின் காலத்தைப் போல் அன்றி நிதி மூலதனமானது குறிப்பிட்ட தேசிய அரசுகளின் குறிப்பிட்ட செயல்திட்ட நலன்களை நிறைவேற்றுவதற்காக மட்டும் செயல்படுவதில்லை.  மாறாக சர்வதேச அளவில் அது செயல்படுகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் தங்களுடைய குறிப்பிட்ட நலன்களின் முன்னேற்றத்துக்காகவே தொடர்ந்து செயல்பட்டு வரும் அதே வேளையில், ஏகாதிபத்திய நாடுகளிடையிலான போட்டி தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச நிதிமூலதனம் செயல்பட்டு வருகிறது. இந்த சர்வதேச நிதி மூலதனத்தின் இந்த இயல்பே கூட உலகம் முழுவதிலும் தடையின்றி செயல்படுவதற்கான அதன் முயற்சிகளை வரையறை செய்கிறது. இதனைப் பொருத்தமட்டில் நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் பகுப்பாய்வைக் கடந்து உலகம் சென்றுவிட்டதாக பல நேரங்களில் தவறாக வாதிடப்படுகிறது. எனவே ஏகாதிபத்தியம் குறித்த அவரது பகுப்பாய்வு இன்றைய தினம் காலாவதியாகி விட்டது எனவும், அதனால் பொருத்தமற்றதாகி விட்டதாகவும் வாதிடப்படுகிறது.

2.7           நிதி மூலதனத்தின் தோற்றத்தினையும், தனது காலத்தில் வங்கி மூலதனமும், நிதி மூலதனமும் ஒன்றிணைதல் குறித்தும் ஆய்வு செய்யும் போது, இந்த நிகழ்வின் தாக்கத்தை மெய்யாக லெனின் பகுப்பாய்வு செய்தார். முதலாளித்துவம் குணமாற்றம் அடைந்துள்ளது எனவும், அதில் நிதி மூலதனம் தனது மரபு வழியிலான செயல்பாட்டையும் கடந்து சென்று ஒரு புதிய கட்டமான ஏகாதிபத்தியம் உருவாவதற்க இட்டுச் சென்றது என்ற முடிவுக்கு வந்தார். ஐந்து அம்சங்கள் (3)அதன் சிறப்பியல்புகளாக உள்ளன. அவற்றில் ஒன்றான வெவ்வேறு ஏகாதிபத்திய மையங்களுக்கிடையே உச்சபட்ச லாபத்தை பெறுவதற்கான போட்டியின் போது உலகை மறு பங்கீடு செய்யும் முயற்சியில் ஏகாதிபத்தியத்துக்கு இடையே யுத்தங்கள் நடைபெறும் சூழலுக்கு இட்டுச் சென்றது. 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடைபெற்ற இரண்டு உலக யுத்தங்களின் மூலம் இந்த மதிப்பீடு மிகச் சரியானது என்பது மெய்ப்பிக்கப்பட்டது. மீற முடியாத தனது சொந்த விதியாகிய திட்டவட்டமான நிலைகளைப் பற்றிய திட்டவட்டமான பகுப்பாய்வைச் செய்தார். ஏகாதிபத்திய சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைப்பதன் மூலம் ரஷ்யப் புரட்சியின் முன்னேற்றத்துக்கு உதவக் கூடிய சர்வதேச அளவிலான வர்க்க சக்திகளின் பலாபலங்களை மதிப்பீடு செய்வதற்கு லெனின் இதை தனது காலத்தில் பயன்படுத்தினார்.

2.8           எனினும் ஏகாதிபத்திய கட்டத்தில் நிதி மூலதனம் உருவாவதையடுத்து முதலாளித்துவ ஏகபோகங்களுடைய தொழில் வாணிபச் செயல்பாடுகள் தவிர்க்க முடியாதபடி நிதி ஆதிக்கக் கும்பலாகிய ஒரு சிலரது ஆதிபத்தியத்துக்கு இட்டுச் செல்கின்றன என்று நுண்ணறிவு திறத்துடன் முன்கூட்டியே லெனின் கருத்து வெளியிட்டுள்ளார். நிதி மூலதன ஆதிக்கத்தைக் கொண்ட ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று லெனின் வரையறை செய்கிறார். அந்தக் கட்டத்தில் மூலதனத்தின் அனைத்து வடிவங்களின் மீதும் நிதி மூலதனம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி விடுகிறது. மூலதன ஏற்றுமதி என்ற அம்சம் குறித்து தனது பகுப்பாய்வை முன்னெடுத்துச் செல்லும் போது எதிர்காலம் பற்றி முன்கூட்டியே மதிப்பீடு செய்துள்ள லெனின் இவ்வாறு நிதி  மூலதனம் உலகின் எல்லா நாடுகளிலும் உண்மையிலேயே தனது வலையை விரிக்கிறது என்று குறிப்பிடுகிறார். மேலும் ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பான அம்சம் தொழில்துறை மூலதனமல்ல – மாறாக நிதி மூலதனமே (4)என்று கூறுகிறார்.

2.9           எனவே, ஏகாதிபத்திய கட்டத்தில் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தையும், தலைமைப் பாத்திரத்தை மட்டுமே லெனின் எதிர் நோக்கினார் என்று கருதக் கூடாது. மாறாக, இந்த நிகழ் முறையின் போது நிதி மூலதனத்தின் தலைமையில் லாபத்தை உச்சபட்சத்துக்குக் கொண்டு செல்லும் தேடலில் அனைத்து மூலதன வடிவங்களும் பின்னிப் பிணையும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். எனவே, ஏகாதிபத்தியம் குறித்த லெனின் பகுப்பாய்வு காலாவதியாகி விடவில்லை என்பது தெளிவு. மாறாக, லெனின் காலத்திய திட்டவட்டமான நிலைமைகள் தான் மாறியிருக்கின்றன. தமது காலத்திய சூழல்களை தொலை நோக்குப் பார்வையுடன் பகுப்பாய்வு செய்து கணக்கிட்டு மதிப்பீடு செய்ததுடன் அவர் எதிர்கால நிகழ்ச்சிப் போக்கினைப் பற்றியும் முன்கூட்டியே  மதிப்பிட்டிருந்தார். ஏகாதிபத்தியத்தின் கீழ் சர்வதேச நிதி மூலதனமானது தலைமைப் பாத்திரத்தையும், ஆதிக்க நிலையையும் வகிக்கும் என்ற லெனின் செய்துள்ள முன்மதிப்பீடு இன்று மிகச் சிறந்த முறையில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் நிதி மூலதனத்தின் பங்கு பற்றி பகுப்பாய்வு செய்வதும், மதிப்பிடுவதும் கணக்கிடுவதும் இன்றைய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்டுகளின் கடமையாக அமைந்துள்ளது. தனி நாடுகளின் நீண்டகால புரட்சிகரக் குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இது தேவைப்படுகிறது.

2.10         சர்வதேச நிதி மூலதனத்தின் இத்தகைய தனித்துவமான ஆதிக்க நிலை காரணமாக ஏகாதிபத்திய உள்முரண்பாடுகள் இல்லாமல் போய்விட்டன என்று கருதக் கூடாது. சமச்சீரற்ற வளர்ச்சி என்னும் அடிப்படை முதலாளித்துவ விதி இயங்கும் நிலையில், இந்த முரண்பாடுகள் இருப்பது மட்டுமல்ல, அதற்கும் மேலாக அவை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையும் கட்டாயத்தில் உள்ளன. முதலாளித்துவ மையங்களின் ஒப்பளவிலான எதிர்கால வலிமையின் அடிப்படையில் பார்க்கும் போது அவற்றின் நலன்களுக்கு இடையேயான மோதல்களுக்கு இது இட்டுச் செல்லும். உலக இயற்கை வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அல்லது உலக ஒழுங்கமைவை மாற்றி அமைக்க முயல்வது – அதாவது குறிப்பிட்ட செல்வாக்கு மண்டலங்களை அமைப்பதற்காக உலகை புதிதாக மறுபங்கீடு செய்வது ஆகியவை தொடர்பாக அவற்றின் சொந்த நலன்களுக்கு இடையேயான மோதல்கள் உருவாகும்.  அது இன்றைய காலத்திலும் பல நேரங்களில் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில்,  பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே கரன்சி யுத்தங்கள் நடைபெறக் கூடும். இத்தகைய முரண்பாடுகள் சோஷலிச மற்றும் வளர்முக நாடுகள் தங்களுடைய நாணயங்களின் மதிப்பை மறுமதிப்பீடு செய்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும். அத்தகைய மறுமதிப்பீடு ஏகாதிபத்தியத்துக்கு ஆதாயம் அளிக்கும் விதத்தில் மாறும் சாத்தியங்களும் உண்டு.

2.11         முதலாளித்துவத்தின் கீழ் உபரி மதிப்பு  என்பதை உற்பத்தி நிகழ் முறையின் போது மட்டுமே தோற்றவிக்க முடியும். இதனை எந்த முறையில் தனதாக்கிக் கொண்டு வேறு துறைகளில் ஈடுபடுத்துகிறோமோ அது  கூடுதலான பண வரவினைத்  தோற்றுவிக்கலாம். உற்பத்தி நிகழ் முறையின் கீழ் சுரண்டல் மூலம் பெறப்பட்ட  உபரியானது, சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைப்படி இவ்வாறு பல்வேறு வடிவங்களில் கையாளப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் சந்தை மூலதனமாக்கலை ஊகவணிகத்தின் மூலம் அதிகரிப்பதற்கு புதிய நிதி ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் பண ஓட்டத்துக்கான வழிமுறைகள் மேலும் அதிகமாக விரிவுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு பொருளாதாரத்தை தற்காலிக வீக்கமடையச் செய்யக் கூடிய நீர்க்குமிழிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை அநேகமாக பல நேரங்களில் வெடித்துச் சிதறும் போது பொருளாதாரம் நெருக்கடிக்குள் ஆழ்ந்து விடுகிறது.

2.12         இன்றைய தினம் சர்வதேச நிதி மூலதனமானது உயர்ந்தபட்ச லாபத்  தேடலின் போது இவ்வாறு தொழில் மூலதனம் மற்றும் பிற மூலதனங்களுடன் பின்னிப் பிணைந்து நிற்கிறது. மூலதனத் திரட்டல் மற்றும் லாப அதிகரிப்பின் அளவை மிகவும் அதிகமாக மேலும் விரிவுபடுத்துவதற்காக புதிய தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடும் போது நோக்கத்துக்கு இப்போது சர்வதேச நிதி மூலதனம் தலைமையேற்று வருகிறது.

2.13         லாப அதிகரிப்புக்காக சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கேற்ப உலக ஒழுங்கமைவை இவ்வாறு மாற்றி அமைப்பதே நவீன தாராளயமத்தின் இலக்கணமாகும். நாட்டு எல்லைகளைக் கடந்து சரக்குகளும், மூலதனமும் செல்வதற்கு உள்ள தடைகளை அகற்றும் கொள்கைகளின் மூலம் அது முதலில் செயல்படுகிறது. வர்த்தக தாராளமயமாக்கலானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை அகற்றிவிட்டு நாட்டில் குறிப் பாக வளர்முக நாடுகளில் தொழில் அழிவை ஏற்படுத்துகிறது. உற்பத்தியையும், தொழில்துறை வணிக செயல்பாடுகளையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது, சொந்த நாடுகளிலும் கூட இது நடைபெறுகிறது. இதே போல மூலதன ஓட்டத்தை தாராளமயமாக்குவதானது உள்நாட்டின் உற்பத்தித் திறனுள்ள சொத்துக்களை (நமது பொதுத்துறையைப் போல) வெளிநாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. இது மூலதனத் திரட்டலை விரிவான அளவில் அதிகரிக்கச் செய்கிறது.

2.14         மூலதனத் திரட்டலை வலுப்படுத்துவதற்கான பிற வழிமுறைகளாக பணவாட்டக்  கொள்கைகளை திணிப்பதைக் குறிப்பிடலாம். நிதிக் கட்டுப்பாடு என்ற பெயரால் அரசாங்கச் செலவுகளின் மீது தடைகளை ஏற்படுத்துவது; (சர்வதேச நிதி மூலதனம் ஊக வணிக லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக பெரிய அளவிலான பணப்புழக்கத்துக்கான வழிகளை ஏற்படுத்துவது). இது உலகப் பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த தேவையின் அளவைக் குறைப்பதற்கு இட்டுச் செல்கிறது; வளர்முக நாடுகளில் இது விவசாய வர்க்கத் தினருக்கு எதிரான வணிக நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்கிறது; உலக அளவில் சமூக நலப்பணிகளை வழங்கும் அரசுத் துறையானது அவற்றிலிருந்து விலகச் செய்யப்படு கிறது; இது வளர்முக நாடுகளில் கூடுதலான அளவில் காணப்படுகிறது. அந்நாடுகளின் அரசுத்துறை நிறுவனங்கள் அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்டு, பொதுப் பயன் பாடுகளுக்கான விரிவான பகுதிகள் தனியார் லாப அதிகரிப்புக்காக வலுக்கட்டாயமாக திறந்து விடப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் அறிவின் மீதான ஏகபோக கட்டுப்பாட்டு வடிவங்கள் அறிவு உற்பத்தி மற்றும் மறு உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் பெருமளவு லாபத்தை கொண்டு வருகின்றன.  இவ்வாறு வலுக்கட்டாயமாக திறக்கும் போக்கு நிகழ்கால ஏகாதிபத்தியத்தின் ஒரு புதிய அம்சமாக உள்ளது. இது, இதுவரை இல்லாத லாப அதிகரிப்புக்கான புதிய வாசல்கள் இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளன.

2.15         வளர்முக நாடுகளைச் சேர்ந்த பெரும் முதலாளி வர்க்கத்தின் விரிவான பகுதியினரை தங்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதற்கு ஏகாதிபத்தியத்தின் புதிய கட்டம் நிர்ப்பந்திக்கிறது. இந்நாடுகள் பலவற்றில் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் உள்நாட்டு முதலாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெற்றது. அந்நாடுகள் விடுதலைக்குப் பிறகு ஒப்பளவில் சுயேச்சையான ஒரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைக் கடைப்பிடிக்க முயற்சித்தன. இந்தியாவில் உள்ளதைப் போல இவை உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டும், அன்னிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து கொண்டும் ஓரளவுக்கு சுயேச்சையான முதலாளித்துவப் பாதையைக் கடைப்பிடிக்க முயன்றன. அணிசேரா அயல்நாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தன. அதன் காரணமாக அவை  ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேசு வதற்கு சோவியத் யூனியனைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்த ஆட்சிகளின் உள்ளார்ந்த முரண்பாடுகளுடன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் லாப அதிகரிப்பை மேம்படுத்துவதற்காக இந்த நாட்டுப் பொருளாதாரங்களுக்குள் ஊடுருவுவதற்கான சர்வதேச நிதி மூலதனத்தின் முயற்சி ஆகியவையனைத்தும் சேர்ந்து, வளர்முக நாடுகளைச் சேர்ந்த  முதலாளி வர்க்கங்களின் பார்வையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒப்பளவில் சுயேச்சையாக செயல்பட்டு வந்த வளர்முக நாடுகளைச் சேர்ந்த உள்நாட்டு ஆளும் வர்க்கத்தினருக்கு சர்வதேச நிதி மூலதனத்துடன் சில அம்சங்களில் முரண்பாடுகள் இருந்த போதிலும், கூடுதலான முறையில் அதனுடன் இணைந்து முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றனர். இதன் மூலம் அவை நவீன தாராளமயத்தைத் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

2.16         முதலாளித்துவத்தின் வரலாற்றுக் காலம் முழுவதிலும் மூலதனத்தை திரட்டுவது இரண்டு விதங்களில் நடைபெற்று வருகிறது. ஒன்று – முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறை திறக்கப்படுவதனால் இயல்பான முதலாளித்துவ செயல் இயக்கத்தின் மூலம் ஏற்படும் முதலாளித்துவ விரிவாக்கம் (மூலதனத்தை வசப்படுத்துதல்) மற்றது பலவந்தமாகவும், அப்பட்டமான கொள்ளையின் மூலமும் நடைபெறுவது (வலுக்கட்டாயமான பறிமுதல்) அதன் மிருகத்தனமான தன்மையை மூலதன ஆதித் திரட்டலாக மார்க்ஸ் வரையறை செய்கிறார். இந்த ஆதித்திரட்டலானது ஆதி காலம் – நவீன காலம் என்று ஒரு வரலாற்றுக் காலப் பிரிவாக பல நேரங்களில் தவறாக விளக்கப்படுகிறது. மார்க்சைப் பொருத்தவரை – எனவே, மார்க்சியர்களைப் பொருத்தவரை இது ஒரு பகுப்பாய்வுப் பிரிவாகும். அது இயல்பான முதலாளித்துவ செயல் இயக்கத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்ந்து உடனுறைகிறது. ஆதித் திரட்டல் நிகழ் முறையானது கடந்த காலங்களில் நேரடியான காலனி ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட காலத்திலும் ஆதித் திரட்டலின் தீவிரமானது சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலங்களை நேரடியாக சார்ந்துள்ளது. அது அத்தகைய முதலாளித்துவ மிருகத்தனம் வெளிப்படுவதை அனுமதிக்கலாம் அல்லது தடுத்து நிறுத்தலாம். நிகழ்கால ஏகாதிபத்தியத்தின் இன்றைய கால கட்டத்தில் இத்தகைய மிருகத்தனமான ஆதித் திரட்டலின் தீவிரமானது வளர்முக மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்த உலக மக்கள் தொகையின் பெரும்பாலோரின் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

2.17         முதலாளித்துவ உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும் பொதுத்துறைப் பங்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார்மயத்துக்கு இட்டுச் செல்லும் விதத்தில் அமைந்த இத்தகைய தாக்குதலானது அரசு சொத்துக்களை பறிமுதல் செய்து தனியார் பக்கம் அதைக் குவியச் செய்யும் செயல் என்பதைத் தவிர வேறல்ல. நீர் மற்றும் எரிசக்தி போன்ற பொதுப்பயன்பாட்டு ஆதாரங்களும் கல்வி, சுகாதாரம் போன்ற பொதுப்பணிகளும் தனியாரின் மூலதனக்குவிப்புக்கான களங்களாக மேலும் மேலும் அதிக அளவில் மாறி வருகின்றன. கனிம வளங்களின் மீதான கட்டுப்பாடு தனியார் கரங்களுக்கு மேலும் மேலும் மாறி வருகிறது. பன்னாட்டு விதை நிறுவனங்கள் மற்றும் விற்பனைக் கம்பெனிகளுக்கு விவசாயத்துறை மேலும் மேலும் திறந்து விடப்படுகிறது. இது வளர்முக நாடுகளின் சுயசார்பு விவசாயம் அநேகமாக அழிக்கப்படுவதற்கும், விவசாயப் பிரிவினரை ஆழமான துன்ப துயரத்தில் ஆழ்த்துவதற்கும் இட்டுச் செல்கிறது. வர்த்தக பொருட்களின் இறக்குமதி சுங்கவரி நீக்கப்படுவதும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் திணிக்கப்படுவதும், பல வளர்முக நாடுகளின் தொழில்துறை அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. மூலதனம் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நேர்மாறாக வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி தொழிலாளர்கள் புலம் பெயரும் போது அதைத் தடுப்பதற்கு வளர்ச்சியடைந்த  நாடுகளின் நுழைவு அனுமதிச் சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன. இவையெல்லாம்  தீவிரமான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைக்கும், அதே நேரத்தில் லாப அதிகரிப்புக்குமே இட்டுச் செல்கின்றன. வனங்கள், சுரங்கங்கள், நீர் போன்ற மக்களுக்கான பொது ஆதார வளங்கள் எளிதில் தனியார் உடைமையாக கையகப்படுத்தப்படுகின்றன.

2.18         முதலாளித்துவத்தின் கீழ் அரசானது, எந்த வடிவத்தில் இருந்த போதிலும், அது எப்போதுமே முதலாளி வர்க்க சர்வாதிகாரமாகவே இருந்து வருகிறது. நிகழ்கால ஏகாதி பத்தியத்தின் கீழ், சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை முன்னேற்றுவதற்காக, அதன் இன்றைய தேவைக்கேற்ப அரசின் செயல்பாடு மாற்றமடைந்து வருகிறது. அது சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கேற்பவே பல நேரங்களில் செயல்படுகிறது. எனவே மக்களுக்கு ஆற்ற வேண்டிய சமூகப் பொறுப்புகள் மற்றும் கடமைகளை அரசு கைவிடுவது என்பது பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்பதாகாது. சர்வதேச நிதி மூலதன நலன்களை வெட்கமின்றி உயர்த்திப் பிடிப்பதற்காகவே அதன் செயல்பாட்டு முறை மாறிவிடுகிறது. இவ்வாறு நிகழும் போது அது தனது சமூகப் பொறுப்புக்களை கைவிடுகிறது என்பது மட்டுமன்றி ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்துகிறது. சட்டமியற்றும் நிகழ் முறையின் மீதான மக்களின் இறையாண்மையை சீர்குலைக்கிறது. அத்துடன் மேலும் மேலும் அதிகமாக சர்வாதிகாரப் போக்கையும் கடைப்பிடிக்கிறது.

2.19         ஆதித் திரட்டல் நிகழ்முறையின் இத்தகைய தாக்குதலானது இதற்கு முன் அறியப்படாத வழிகளில் பெருமளவிலான லஞ்ச ஊழலுக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. லஞ்ச ஊழல் முறைகேடுகள் காரணமாக வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்முக நாடுகளைச் சேர்ந்த பல ஆட்சிகள் வீழ்ச்சி யடைந்துள்ளன. (5)இந்தியாவில் பிரம்மாண்டமான ஊழல்களின் மூலம் நடைபெற்றுள்ள பெருங்கொள்ளைக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் நவீன தாராளமய சீர்தருத்தங்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய புதிய வழிகளே முக்கிய காரணமாகும்.

2.20         மூலதனத் திரட்டலின் இரண்டுவித நிகழ்முறைகளும் ஒரே நோக்கத்தில் செயல்படுகின்றன. இருப்பினும், மூலதனத்தை திரட்டுவதில், முதலாளித்துவத்தின் இயல்பான மற்றும் இயற்கையான நிகழ்முறைக்கு வேறுபட்ட தன்மையில் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யும் நிகழ்முறை இன்றைய ஏகாதிபத்தியத்தின் முக்கிய அம்சமாக மாறி யுள்ளது.

III

தொடர்ந்து நீடித்திருக்க முடியாத நவீன தாராளமய உலகமயமாக்கலும், முதலாளித்துவ நெருக்கடியும்

3.1           நமது கட்சித் தீர்மானத்தில் பகுப்பாய்வு செய்துள்ளதைப் போல ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் வெளிப்படும் இத்தகைய அம்சங்கள் நீடித்து நிலைத்திருக்க முடியாது. மேலும் ஒரு அமைப்பு முறை என்ற விதத்தில் முதலாளித்துவமானது சுரண்டலுக்கும், நெருக்கடிக்கும் அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்ற மார்க்சின் சரியான நிர்ணயிப்பு நமது 14-வது கட்சிக் காங்கிரஸ் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவே நமது கட்சித் திட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தை எந்த அளவுக்கு சீர்திருத்தினாலும், இந்த இரண்டு அம்சங்களில் எதையும் நீக்க முடியாது. ஏனென்றால் இவை முதலாளித்துவத்தின் உற்பத்தி நிகழ்முறைக்கு உள்ளேயே தவிர்க்க முடியாத இடத்தில் அமர்ந்திருந்து அதன் அடிப்படை முரண்பாடுகளைத் தோற்றுவிப்பவையாகும்.  அதாவது – உற்பத்தியின் சமூகத் தன்மை கொண்டதாகவும், தனதாக்கிக் கொள்வது  தனி மனிதத்தன்மை கொண்டதாகவும் இருப்பதே அந்த அடிப்படை முரண்பாடு;  இது தன்னளவிலேயே மனித முகம் கொண்டதாக முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியும் என்று சமூக ஜனநாயகம் உருவாக்கிவரும் அனைத்து பொய்த் தோற்றங்களையும்  உடைத்தெறிகிறது.

3.2           உழைப்பின் தன்மையும் அதன் ஆக்கக் கூறுகளும் – அதாவது கரத்தால் உழைக்கும் உழைப்பாக இருந்தாலும், கருத்தால் உழைக்கும் (அறிவு சார்ந்த) உழைப்பாக  இருந்தாலும் சுரண்டல் நிகழ்முறையைப் பொருத்தவரை பெரிய அளவிலான வேறுபாடு எதுவும் கிடையாது. ஆனால் நவீனகாலங்களில் உழைப்பாளி வர்க்கத்தின் தன்மையானது மார்க்சின் காலத்தில் இருந்ததை விட குறிப்பிடத்தக்க விதத்தில் மாறியுள்ளது, மார்க்சின் காலத்துடன் ஒப்பிடும் போது உடல் உழைப்பின் விகிதாசாரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டது, எனவே மார்க்சின் நிர்ணயிப்பு இனியும் செல்லத் தக்கதல்ல என முன்வைக்கப்படும் வாதங்கள் தவறானவை என்பதை இது அம்பலப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புச் சக்தியே உற்பத்தியினை செய்துவரும் காலம் வரை அது சுரண்டப்படுகிறது. அதுவே உபரி மதிப்புக்கும் எனவே லாபத்துக்குமான ஆதாரமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் இருப்புக்கான அடிப்படை நோக்கமே அதுதானே?

3.3           எனினும் கருத்தால் உழைக்கும் (அறிவுசார்) உழைப்பின் விகிதாசாரம் அதிகரிக்கும் போது அப்பிரிவினரின் மத்தியில் தாங்கள் சுரண்டப்படும் நிலையில் இப்போது இல்லை- மாறாக, தாங்கள் இப்போது முதலாளித்துவத்தின் கூட்டாளிகள் என்ற பிரமைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இது சுரண்டப்படும் பிரிவின் வர்க்க ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் அதேவேளையில் இப்பிரிவின் சில பகுதியினர் இத்தகைய பிரமைகளுக்கு இரையாகிவிடுகின்றனர்; அதன் மூலம் நவீன தாராளமயத்திற்கு முட்டுக் கொடுக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றனர். இத்தகைய போக்கிற்கு எதிராக தத்துவார்த்த ரீதியில் கேள்வி எழுப்பி மோத வேண்டியுள்ளது.

3.4           எனினும் தற்காலத்திய நவீன தாராளமய தாக்குதலானது அதனை நீடித்து நிலைத்திருக்க முடியாததற்கான போக்குகளைத் தோற்றுவித்துள்ளது.  இதனை நிலை நாட்டுவதற்கு உலகமயமாக்கலின் இரண்டு முக்கிய அம்சங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது. முதலாவதாக இந்த நிகழ்முறையுடன் இணைந்து நாடுகளுக்குள்ளே ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கிடையேயும், அதே போன்று  முன்னேறிய நாடுகள் மற்றும் வளர்முக நாடுகளுக்குள்ளேயும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. (6)இரண்டாவதாக, உலகமயாக்கலானது வேலை வாய்ப்புக்களற்ற  வளர்ச்சி என்ற நிகழ்வை தோற்றுவித்துள்ளது. இது இவ்வாறு இருப்பதற்குக் காரணம் லாப அதிகரிப்பு நோக்கம் அழைத்துச் செல்லும் பாதை மனித வளத்திறன்களை மேம் படுத்துவதற்காக முதலீடு செய்யாமல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கே அதிகமாக முதலீடு செய்வதிலேயே முடிகிறது. அதன் காரணமாக, மனித உழைப்பை தவிர்க்க உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை விட வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி எப்போதும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. (7)இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால் உலக மக்கள் தொகையின் பெரும்பாலானவர்களின் வாங்கும் சக்தியானது கரைந்து வந்துள்ளதை புரிந்து கொள்ள முடியும்.

3.5           உற்பத்தி செய்யப்படும் பொருள் விற்பனையாகாத போது, முதலாளித்துவம் தவிர்க்க முடியாதபடி நெருக்கடியில் சிக்குகிறது. ஏனென்றால் உபரி மதிப்பு லாபமாக உருமாற்ற மடைய முடிவதில்லை. ஏகாதிபத்தியத்தின் இன்றைய உலகமயக் கட்டததில் (8)இத்தகைய நெருக்கடி வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் அதனை நீடித்து நிலைத்திருக்க முடியாதவாறு செய்கின்றன. நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொள்ளும் போது முதலாளித்துவம் அதன் தன்மைக்கேற்ப அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு விதங்களில் முயலும். இந்த நிகழ்முறையில் தற்போதைய ஒரு நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக முதலாளித்துவம் தப்பித்துவிடலாம். ஆனால் தவிர்க்க முடியாதபடி, மேலும் ஆழமான ஒரு எதிர்கால நெருக்கடிக்கான அடித்தளத்தை அது அமைத்துவிடுகிறது.

3.6           இத்தகைய சூழல்களில் லாபங்களின் அளவை பராமரிப்பதற்கும் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் முதலாளித்துவம் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தது. கடன்களை வாங்குவதற்கு மக்களை நயமாகத் தூண்டியது. அத்தகைய கடன்களின் மூலம் அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முயன்றது. அந்த கடன் தொகைகளை அவர்களை செலவிடுவதன் மூலம், தங்களது லாப அளவை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும். இதுவே அவர்களில் திட்டம். ஆனால், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான காலம் வரும்போது கடன்களை வாங்கியவர்களில் பெரும்பாலானோரின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அவர்களால் கடன்களை திரும்பச் செலுத்த முடியாத நிலை தவிர்க்க முடியாதபடி ஏற்படுகிறது. இதுதான் அமெரிக்காவில் நிகழ்ந்தது. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வீட்டு அடமானக் கடன் நெருக்கடியானது பெரும் அளவில் நிதியை திரும்பக் கட்டத் தவறும் நிலைக்கு இட்டுச் சென்று உலக முதலாளித்துவத்தையே கடுமையாக பாதித்தது. (9)

3.7           உயர்ந்த அளவு லாபத்தைத் தேடும் மூலதனம் புதிய பண்டங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதன் மூலம் சந்தை நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதைப் போல உற்பத்தியானது பொருளுக்காக மனிதர்களையும், மனிதர்களுக்காக பொருட்களையும் உருவாக்குகிறது. (10)சர்வதேச நிதி மூலதனத்தின் ஆட்சியின் கீழ் முதலாளித்துவமானது லாப அதிகரிப்புக்காக பெரும் அளவில் ஊக வணிக வழிகளை விரிவுபடுத்துகிறது. பண்டங்களின் மதிப்பின் அடிப்படையிலான டெரிவேட்டிவ் என்ற ஊக வர்த்தக ஆவணம்,  இக்காலத்தின் நெருக்கடியையும், பேரழிவினையும் தோற்றுவித்த நிதிச் சரக்குகளில் ஒன்றாகும். (11).

3.8           சிலரின் தனிப்பட்ட பேராசையோ ஒழுங்காற்று அமைப்புக்களின் பலவீனமோ இன்றைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் அல்ல. மாறாக, முதலாளித்துவ அமைப்பு முறையின் உள்ளார்ந்த தன்மையாகிய – எதைச் செய்தாவது லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத வேட்கையே இதற்கான காரணமாகும்.

3.9           உற்பத்தி ஆற்றல்களை விரிவுபடுத்துவதற்காக லாபம் மறுமுதலீடு செய்யப்படுமானால் இதன் விளைவாக புதிய வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்படும். இதனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த தேவை அதிகரிப்பிற்கு இட்டுச் செல்லும். அது மேலும் தொழில்மயமாவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும். அதனால் உண்மைப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அதாவது (உற்பத்தி) விரிவாக்கத்தின் மூலம் மூலதனத் திரட்டலும் அதனைத் தொடர்ந்து (உபரியைத்) தனதாக்கிக் கொள்ளுதலும் நடைபெறும். ஆனால் சர்வதேச நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட மான திரட்சி,   உயர்ந்த பட்ச லாபத்துக்கான அதன் தேடல் ஆகியவை, இந்த நிகழ்முறைக்கு அப்பால் லாப அதிகரிப்புக்காக புதிய ஊக வணிக வழிகளையே தொடர்ந்து தேர்ந் தெடுத்துச் செல்லும்.

3.10         தொகுத்துக் கூறினால் உலக மக்கள் தொகையின் பெரும் பாலானோர் கரங்களில் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் உலகமயம், உடனடி லாபம் ஈட்டும் அதன் ஆர்வத்தின் காரணமாக, மலிவான வட்டியில் வீட்டு அடமான (சப்-பிரைம்) கடன்களை வழங்கும் உத்தியினை உருவாக்கியது. இப்படி மக்களின் வாங்கும் சக்தியை செயற்கையான முறையில் விரிவுபடுத்தக் கூடிய ஊக வணிகப் பாதையத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படையிலான நீர்க்குமிழிகளைத் உருவாக்குகிறது. கடன் தொகைகள் செலவிடப்படும் போது லாபம் ஈட்டப்படுகிறது என்ற போதிலும், உரிய நேரத்தில் வட்டிப் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் தவணைகள் தவறும் போது,  கடன் வாங்கிய வரைச் சீரழிப்பது மட்டுமல்லாமல், அமைப்பையே முடக்கி விடுகிறது. இதுதான் உண்மையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று, அதன் விளைவாக ஏற்பட்டது தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி.

3.11         சக்திமிக்க அரசியல் மாற்று இல்லாத நிலையில், முதலாளித்தவமானது இந்த நெருக்கடியிலிருந்து எழுந்து வரும். ஆனால்,  ஆதித் திரட்டலைத் தீவிரப்படுத்தும் நிகழ்முறையின் மூலம், சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தும் இது மேலும் பாதிப்பினையே ஏற்படுத்து. அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்தியம் வெறித்தனமான முறையில் இன்று செயல்படுவதை இன்று காணலாம்.

3.12         மீண்டும் மீண்டும் நெருக்கடிகள் தோன்றும் இத்தகைய நிகழ்முறைதான் உண்மையில் இன்று நடைபெறுகிறது. முதலாளித்தவ அரசானது தனது இயல்புக்கேற்ப எந்த பகாசுர நிதிநிறுவனங்கள் இந்த நெருக்கடியைத் தோற்றுவிப்பதற்கு முதற் காரணமாக இருந்தனவோ அந்த நிறுவனங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக நம்ப முடியாத அளவிலான பிரம்மாண்டமான தொகைகள் அடங்கிய மீட்பு நிதித் தொகுப்புகளை வழங்கி வருகிறது. இது ஒரு புறத்தில் இந்த பகாசுர நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெறவும், ஏராளமான லாபத்தைத் தோற்றவிக்கவும் தவிர்க்க முடியாதபடி அனுமதிக்கிறது. (12). ஆனால் இது மறுபுறத்தில் இந்த உதவித் தொகுப்புகளை வழங்குவதற்காக முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்கள்  ஏராளமான கடன்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தனது நிலையிலிருந்து முதலாளித்துவமானது அதன் தன்மைக்கு ஏற்ப லாபம் ஈட்டுவதற்கான வழிகளைப் பாதுகாத்துள்ளது. சொல்லப் போனால், உண்மையில் அதனை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதேநேரத்தில், பிரம்மாண்டமான அரசுக் கடன்களையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு கார்ப்பரேட் திவால்கள், அரசு திவால்களாக   மாற்றப்பட்டுவிட்டன. இது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல நாடுகளையும், அமெரிக்காவையும் கூட பாதித்து வருகிறது.

3.13         இத்தகைய அரசு திவால் நிலைகளால் ஏற்படும் சுமையும் கூட முதலாளித்துவத்தின் இயல்புக்கு ஏற்ப முன்னெப்போதும் இல்லாத பெருஞ்சுமைகளை தொழிலாளி வர்க்கத்தினர் மற்றும் உழைக்கும் மக்களின் தலைகளின் மீது ஏற்றுகிறது. (13). கடன்களை திருப்பிச் செலுத்துதற்காக செலவைக் குறைப்பது என்ற பெயரில் சிக்கன நடவடிக்கை தொகுப்பு திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. இவை தொழிலாளி வர்க்கத்தினரும், உழைக்கும் மக்களும் தற்போது அனுபவித்து வரும் பயன்களையும், உரிமைகளையும் கடுமையாக வெட்டிக் குறைக்கும் தன்மையில் அமைந்துள்ளன. இவ்வாறு மக்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தனது நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு முதலாளித்துவம் மீண்டும் ஒரு முறை முயன்று வருகிறது.

3.14         உலகமய முதலாளித்தவத்தின் இந்த குறிப்பிட்ட முயற்சியே, தன்னளவில் ஏற்கனவே சூழ்ந்து வரும் மேலும் ஆழமான நெருக்கடிக்கான விதைகளை ஊன்றி விடுகின்றன. இந்த சிக்கன நடவடிக்கைகள் வேலையின்மையைக் கடுமையாக அதிகரித்து மக்களின் வாங்கும் சக்தியை பெரும் அளவில் குறைத்துவிடுகிறது. இது    பொருளாதார மந்தத்தினை மேலும் தீவிரப்படுத்துகிறது.(14).

3.15         எனினும் நெருக்கடிகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்த போதிலும், முதலாளித்துவம் தானாகவே வீழ்ச்சியடைவதில்லை. இது குறித்து மார்க்சின் நிர்ணயிப்பினை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தின் கீழ் வளர்ச்சிக்கும், உற்பத்தி சக்திகளுக்கும் அப்போது நிலவி வரும் உற்பத்தி உறவுகளுக்கு மிடையே சமநிலையை மீண்டும் கொண்டு வருவதற்காக, உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதியை அழித்துவிடும். அதன் மூலம் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் முதலாளித்துவம் மேலும் வலிமையுடன் மீண்டுவரும் என மார்க்ஸ் கூறுகிறார். சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்முறையே இது.

3.16         தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் சமுதாயத்தில் ஒரு பௌதிக சக்தி வலுப்பட வேண்டும். இல்லாவிட்டால் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய முடியாது. வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், மக்களின் போரட்டங்களின் மூலமுமே அதை வலுப்படுத்த முடியும். அத்தகைய வலுவான சக்தி தொடுக்கும் அரசியல் தாக்குதல் மூலமே முதலாளித்துவத்தை அதிகாரத்திலிருந்து அகற்ற முடியும். இந்த பௌதீக சக்தியைக் கட்டுவதும், அந்த சக்தியின் வலிமையுமே அகவயக் காரணியாக இருக்கும். அதனை மேலும் பலப்படுத்துவது இன்றியமையாத அவசர அவசியக் கடமையாகும். நெருக்கடியின் திட்டவட்டமான நிலைமை எனும் புறவயக் காரணி புரட்சிகர முன்னேற்றத்துக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருந்த போதிலும், இந்த அகவயக் காரணியை பலப்படுத்தாமல் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான புரட்சிகரமான தாக்குதலாக அதனை உருமாற்றம் செய்ய முடியாது.

3.17         வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தவும், இத்தகைய திட்டவட்டமான நிலைமைகளின் சவால்களை எதிர் கொள்ளவும், பல்வேறு இடைக்கால கோஷங்கள், நடவடிக்கைகள் மற்றும் உத்திகளை தொழிலாளி வர்க்கம் பயன்படுத்த வேண்டியுள்ளது.   அகவயக் காரணியை பலப்படுததவும் அதன் மூலம் தத்தம் நாடுகளில் புரட்சிகர நிகழ்முறையை முன்னெடுத்துச் செல்லவும் இது தேவைப்படுகிறது.

IV

ஏகாதிபத்திய உலகமயத்தின் அரசியலும், தத்துவமும்

4.1           சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலங்கள் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. இதையடுத்து பிரகடனப்படுத்தப்பட்ட தனது மூன்று குறிக்கோள்களை நிறைவேற்றுவதன் மூலம், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.

4.2           எஞ்சியுள்ள சோஷலிச நாடுகளை கலைக்க முயற்சிப்பது அதன் முதல் குறிக்கோளாக உள்ளது. காலனி ஆதிக்க நிகழ் முறை அகற்றப்பட்ட பிறகு அணிசேரா இயக்கம் நடைமுறைக்கு வருவதற்கு காரணமாக இருந்த மூன்றாம் உலக தேசியத்தை தோற்கடிப்பது, அல்லது அரவணைத்துக் கொண்டு அதைச் செயலழிக்கச் செய்வது அதன் இரண்டாவது குறிக்கோளாக உள்ளது. பொதுவாக உலகின் மீதும், குறிப்பாக, போட்டியாளர்களாக கருதப்படும் நாடுகளின் மீதும், வெளிப்படையான ஐயத்துக்கிடமற்ற ராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது அதன் இறுதிக் குறிக்கோளாக உள்ளது.

4.3           அனைத்துத் துறைகளிலும் இயங்கும் விதத்தில் இந்த புதிய உலக ஒழுங்கமைவு வடிவமைக்கப்பட்டுள்ளது.(15). இது ஒருபுறத்தில் தன்னிச்சையான யுத்தங்களை ஏவிவிடுவதற்கும் இராக் நாட்டை ராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கவும் இட்டுச் சென்றது. மறுபுறத்தில் அமெரிக்க ராணுவ இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கு இது இட்டுச் சென்றது.(16). அதே நேரத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு நேட்டோ ராணுவக்கூட்டு தொடர்ந்து நீடிப்பதன் தேவை என்பது தானாக மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால், அந்த ராணுவக் கூட்டானது ஏகாதிபத்தியத்தின் உலகயுத்த எந்திரமாக மேலும் வலுப்படுத்தப்பட்டது.(17).

4.4           கேள்வி கேட்க முடியாத தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் தொடர்வதற்கும் உலகின் பொருளாதார வளங்களை, சிறப்பாக எரிசக்தி ஆதார வளங்களை, குறிப்பாக எண்ணெய் வளத்தை மேலும் அதிகமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவையாக உள்ளது. (18). எனவே தான் மேற்கு ஆசியாவை பற்றி அது அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை அமெரிக்கா தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.  இந்த வகையில் அதன் நீண்ட காலக் குறிக்கோளில் ஆப்கானிஸ்தான் மையமான இடத்தைப் பிடித்துள்ளது. (19). இஸ்ரேலை ராணுவ ரீதியாக முட்டுக் கொடுப்பதும், மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்ந்து நீடிக்கச் செய்வதும், அரசியல் மற்றும் ஆட்சிகளைக் கட்டுப்படுத்துவதும், இப்பகுதியின் ஆதார வளங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக ஆட்சி மாற்றம் என்பது ஏகாதிபத்தியத்தின் முறையான உரிமை என்ற நிலைக்கு உயர்த்துவதும், இந்த தேவையின் நேரடி விளைவாகும்.

4.5           அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்டும், முட்டுக் கொடுக்கப்பட்டு வரும் டுனிசியா, எகிப்து, ஏமன் மற்றும் பிற நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந் தெழுந்து கலகத்தில் ஈடுபட்டதை அரபு வசந்த எழுச்சி நிகழ்வுகளில் காண முடிந்தது. ஜனநாயகம், குடியுரிமைகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்துக்கான மக்களின் வேட்கை இதில் பிரதிபலித்தது. இந்த பிராந்தியத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய தனது கூட்டாளிகள் சிலரை இழந்துள்ள ஏகாதிபத்தியமானது, புதியதாக உருவாகி வரும் ஆட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்தவும், அவற்றைக் கட்டுப்படுத்து வதற்கும் லிபியாவில் ராணுவரீதியில் மிருகத்தனமான முறையில் குறுக்கிடுவது, பஹ்ரைனின் அரேபியக் குறுக் கீட்டை ஆதரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது.    இந்த நிகழ்ச்சிப்போக்குகள் மேலும் தம்மை வெளிப்படுத்தவுள்ள நிலையில் இந்த அரங்கில் ஏகாதிபத்தியத்தின் உள்முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. ஈரான், துருக்கி, சிரியா போன்ற மேற்கு ஆசிய நாடுகளும் தங்க ளுடைய பிராந்திய செல்வாக்கு களை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள முயன்று வருகின்றன.

4.6           ஆட்சி மாற்றங்களை ஏற்படுததுவதில் ஏகாதிபத்தியம் எங் கெல்லாம் வெற்றி பெற்றதோ அங்கெல்லாம் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளை திட்டமிட்ட முறையில் தாக்கு வதன் மூலம் அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் மத ரீதியான தீவிர சக்திகளுக்கு வாய்ப்புகளைத்தான் அது பல நேரங்களில் உருவாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளே நேர்மையான மற்றும் முரணற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளின் பிரதிநிதிகளாக இருப்பதால் அவற்றை பலவீனப்படுத்துவது என்பது ஏகாதிபத்தியத்தின் பிரகடனப்படுத்தப்பட்ட குறிக் கோளாக இருந்து வருகிறது. ஏகாதிபத்தியமும், மத அடிப் படைவாத சக்திகளும் இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்றன. இராக் நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பானது மத ரீதியிலான பிளவினை அதிகரித்துள்ளதுடன் அந்த சமுதாயத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அழித்துள்ளது. ஈரான் நாட்டின் எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்தும் தனது வேட்கையின் காரணமாக முன்னர் ஷாவின் ஆட்சியை அமெரிக்கா பதவியில் அமர்த்தியது. அது கம்யூனிஸ்ட்களையும், முற்போக்கு தேசியவாதிகளையும் திடடமிட்ட முறையிலும் மிருகத்தனமாகவும் பழிவாங்குவதற்கு இட்டுச் சென்றது. பிரதான எதிர்க்கட்சியாக இஸ்லாமிய மதகுருக்கள் மட்டுமே செயல்படுவதற்கான வாசல்களை அது திறந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த முற்போக்கு சக்திகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியின் விளைவாக முஜாகிதின்-தாலிபான் -ஒசாமா பின்லேடன் கூட்டு உருவாயிற்று. அதனைத் தோற்றுவித்த அமெரிக் காவையே பயமுறுத்தும் பூதமாக அது மாறியது. தற் போதைய அரபு வசந்த எழுச்சி நிகழ்வுகளிலும், இந்த நாடுகள் பலவற்றிலும் இத்தகைய அபாயங்கள் விரைவில் ஏற்படக் கூடும் என்று தோன்றுகிறது.

4.7           ஒரு துருவ உலக ஒழுங்கமைப்பை திணிக்கும் ஏகாதிபத்தி யத்தின் செயலுக்கு சக்திமிக்க தத்துவார்த்த தாக்குதல் முட்டுக் கொடுக்கிறது.   சுதந்திரச் சந்தையையே ஜனநாயகத் துக்கு சமமானதாக ஏகாதிபத்தியம் குறிப்பிடுகிறது. இத் தகைய போர்வையிலும் ஜனநாயகக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பது என்ற பெயரிலும் தனது மேலாதிக் கத்தை எதிர்க்கக்கூடிய நவீன தாராள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் சுதந்திரச்சந்தைத் திணிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்கக்கூடிய ஆட்சிகளுக்கு எதிராக அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தலையிட்டு வருகிறது.

4.8           மனித உரிமைகளையும் அனைவருக்கும் பொதுவான மாண்புகளையும் உயர்த்திப் பிடிப்பது என்ற பெயரில் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடுகளுக்கு எதிராக ராணுவ ரீதியில் ஏகாதிபத்தியம் தலையிடுகிறது. தனது அப்பட்டமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மூடி மறைத்து விட்டு, மனித உரிமைகள் மீறல் என்ற போலித்தன மான காரணத்தைக்கூறி முன்னாள் யூகோஸ்லேவியாவில் தலையிட்ட   ஏகாதிபத்தியம்  அந்நாட்டினை பிளவுபடுத்தி யுள்ளது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முன்னதாக வளர்ந்து வந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கங்கள் தங்களின் வர்க்க ஆட்சியினை வலுப்படுத்திக் கொள்வதற் காக தேசிய இறையாண்மை புனிதமானது என்ற கருத்தை ஆத ரித்தன. இன்று சுதந்திர நாடுகளின் தேசிய இறையாண்மை யினை மறுத்து அதை சீர்குலைக்கும் நோக்கத்தோடு மனித உரிமைகளை பாதுகாப்பது  என்ற பெயரில் ஏகாதிபத்தியம் ராணுவ ரீதியில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது.

4.9           நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதலையடுத்து பயங்கரவாதத்துக் கெதிரான உலக யுத்தம் ஒன்று அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் தலைமையின் கீழ் துவக்கப்பட்டது. இதனைப் பயன் படுத்தி இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான அப் பட்டமான அச்சுறுத்தல்களும், நியாயப்படுத்தப்படுகின்றன. தேசிய இறையாண்மையை காலில் போட்டு மிதிக்கவும், தனது நலன்களுக்கு பொருத்தமான முறையில் ஆட்சி மாற்றத்தைச் செய்வதற்காகவுமே ஏகாதிபத்தியம் இவ்வாறு செயல்பட்டு வருகிறது. ஏகாதிபத்தியத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் அரசு பயங்கரவாதமும், அடிப்படைவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்படும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. இந்த இரண்டு அபாயங்களுக்கும் எதிராக சக்திமிக்க வகையில் போராடாவிடடால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி காண முடியாது. பனிப்போர் காலத்தில் ராணுவக் குறுக்கீட்டை நியாயப்படுத்த கம்யூனிசத்துக்கு எதிராக யுத்தம் என்ற போலிக்காரணத்தைக் பயன்படுத்தி யதைப் போல, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில், சுதந்திர நாடுகளின் தேசிய இறையாண்மை மற்றும் அந்நாட்டு மக்களின் மனித உரிமைகளையும் ஏகாதிபத்தியம் சீர்குலைத்து வருகிறது.

4.10     கடுமையான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏகாதிபத் தியம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இப்போது கம்யூனிசத்தை சர்வாதிகாரத்துக்கும் பாசிசத்துக்கும் ஈடானதாக சித்தரித்து வருகிறது. கம்யூனிசத்தையும், பாசிசத்தையும் சமமாக சித் தரிக்கும் விதத்திலான சட்டங்களை இயற்றுவதற்கும் அதற் கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஐரோப்பிய நாடாளு மன்றம் முயன்று வருகிறது. செக்கோஸ்லொவாகியக் குடியர சிலும், போலந்திலும் உள்ளதைப் போல, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச அடையாளங்களும் நட வடிக்கைகளும் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக் கின்றன.

4.11     சோஷலிசம் என்பது சர்வாதிகாரத்தன்மை கொண்டதாக வும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் பொதுவான மனிதகுல மாண்புகள் குறித்த ஏகாதிபத்திய வரையறைக்கு நேர் எதிரானதாகவும் சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. சோஷலிச நாடுகளுக்கு எதிரான தத்துவார்த்த தாக்குதலில் மனித உரிமைகள் மற்றும் தனிநபர் உரிமை மீறல்கள் குறித்தே முழு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த போலிக் காரணத்தின் அடிப்படையிலேயே கியூபாவுக்கு எதிரான தனது அடா வடியான பொருளாதார முற்றுகையை அமெரிக்க ஏகாதி பத்தியம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

4.12     அறிவுத்துறை மற்றும் பண்பாட்டுத்துறையில், ஏகாதிபத் தியம் மற்றும் நவீன தாராளவாதத்தின் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக, இக்காலத்தில்  தத்துவார்த்த தாக்குதல் யுத்தத்தினையும் ஏகாதிபத்தியம் இக்காலத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. உலகமயத்தின் இந்த குறிப் பிட்ட நிகழ்முறை மற்றும் விரிவான உயர்ந்த தரத்திலுள்ள தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் தகவல், தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்குகள் ஆகியவை பிரம் மாண்டமான தொழில் நிறுவனங்களாக ஒன்றிணைவு இப்போது ஏற்பட்டு வருகிறது. ஸ20. மனித குல அறிவுத்தள செயல்பாட்டுத்துறை மற்றும் தகவல்களை பரப்புவதில் மீதான கட்டுப்பாடுகள் கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் இவ்வாறு ஏகபோகமாக ஆக்கப் பட்டிருக்கிறது. இது இக் காலத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இது முத லாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனத்திற்கும் அல்லது மாற்றுப் பாதைக்கும் எதிராக தத்துவார்த்த ரீதியான தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த உலகமய நிகழ்முறை கொண்டு வர முயலும் பண்பாட்டு மேலாதிக் கத்துக்கு மக்கள் மத்தியில் ஒரேமாதிரியான ரசனையுணர்வை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த ரசனையுணர்வை கூடுதலான அளவில் ஒரே மாதிரியாக இருக்கும் போது பெருந்திரளான மக்களுக்கான கலாச்சரப் பண்டங் களை எந்திர கதியில் மறு உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பங்களை வளர்ப்பது எளிதாகி விடுகிறது. இத்தகைய உலகயமாக்கலின் இயல்பான பின்விளைவாக கலாச்சாரம் வணிகப்படுத்தப்படுகிறது. வர்க்க மேலாதிக்கக் கண்ணோட் டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகமயக் கலாச் சாரம்  மக்களை தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் எதார்த்த நிலைகளுடனான தொடர்பை அறுப்பதற்கு முயல்கிறது. கலாச்சாரம் இங்கு அழகுணர்ச்சியின் மீதான ஈடுபாடாக  செயல்படுவதில்லை. மாறாக வறுமை மற்றும் துன்ப துயரம் போன்ற உடனடிப் பிரச்சனைகளிலிருந்து கவனத்தைச் சிதறடித்து, திசை மாற்றும் வகையில் அது செயல்படுகிறது.

4.13     தகவல், தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங் கள் தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சியும், ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது ஏகாதிபத்தியம் மிகவும் நுட்பமான உளவறியும் தொழில் நுட்பங்களை வளர்த்து அதை பராமரிப்பதற்கு அதற்கு அனுமதி அளிக் கிறது. அத்தகைய தொழில் நுட்பங்கள் ஏகாதிபத்தியத்தன் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் பல்வேறு வகையிலான மக்கள் இயக்கங்களை கண்காணித்து அவற்றில் தாக்கம் செலுத்தி அவைகளை சீர்குலைப்பதற்கு தொடர்ந்து அதிக மாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

4.14     மனித குலத்தின் புரட்சிகர முன்னேற்றத்தை எட்ட வேண்டு மானால், தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் ஒட்டு மொத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்து விட்டுள்ள தத்துவார்த்த தாக்குதலுக்கு எதிராக உறுதியாக போராடுவது தேவைப்படுகிறது.

V

நிலைமாற்ற இடைக்காலமும், இன்றைய உலக முதலாளித்துவமும்

5.1      சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் வீழ்ச்சியானது மார்க்சிய-லெனினியத்தையோ அல்லது சோஷலிச லட்சியத்தையோ மறுதலிக்கவில்லை. இதனை நமது 14வது கட்சிக் காங்கிரசின் சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானம் தெளிவுபடுத்துகிறது. மனிதகுல வாழ்க்கை மற்றும் நாகரிகத்தின் தரத்தினை வரலாறு காணா உயர்மட்டத்துக்கு எடுத்துச் செல்வதில், சோஷலிசம் ஒரு தீர்மானகரமான பங்களிப்பை  செய்துள்ளது. இந்த உண்மையை இந்தப் பின்னடைவுகளால் அடையாளம் தெரியாத வகையில் அழிப்பது என்பது இயலாத ஒன்று. (21)

5.2      முன்னெப்போதும் இல்லாத அளவிலும் புதிய புதிய சாதனைகளை 20ம் நூற்றாண்டில் சோஷலிசம் நிகழ்த்தியது என்றபோதிலும், அனைத்து சோஷலிசப் புரட்சிகளும்  ஒப்பளவில் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில்தான் நடைபெற்றன.  கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சில (அனைத்து நாடுகளும் அல்ல) நாடுகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்க முடியும். இந்த அம்சத்தினை மனதில் கொள்ள வேண்டும். உலகச் சந்தையின் மூன்றில், ஒரு பங்கை சோஷலிச நாடுகள் முதலாளித்துவமிடருந்து அகற்றி விட்டன. எனினும், உற்பத்தி சக்திகளை வளர்ப்பதில இது உலக முதலாளித்துவம் ஏற்கனவே எட்டிய முன்னேற்றத்தின் அளவுகளையோ அல்லது விஞ்ஞான தொழில்நட்ப முன் னேற்றங்களின் அடிப்படையில் உற்பத்தி சக்திகளையே மேலும் வளர்ப்பதற்கான முதலாளித்துவத்தின் திறனையோ கணிசமான அளவில் பாதிக்கவில்லை. 20ம் நூற்றாண்டின் சோஷலிசப் புரட்சிகளால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து மீண்டு, உற்பத்தி சக்திகளை வளர்ப்பதற்கும், முதலாளித்துவ சந்தையை மேலும் விரிவடையச் செய்வதற்கும் இது தடை யாக இல்லை. உலக முதலாளித்துவத்தை சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் அப்போதைய பலாபலங்கள் காரணமாக, நவீன காலனியாதிக்கத்தின் மூலம் முதலாளித்துவச் சந்தை யின் விரிவாக்கத்த ஏகாதிபத்தியத்தால் எட்ட முடிந்தது.

5.3      மறுபுறத்தில் ஒப்பளவில் ஒரு குறுகிய காலத்துக்குள் விரை வாகவும், உயர்ந்த தரத்திலும் குறிப்பாக ஏகாதிபத்தியம் உரு வாக்கிய சர்வதேச எதிர்ப்பு சூழலில் சோஷலிசம் நிகழ்த்திய சாதனைகள், இந்த முன்னேற்றங்களை பின்னோக்கித் தள்ளமுடியாது  என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. வீழ்த்தப் பட்ட முதலாளி வர்க்கம் நூறு மடங்கு சக்தியுடன் திருப்பித் தாக்கும் என்ற லெனினின் எச்சரிக்கை குறைத்து மதிப்பிடப் பட்டது.

5.4      உலக முதலாளித்துவத்தின் திறன்களைப் பற்றிய இத்தகைய குறை மதிப்பீடும் சோஷலிசத்தின் ஆற்றல், திறன் குறித்து இத்தகைய மிகை மதிப்பீடும் உலகக் கம்யூனிஸ்ட் இயக் கத்தின் நிர்ணயிப்புக்களில் பிரதிபலித்தன. பொது நெருக் கடியின் மூன்றாவது கட்டத்தில் இருந்ததன் காரணமாக, முதலாளித்துவத்தின் உடனடியான வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்ற முடிவு, 1960ல் 81 கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இக்கருத்து அப்போதைய காலத்தின் திட்டவட்டமான உலகச்சூழலை மதிப்பீடு செய்வதில் இழைக்கப்பட்ட மோசமான தவறு எனவும் அது உலக சோஷலிசத்தின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளியது எனவும் நமது 14-வது கட்சிக் காங்கிரசில் மறு மதிப்பீடு செய்துள்ளோம்.

5.5      மேலும் சோசலிசம் என்பது ஒரு நேர்கோட்டுப் பயணம்  என்று கருதப்பட்டது. சோஷலிச அமைப்பை ஒருமுறை எட்டிவிட்டால் வர்க்க பேதமற்ற கம்யூனிச சமுதாயத்தை அது எட்டும் வரை அதன் எதிர்காலப்பாதை தடைகள் எதுவும் இல்லாத  ஒரு நேர்கோட்டுப் பாதையாக இருக்கும் என்று தவறாக கருதப்பட்டது. சோஷலிசம் என்பது நிலைமாற்றத் துக்கான இடைக்காலம் அல்லது மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளது போல அது கம்யூனிசத்தின் முதல் கட்டம் – அதாவது ஒரு வர்க்க பேதமுள்ள சரண்டல் தன்மை கொண்ட முதலாளித் துவ ஒழுங்கமைவுக்கும், வர்க்க பேதமற்ற கம்யூனிச ஒழுங்கமை வுக்கும் இடைப்பட்ட காலம் என்பதை அனுபவமும் உறுதிப் படுததியுள்ளது. எனவே, இந்த நிலைமாற்ற இடைக் கால மானது – அதன் இலக்கணப்படி வர்க்க மோதல்கள் இல் லாமல் போவதைக் குறிக்கவில்லை – மாறாக தனது இழந்த பரப்பை மீண்டும் பெறுவதற்கு முதலாளித்துவம் முயல் வதால் அவை தீவிரமடைவதையே குறிக்கின்றன. எனவே, நீண்ட நெடிய காலமாகவும், வளைந்து நெளிந்து செல்லும் திருப்பங்கள் கொண்ட சிக்கலான ஒன்றாகவும் இருப்பது உறுதி.  குறிப்பாக சோஷலிசப்புரட்சி நிகழ்ந்த காலத்தில் முத லாளித்துவ ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகளில் இவ்வாறுதான் இருக்கும் என்று குறிப்பிடலாம். (22)

5.6      இந்த நிலைமாற்ற இடைக்காலத்தின் எந்தவொரு கட்டத் திலும் உலக சோஷலிச சக்திகளின் வெற்றி அல்லது தோல்வி யானது சோஷலிசக் கட்டுமானத்தில் எட்டப்பட்ட வெற்றி கள் (23)மற்றும் உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலங்கள் ஆகியவை குறித்த சரியான மதிப்பீடு ஆகிய இரண்டினாலுமே நிர்ணயிக்கப் படுகின்றன. சோஷலிச நாடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த வர்க்கப்பகைமை குறைத்து மதிப்பிடப்பட்டது;  சோஷலிசம்  மிகையாக  மதிப்பிடப் பட்டது.  இத்தகைய தவறான கணக்கீ டானது சோஷலிச நாடுகள் எதிர் கொண்ட பிரச்சனை களையும்,  அதேபோல உலக முதலாளித்துவம் அடைந்த முன்னேற்றங்களையும் அவை உறுதிபட்டதையும் புறக் கணிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியது.

5.7      21ம் நூற்றாண்டில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச அனுபவம் குறித்த மிகவும் பயனுள்ள பாடங்களைப் பெற்றுள்ளோம். அதே வேளை யில், 21ம் நூற்றாண்டில் முதலாளித்துவத்திலிருந்து சோஷ லிசத்திற்கு இட்டுச் செல்லும் நிலைமாற்ற இடைக்காலம் இந்த அனுபவங்களின் மறுபதிப்பாக இருக்க முடியாது என்பது தெளிவு.

5.8      20ம் நூற்றாண்டில் சோஷலிசம் அளித்த உத்வேகம் உலக அளவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களினால் ஏற்பட்ட மறைக்க முடியாத தாக்கங்களில் ஒன்றாக ஜனநாயக உரிமைகள் மற்றும்குடியுரிமைகள் வலுப்பட்டதைக் குறிப் பிடலாம். (அவ்வாறு கிடைத்த பல உரிமைகளில் பெண் களின் வாக்களிக்கும் உரிமையை உதாரணமாக குறிப்பிடலாம்). இவற்றுடன் இணைந்து, தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் வரலாறு காணா வகையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்க வேண்டிய கட்டாயம் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது. எனவே, அனைவருக்கும் பொதுவானவையாக இன்று கருதப்படும் இந்த உரிமைகள் மக்கள் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டனவே அன்றி முதலாளி வர்க்கத்தின் கருணையின் காரணமாக வழங்கப்பட்டவை அல்ல.

5.9      வரலாற்றின் இறுதியில், சோஷலிசம் வெற்றி பெறுவது தவிர்க்க முடியாதது. எனினும், 21ம் நூற்றாண்டில், சோஷ லிசத்தை நோக்கிய நிலைமாற்றம் மற்றும் உருமாற்றத்திற்கான இந்த இடைக்கால யுகமானது, ஒரு நீண்ட நெடிய போராட்ட மாகவே இருக்கும் என்பது உறுதி. வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தத்தம் நாடுகளில் இந்நிகழ் முறையை விரைவு படுத்துவது கம்யூனிஸ்ட்கள், தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து முற்போக்குப் பிரிவினரின் கடமையாகும். அதேநேரத்தில் அத்தகைய நிகழ்முறையினை வலிவுடன் பின்னோக்கித் தள்ளுவதற்கு ஏகாதிபத்தியம் தொடர்ந்து முயலவே செய்யும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

5.10     எனவே, 21-ம் நூற்றாண்டில் சோஷலிசத்துக்கான போராட்ட மானது மனிதப்பண்புடையோர்  மற்றவரை சுரண்டுவது மற்றும் தேசத்தை தேசம் சுரண்டுவது ஆகியவை இல்லாத ஒரு அமைப்பை நிறுவுவதற்கான போராட்டமாக இருக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளையும், குடியுரிமை களையும் மேலும் வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாக அத்தகைய அமைப்பு இருக்க வேண்டும். அந்த அமைப்பு முறையானது முதலாளித்துவத்தை விட மேன்மை யானது என்பதை நிலை நாட்ட வேண்டும். சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது இந்த இடைக் காலத்தின் கோட்பாடாக இருக்கும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில், உற்பத்தித் திறன் உயர்வும், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் எட்டப்பட வேண்டும். இறுதியாக, அது தேவைக்கேற்ற ஊதியம் என்ற கோட்பாட்டைக் கொண்ட கம்யூனிச சமுதாயத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். சமூக வாழ்வின் அரசியல், சமூகம், பண்பாடு போன்ற அனைத்துத் துறைகளிலும் திரளான பொது மக்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்வதன் மூலம் இத்தகைய மேன்மை நிலை நிறுவப்பட வேண்டும்.

5.11     நமது 14வது கட்சிக் காங்கிரஸ் தீர்மானம், சோஷலிச சமூக அமைப்பின் கீழ் ஜனநாயகம், சொத்து வடிவங்கள், திட்ட மிடுதலுக்கும் சந்தைக்குமிடையேயான தொடர்பு ஆகியவை குறித்த நமது புரிதலை வழங்கியுள்ளது. அவற்றில் பலவும் மேம்படுத்தப்பட்ட நமது கட்சித்திட்டத்தின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன. இவையே நமது புரிதலுக்கான தொடர்ந்த வழிகாட்டியாக இருந்து வரும்.

5.12     அரசுத் துறை என்பது சோஷலிசத்தின் கீழ் உற்பத்தி சாத னங்களின் சமூக உடைமையின் உறுதியான அடித்தளமாக அமைந்திருக்கும் என்ற போதிலும், அரசுக்கு சொந்தமான துறை என்பதையே சோஷலிசத்துக்கு சமமானதாக இயந்திர கதியில் சித்தரிக்கக்கூடாது. பல்வேறு வடிவங்களிலான சொத்துடைமைகள்  மூலம், சோஷலிச அரசு அதன் பொரு ளாதார உயிர்நாடி அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு சொற்களில் கூறினால், முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரமே (அதாவது லாப அதிகரிப்பே) அதன் அரசியலை நிர்ண யிக்கும். இதற்கு மாறாக, அரசியலே அதன் பொருளா தாரத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டினை  21-ம் நூற்றாண்டின் சோஷலிசம் நிலை நாட்ட வேண்டும். உலக சமூக முரண்பாடுகள்

5.13     இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இந்த நிலைமாற்ற இடைக்காலம்,  அனைத்து முக்கிய உலக சமூக முரண்பாடு களும் வெவ்வேறு அளவுகளிலும் வெவ்வேறு துறைகளிலும் கூர்மையடையும் காலமாகவும் இருந்து வருகிறது. நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை நிலவும் இன்றைய சூழலில் முதலாளித்துவத்தின் கீழ் உழைப்புக்கும் மூலதனத்துக்கு மிடையிலான அடிப்படை முரண்பாடானது கடுமையான முறையில் தீவிரமடைந்துவருகிறது. ஒரு புறத்தில்  தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள  ஏகாதிபத்தியம் நடவடிக்கைகளில்  இறங்கும் போதே, வளர்முக நாடுகளின் ஆளும் வர்க்கங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் கொண்டு வர முயல்கிறது. இது, ஏகாதிபத்தியத்துக்கும் வளர்முக நாடுகளின் மக்களுக்கும் இடையேயான முரண் பாடுகள் தீவிரமடைவதற்கு இட்டுச் செல்வதாக அமையும். ஏகாதிபத்தியத்தின் உள்முரண்பாடுகள் பல்வேறு துறை களிலும் பல்வேறு வடிவங்களிலும் தம்மை வெளிப்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் லாப அதிகரிப்புக்காக உலகளாவிய சுரண்டலை தீவிரப்படுத்துவதன் பின்புலத்தில், அந்த முரண்பாடுகள் தற்போது அடங்கிய நிலையில் இருந்து வருகின்றன. ஏகாதிபத்தியத்துக்கும் சோஷலிசத்திற்கு மிடையேயான முரண்பாடே,  இந்த நிலைமாற்ற இடைக் காலத்தின் மையமான முரண்பாடாக நீடித்து வருகிறது. எத்தகைய குறிப்பிட்ட பொருளாதார நிலையிலும் உலக நிகழ்வுகளுக்கு ஏற்ப இந்த முரண்பாடுகளில் ஏதோவொன்று முன்னுக்கு வரும். ஆனால், அது மைய முரண்பாட்டின் இடத்தைப் பிடிக்காது. 

5,14     எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் பல்வேறு முரண்பாடுகள் இருக்கக் கூடும். இருப்பினும், மேலே குறிப்பிட் டுள்ள நான்கு முக்கிய முரண்பாடுகளையே இந்த நிலைமாற்ற இடைக்காலத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி அதன் வேகத்தையும், தன்மையையும் தீர்மானிக்கக்கூடிய முக்கிய உலக சமூக முரண்பாடுகளாக சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரித்துள்ளது. எனினும் அண்மை ஆண்டு களில் உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும், உபரியை தனதாக்கிக் கொள்ளும் தனி நபர் தன்மைக்குமிடையேயான முதலாளித் துவத்தின் அடிப்படை முரண்பாடானது, லாபத்தை அதி கரிக்கும் அதன் முயற்சிகளில் உலகச் சுற்றுச்சூழலை ஒரு மோசமான முறையில் சீரழித்து வருகிறது. ஏகாதிபத்திய உலகமய காலத்தில் இது மேலும் தீவிரமாகியுள்ளது. உலக தட்பவெப்ப நிலை மாற்றங்களின் மூலம் கடுமையான சமச்சீரற்ற நிலையை உருவாக்கி மனிதகுல வாழ்விற்கே கடுமையானஅச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்கும் பசுங்கூட வாயு வெளியேற்றத்தினைக் குறைப்பது தேவையாக உள்ளது. ஆனால், ஏகாதிபத்தியம் அதற்கான சுமைகளை வளரும் நாடுகளின் பக்கம் தள்ளி விடும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இது ஏகாதிபத்தியத்துக்கும், வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாடு தீவிரமடைவதில் ஒரு புதிய அம்சத்தை  இயங்கச் செய்துள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்து தற்போது நடைபெற்று வரும், உலக அளவிலான பேச்சு வார்த்தைகளில் இது பிரதிபலித்துள்ளது. அப்பேச்சு வார்த்தைகளின் போது லாப அதிகரிப்புக்காக  சுற்றுச்சூழலை முந்தைய காலங்களிலும் தற்போதும் தொழில் வளர்ச்சி யடைந்த  நாடுகள் தொடர்ந்து சூறையாடி வருகின்றன; எனவே, அந்த சமநிலை இன்மையை சீர்படுத்துவதற்கான அவைகளின் பொறுப்பும் கூடுதலானது. இதை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்த பொதுவானதாலும், வேறுபட்ட பொறுப்புக்கள் என்ற அடிப்படையில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கூடுதல் பொறுப்பினை, அதற்காக அவர்கள் அளித்த வாக்குறுதிகளை, இப்போது தொழில் வளர்ச்சி யடைந்த நாடுகள் புறந்தள்ளுகின்றன. சுற்றுச்சூழல் சீரழிவுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு அனைத்து மனித உயிர்களுக்கும் கரிப்பரப்பில்அடிப்படை சமத்துவம் அளிக்கப்படுவதை மறுதலிக்க அவை முயல்கின்றன. உலகச் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சுமைகளை வளர்முக நாடுகளின் பக்கம் தள்ளிவிடுவதற்கான இந்த முயற்சிகள் இன்றைய சூழல்களில் ஏகாதிபத்தியம் தீவிரப்படுத்தி வரும் உலக வர்க்கச்சுரண்டலின் பகுதியாக உள்ளன. ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சிகளுக்கு உலக முதலாளித் துவத்துக்கு எதிரான சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய கூறாக இன்றைய தினம் அமைந்துள்ளன.

5.15     இத்தகைய சூழ்நிலைகளில் தங்களுடைய எதிர்கால வாழ்க் கைச் சூழலை வடிவமைக்கக்கூடிய தற்போதைய எதார்த்த நிலைகளுக்கு ஏற்படும் சவால்களை, ஒவ்வொரு நாட்டு மக்களும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சவால்களை சமாளிப்பதற்கு பரவலான மக்களின் போராட்டங்களை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்தும் திட்டமிட வேண்டியிருக்கும். உலகின் சமூக உருமாற்றத்திற்கான மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் எந்த அளவுக்கு அவர்கள் வெற்றி பெறுவார்களோ, அதுவே இந்த நிலைமாற்ற இடைக் காலத்தின் வேகத்தை தீர் மானிக்கும்.

VI

சோஷலிச நாடுகளின் வளர்ச்சிப் போக்குகள்

6.1      இன்றைய மெய்யான நிலைகளில், சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில், சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமை யிலும், அதனால் இயக்கப்பட்டு வரும் உலகமயத்தினால் முன்னுக்கு வந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக  தற்போதைய சோஷலிச நாடுகள் ஒரு பொருளாதார சீர் திருத்த வழியில் பயணித்து வருகின்றன. உலகின் அனைத்து நாடுகளையும், தனது சுழலுக்குள் உலகமயம் இழுத்துக் கொண்டுள்ள நிலையில் தங்களுடைய பொருளாதாரங்களை சர்வதேசச் சந்தையுடன் ஒருங்கிணைப்பதை இந்த சீர்திருத் தங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த இடை மாற்ற காலத்தில் இந்நாடுகள் இந்த சவால்களை எந்த விதத்தில் எதிர்கொள்கின்றன என்பது மிகவும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

6,2      உற்பத்தி சாதனங்கள் மக்களின் உடைமையாகவும், உபரியை தனிநபர்கள் வசப்படுத்திக் கொள்வதற்கு மாறாக அதனை சமூகம் தனதாக்கிக் கொள்வது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்த சீர்திருத்த நிகழ்முறை சோஷலிசத்தை மறுதளிக்கும் விளைவை ஏற்படுத்தி வரு கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இந்நாடுகள் அனைத்திலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வேகமாக விரிவடைதல், லஞ்ச ஊழல், மற்றும் சொந்த ஆதாயத்துக்கான அதிகார துஷ்பிரயோகம் போன்ற எதிரமறையான போக்குகள் இந்த சீர்திருத்த நிகழ்முறையின் போது தலை தூக்கியுள்ளன. இவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகளாலேயே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்பதுடன் அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் சரி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதை நாம் காண முடிகிறது. எழக்கூடிய முக்கிய கேள்வி இதுதான். சுரண்டல் தன்மை கொண்ட முதலாளித்துவ வர்க்கம் உருவாவதற்கும் , அது எதிர்காலத்தில் ஒரு எதிர்ப் புரட்சிக்குத் தலைமை ஏற்று அது வெற்றி பெறுவதற்கான வல்லமையை வளர்த்துக் கொள்ளும் நிலைமைக்கு இந்த சீர்திருத்த நிகழ்முறை இட்டுச் செல்கிறதா? அல்லது இன்றைய உலக யதார்த்தத்தில் தற்போதைய சீர்திருத்தங் களின் கீழ் இந்த சக்திகளுக்கிடையேயான பலாபலன்கள் சோஷலிசம் உறுதிப்படுத்துவதற்கும் மேலும் பலப்படு வதற்கும் இட்டுச் செல்லுமா?

6.3      மெய்யான நிலைகளைப் பற்றிய மெய்யான பகுப்பாய்வு என்ற அடிப்படையில் ஒவ்வொரு சோஷலிசப்புரட்சியும் முத லாளித்துவத்தை விட மேன்மைமிக்க ஒரு அமைப்பு முறை யாக சோஷலிசத்தை நிலை நாட்டுவதற்காக தொழிலாளி வர்க்க அரசமைப்பின் கீழ் உற்பத்தி சக்திகளை சமூக சார் புடையதாக்கி விரைவாக வளர்ப்பதற்கான தனது சொந்த அணுகுமுறையை வடிவமைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு செய்ய முடியும் என்பது ஒவ்வொரு புரட்சியும் எதிர்கொள்ளும் மெய்மைச் சூழல்களையும், உள் நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலன்களின் வலிமையையும், தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கும். சீனா

6.4      சீர்திருத்தத்துக்கு பிந்தைய சோஷலிச சீனாவில் நாம் காண்பது புதிய பொருளாதாரக் கொள்கை (சூநுஞ) காலத்தில் அரசு முதலாளித்துவம் குறித்து லெனின் எடுத்த தத்துவார்த்த நிலைபாட்டை ஓரளவு பிரதிபலிக்கிறது. இதில் அடங்கியுள்ள முக்கிய பிரச்சனையாதெனில் ஒரு பின்தங்கிய பொருளா தாரத்தின் உற்பத்தி சக்திகளை விரிவான அளவி லான சோஷலிசக் கட்டுமானத்தை தாங்கிப்பிடிக்கும் அளவுக்கு அதிகரிப்பதாகும். தனது காலத்தில் லெனின்-மெய்யான உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலின் அடிப்படையில், பின்தங்கிய உற்பத்தி சக்திகளுக்கும் முன்னேறிய சோஷலிச உற்பத்தி உறவுகளுக்குமிடையேயான இடைவெளியை விரைவாக இட்டு நிரப்புவதற்கு தொடர்ந்து முயற்சித்தார். (24) ஆனால் சோஷலிசக் கட்டுமானத்துக்கான இந்த சோவியத் வரலாற்றுப்பாதை வேறுபட்ட வரலாற்றுச் சூழல்களில் நடைபெற்றது. (25)

6.5      இன்றைய சீனாவில் எட்டப்பட முயற்சிப்பது யாதெனில், உற்பத்தி சக்திகளின் அளவுகளுக்கும், சோஷலிசத்தின் கீழான உற்பத்தி உறவுகளுக்குமிடையே ஒத்திசைவை ஏற் படுத்துவதாகும். உற்பத்தி சக்திகளின் கீழான அளவுகளில் முன்னேறிய சோஷலிச உற்பத்தி உறவுகள் நீடித்திருக்க முடியாது. கீழான அளவிலான உற்பத்தி சக்திகள் ஒரு நீண்ட காலத்துக்கு இருக்குமானால் அது சோஷலிசத்தின் கீழ் அன்றாடம் அதிகரித்து வரும் மக்களின் பௌதீக மற்றும் பண்பாட்டுத் தேவைகளுக்கும் பின்தங்கிய உற்பத்தி சக்தி களுக்குமிடையே ஒரு பெரும் முரண்பாட்டைத் தோற்று விக்கும். இந்த முரண்பாடு தீர்க்கப்படாமல் நீடிக்குமானால் சீனாவால் சோஷலிசமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற முடிவுக்கு சீனக்கம்யூனிஸ்ட் கட்சி வந்துள்ளது.

6.6      சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயல்திட்டம் தனது கடமையை பின்வருமாறு சித்தரித்துள்ளது. சீனா சோஷ லிசத்தின் ஆரம்ப கட்டததில் உள்ளது. நீண்ட காலத்துக்கு அது அவ்வாறே நீடிக்கும். இது ஒரு வரலாற்றுக்கட்டம்.  சோஷலிச பொருளாதார ரீதியிலும பண்பாட்டளவிலும் பின்தங்கிய நிலையில் உள்ள சீனாவின் நவீனமயத்தில் இதனைத் தவிர்த்து விட்டு மேலே தாண்டிச் செல்ல முடியாது. இது ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும். சோஷலிசக் கட்டுமானத்தில் நாம் நமது குறிப்பிட்ட நிலைகளிலிருந்து தொடர்ந்து மேற்சென்று சீனாவுக்குரிய தனித்தன்மை கொண்ட சோஷலிசப்பாதையில் பயணிக்க வேண்டும்.

6.7      சோஷலிசத்ததின் ஆரம்ப கட்டம் குறித்த ஒரு தத்துவார்த்த கோட்பாட்டை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ளது. இது முன்னரே குறிப்பிட்டுள்ளதைப் போல மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோரே கூறியுள்ளதற்கு ஏற்பவும் பிந்தைய காலத்தின் அனைத்து மார்க்சிஸ்டுகளும் ஒப்புக்கொண்ட தற்கு ஏற்பவும் அமைந்துள்ளது. அதாவது சோஷலிச கட்டம் என்பது முதலாளித்துவத்துக்கும், கம்யூனிசத்துக்கும் இடையேயான ஒரு இடைமாற்ற கட்டம். எனவே, இது கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டமாக அமைந்திருக்கும். எனினும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி இதனையும் தாண்டி ஒருபடி மேலே சென்றுள்ளது. அதாவது இந்த இடைப்பட்ட காலத்தில் புரட்சிக்காலத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் அளவுகளைச் சார்ந்து அது பல்வேறு கட்டங்களைக் கொண்டதாக இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. இது சீனக் கம்யூனிஸ்ட் கடசியின் 13வது மாநாட்டில் முறையாக விளக்கப்பட்டது. புரட்சி நடைபெற்ற காலத்தில் ஒரு பின்தங்கிய, அரைநிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய நாடாக சீனா இருந்தது என்பதால் அதன் பொருளா தாரத்தின் சோஷலிச உருமாற்றம் மிகவும் கீழான நிலை களிலிருந்து தொடங்கி நடத்தப்பட வேண்டிய என்ற கட்டத்தில் இருந்தது. இந்த நிகழ்முறையைத்தான் சீனாவுக் குரிய தனித்தன்மை கொண்ட சோஷலிசத்தைக் கட்டுதல் என்று அவர்கள் அழைக்கின்றனர்.

6.8      இத்தகைய உருமாற்றத்தை எட்டுவதற்கு சோஷலிச சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டுவதற்கு என்ற மற்றொரு தத்துவார்த்தக் கோட்பாட்டை சீனக்கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. சரக்கு உற்பத்தி இருக்கும் வரை இந்த சரக்கு களின் பரிமாற்றத்துக்கு ஒரு சந்தை தேவைப்படும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

6.9      சீனாவில் உருவாக்க முயற்சிப்படுவது யாதெனில் – சோஷலிச அரசின் கீழ் அமைந்த சரக்கு சந்தைப் பொருளாதாரமும், அதில் உற்பத்தி சாதனங்களின் பொது உடைமையே மூலா தாரமாக இருப்பதுமாகும். இதன்மூலம் சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உணர்த்துவது யாதெனில், முதலாவதாக, ஒட்டு மொத்த சமூக மூலதனத்தில் பொது மூலதனமே மேலா திக்கம் வகிக்கும். இரண்டாவதாக, பொருளாதாரத்தின் உயிர் நாடியை அரசுப்பொருளாதாரமே கட்டுப்படுத்தி தேசியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் பங் களிப்பு செய்யும் பொருளாதார ரீதியில் எதிர் எதிராகப் பிளவுபட்டு நிற்பதையும் தனியார் சந்தைப் பொருளா தாரத்தினால் உருவாக்கப்படும் பொருளாதார குவிப்பு மற்றும் மேலும் மேலும் அதிகரிக்கக் கூடிய ஏற்றத் தாழ்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் உழைக்கும் மக்களின் பொதுவான வாழ்வு வளத்தை உறுதிபடுத்துவதற்கும் அவர்கள் இதன்மூலம் முயற்சிக்கின்றனர்.

6.10     இந்த சீர்திருத்தங்கள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி யுள்ளன என்பதில சந்தேகமில்லை. சீனப்பொருளாதாரம் கடந்த 30 ஆண்டகளாக ஆண்டுக்கு 9 சதத்திற்கும் மேலான வியப்புக்குரிய வளர்ச்சியைப் பெற்றது. 1981 முதல் 2005 வரையிலான காலத்தின் வறுமை நிலையானது பண அளவில் கணக்கிட்ட போது 80 சதம் அளவுக்கு வீழ்சசி யடைந்துள்ளது. சீர்திருத்தங்களைத் துவக்கியபோது 1980-ன் மொத்த தேசிய உற்பத்திப் பொருட்களை இரண்டு மடங் காக்கவும், மக்களுடைய அடிப்படை வாழ்க்கைத்தேவை களை பூர்த்தி செய்திடவும் சீனா திட்டமிட்டிருந்தது. 1980ன் உற்பத்தி அளவை இரண்டு மடங்காகவும், 20-ம் நூற் றாண்டின் இறுதியில் ஆரம்ப கட்ட செல்வச்செழிப்பையும் எட்டுவதும் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் லட்சியங்களும் எட்டப்பட்டு விட்டன. கடந்த கால மாவோயிசப் பாதையி லிருந்து முறிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் இவை அனைத்தும் சாத்தியாமாயிற்று என்று கூற முடியாது. மாறாக, மையப்படுத்த திட்டமிடுதலின் மூலம் முதல் முப்ப தாண்டுகளில் போடப்பட்ட உறுதியான அடித்தளத்தின் மீது பெற்ற வளர்ச்சியினலேயே இது எட்டப்பட்டது. மக்கள் சீனம் அமைக்கப்பட்டதன் 100-வது ஆண்டு நிறைவுக்குள் அதாவது 2049க்குள் நபர் அடிப்படையிலான மொத்த தேசிய உற்பத்தியை இடைத்தர வளர்ச்சி அடைந்த நாடுகளின் மட்டத்தை எட்டுவதை அதன் மூன்றாவது நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

6.11     33 ஆண்டுகளின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு சீனாவின் மொத்த பொருளாதார உற்பத்தி அளவு 2010-ல் 5.88 லட்சம் கோடி டாலர் என்ற நிலையை எட்டியது. இது 1978ம் ஆண்டின் நிலையைப் போல 16 மடங்குகள் ஆகும். அதே போல உலக சராசரியுடன் ஒப்பிடும்போது சீனாவின் நபர் அடிப்படையிலான வருமானம் 2005ல் 24.9 சதவிகிதமாக இருந்தது. 2010ல் 46.8 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்தது. நாட்டின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தின் அளவு 1978ல் 2060 கோடி டாலராக இருந்தது. 2010ல் 2.974 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி அடைந்தது. 1979 முதல் 2010 வரை பயன்படுத்தப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டின் அளவு 1.048 லட்சம் கோடி டாலராகும்.

6.12     சீனாவின் சீர்திருத்த நிகழ்முறையும் இந்த பல பத்தாண்டு களின் காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. சீர் திருத்தங்கள் 1978ம் ஆண்டில் துவங்கப்பட்டன என்ற போதிலும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் உலகச்சூழலை சமநிலைப்படுத்தி வந்த எதிர்நிலை சோஷலிச சக்தி இல் லாமல்போனதும் ஒரு புதிய உலகச்சூழலைத் தோற்றுவித்தது. இதனை ஏற்கெனவே மதிப்பீடு செய்துள்ளோம். இதே காலத்தில் தியானன் மென் சதுக்க நிகழ்வுகள் போன்ற உள் நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வுகளை சீர் திருத்த நிகழ்முறை  பாதையில் பல திருத்தங்களுக்கு இட்டுச் சென்றன. (26)

6.13     1990களில்தான் பல்வேறு துறைகளில் தனியார்துறையின் விரைவான விரிவாக்கமும் சுகாதாரம், கல்வி, கிராமப்புறப் பகுதிகளின் சமூகப்பணிகள் ஆகியவற்றுக்கான பொது ஒதுக் கீடுகள் பலவீனமடைவதும் நிகழ்ந்தன. 2005-ம் ஆண்டில் தொழில்துறையின் மதிப்பு சேர்ப்பு, தனியார் துறையின் அளவு 50 சதமாக இருந்தது. அவற்றில் பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர் களின் எண்ணிக்கையைப் போல இரண்டு மடங்கு எண்ணிக் கையில் ஊழியர்கள் நியமனம் பெற்றிருந்தனர். எனினும் அண்மைக்காலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி (அமெ ரிக்க நாடாளுமன்றக் குழுக்களுக் காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின்படி) அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்கள் 2003-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதத்துக்கும் சமம் என்ற நிலையில் இருந்தது. இது 2010 மத்தியில் மொத்த உள்நாட்டு உற்த்தி 62 சதவிகிதத்துக்கு சமமாக உயர்ந்தது. 2010 இறுதியில் உளந்ட்டுப்பங்குச்சந்தை முதலீட்டில் அரசின் ஆதிக்கத்தில இருகக வேண்டிய துறை களில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 80 சதவிகிதம் அளவுக்கு முதலீடு செய்து உண்மையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதேபோல உள்நாட்டுத்தனியார் நிறுவனங்களி லிருந்து கிடைக்கும் வரி வருவாய் மொத்த வருவாயில் 15 சதவிகிதத்தை விடக்குறைவாக இருந்தது. உலகின் மிகப் பெரும் நிறுவனங்கள் குறித்த பார்ச்சூன் (குடிசவரநே) 500 பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரதான சீனப்பகுதியைச் சேர்ந்த 42 கம்பெனிகளில் மூன்றைத்தவிர மற்றவை அனைத் தும் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. 500 மிகப்பெரும் சீனக்கம்பெனிகள் குறித்த சீனாவின் சொந்த பட்டியல் 75 தொழில்களுக்கு விரிவடைந்துள்ளது. இவற்றில் 29 தொழில் களில் ஒரு தனியார்துறை நிறுவனம் கூட இடம்பெறவில்லை. வேறு 10 தொழில்களில் அவை மிகச்சிறய பங்களிப்பையே செய்கின்றன. அரசின் ஆதிக்கத்தில் உள்ள மொத்தமுள்ள 500 கம்பெனிகளின் சொத்துக்களில் 85 சதவிகிதத்தை இந்த 39 நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. மொத்த நிறுவனங் களின் எண்ணிக்கையில 3.1 சதவிகிதம் அளவிலேயே உள்ள அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சராசரி அளவு அரசுத்துறை சாராத நிறுவனங்களின் சராசரி அளவை விட மிகவும் பெரியவை. சராசரி சொத்துக்களின் அடிப்படையில் கணக்கிட்டால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்கள் அரசு சாராத நிறுவனங்களின் சொத்துக் களைப் போல் 13.4 மடங்குக்கு சமமானது. அரசுக்குச் சொந்மான தொழில்துறை நிறுவனங்களின் சொத்துக்களின் சராசரி அளவு 1999ல் 13 கோடியே 40 லட்சம் ரென்மின்பி (சீன நாணயம்) ஆக இருந்தது 2008ல் 92 கோடியே 30 லட்சம் ரென்மின்பி ஆக அதிகரித்துள்ளது. அதாவது 9 ஆண்டுகளில் 589 சதவிகிதம் அளவு விரிவடைந்துள்ளது. இதற்கிடையே அரசு சாராத நிறுவனங்களின் சொத்துக்களின் சராசரி அளவு 3 கோடியே 60 லட்சம் ரென்மின்பி-லிருந்து 6 கோடி ரென்மின்பி என்ற மிதமான அளவில் வளர்ச்சி பெற் றுள்ளது. இது 67 சதம் குறைவான வளர்ச்சியேயாகும்.  

6.14     இவ்வாறு தொழில்துறை மற்றும் பணித்துறைகளில் தனியார்துறை நிறுவனங்கள் அதிகரித்து வரும் வேளையில் அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்களிடமே மைய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் கட்டுப்பாடு இருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 50 உயர் மட்ட அரசுத்துறை நிறுவனங்கள் வலுவாக ஒன்றிணைக்கப் பட்டுள்ளன. சுரங்கத்துறை, எண்ணெய், இரும்பு, எஃகு, தொலைத்தொடர்பு, வங்கி, எரிசக்தி, ஆற்றல், தொடர் வண்டித்துறை மற்றும் துறைமுகத்துறை மீது அவை பொரு ளாதார மேலாண்மையை செலுத்தி வருகின்றன.

6,15     சீர்திருத்தங்களின் இரண்டாவது கட்டம் கிராமப்புறங்களின் மீதும் அதிகரித்து வந்த கிராமப்புற-நக்ர்ப்புற இடைவெளி யின் மீதும் கவனம் செலுத்தியது. 2006ம் ஆண்டுக்குப் பிறகு தான் சீன அரசாங்கம் விவசாய வரியை நீக்குதல், தானிய விலை மானியத்தை அதிகரித்தல், கிராமப்புற சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவை அதிகரிப்பது போன்ற நட வடிக்கைகளை எடுத்தது. அரசின் திட்ட முறையும் தலையீடும் சில ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு இன்னமும் செயல்பட்டு வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

6.16     எனினும் இந்த வளர்ச்சிப்போக்குகள் காரணமாக புதிய பிரச்சனைகளும், கவலையளிக்கும் போக்குகளும் தலைதூக்கி வருகின்றன. இவற்றில் வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை மற்றும் லஞ்ச ஊழலை முக்கியமாகக் குறிப் பிடலாம்.

 6.17    ஏற்றத்தாழ்வுகள் : 2002ம் ஆண்டில் நகர்ப்புறம், கிராமப்புறம் உள்ளிட்ட ஒட்டு மொத்த தேசத்தின் உயர்மட்ட 10 சதவிகித மக்களின் சராசரி குழு வருமானம் கீழ் மட்ட 10 சதவிகித மக்களின் சராசரி குழு வருமானத்தை விட 22 மடங்கு கூடுதலாக உள்ளது என்பதை நாம் காண்கிறோம். கிராமப்புற, நகர்ப்புற வருமான இடைவெளியை மொத்தமாக எடுத்துக் கொண்டால் இது கடந்த 18 ஆண்டுகளில் 13 மடங்கு அதி கரித்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்காவைத் தவிர பிற நாடுகள் அனைத்தையும் விட கூடுதலான எண்ணிக்கையில் நூறு கோடி டாலர் பணக்காரர்களைக் கொண்ட தேசமாக சீனா இருந்து வருகிறது.   மிகவும் குறிப்பிடத்தக்க விரைவான வளர்ச்சியைக் கொண்ட 1997 முதலான பத்தாண்டு காலத்தில் தேச வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு 53 சதத்தி லிருந்து 40 சதமாக வீழ்ச்சியடைந்தது.   

6.18     இத்தகைய சில ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் முயற்சியாக வளர்ச்சிப்போக்கு கொண்ட வறுமைக்குறைப்புத்திட்டங் களை கிராமப் புறங்களில் முறையாக திட்டமிட்ட முறை யிலும் சீன அரசாங்கம் துவக்கியது. (27) பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிமட்ட அதிகரிப்புக்கு ஏற்பவும் விலை வாசிப்புள்ளியில் அதிகரிப்பின் அடிப்படையிலும் 2000ம் ஆண்டில் 865 யுவானாக இருந்த கிராமப்புற மக்களுக்கான தேசிய வறுமைக்கோட்டு அளவை 2010ல் 1274 யுவான் என்ற அளவுக்கு அரசு படிப்படியாக உயர்த்தியது. இந்த மாற் றத்தின் அடிப்படையில் 2000ம் ஆண்டில் 9 கோடியே 42 லட் சத்து 20 ஆயிரமாக இருந்த கிராமப்புற ஏழைகளின் எண் ணிக்கை 2010ம் ஆணடில் 2 கோடியே 6 லட்சத்து 80 ஆயிர மாகக் குறைந்தது. மொத்த கிராமப்புற மக்கள் தொகையில் அவர்களின் விகிதாச்சாரம் 2000 ஆண்டில் இருந்த 10.2 சத விகித்தை விட 2010ம் ஆண்டில் 2.8 சதவிகிதமாகக் குறைந்தது.

6.19 லஞ்ச ஊழல்  : ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மேற்பார் வைக்குப் பொறுப்பு வகிக்கும் சீன அதிகாரிகள் 2010ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 1.19,000 லஞ்ச ஊழல் வழக்கு களை விசாரணை செய்தனர். கடந்த ஆண்டின் இதே காலத் தில்சற்றுக்குறைவாக 1,15,000 என்ற அளவில் இருந்தது. இவற்றில் 1,.08,000 வழக்குகள் விசாரணை முடிவடைந்து அவற்றில் தொடர்புள்ள 1,13,.000 பேர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளையோ அல்லது நிர்வாகக் கட்டுப்பாட்டு விதிகளையோ மீறியதற்காக தண்டிக்கப்பட் டுள்ளனர். அவர்களின் 4332 பேர் சட்டங்களை மீறியதற்காக நீதித்துறை அதிகாரிகளின் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

6.20     பிற பிரச்சனைகள் : கணிக்க முடியாத வேறு சிலவும் உள்ளன. முதலாளிகளைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அனு மதிப்பது என்ற முடிவு 2002ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் ஒன்றாக உள்ளது. இன்றைய தினம் பல தொழில்முனைவோரும் தொழிலதிபர்களும் கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் சேர்மானத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக கட்சியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் திசைவழியானது புதிய அழுத்தங்களுக்கு உள்ளாகக் கூடும்.

6.21     சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலில் இருந்து ஏகாதி பத்தியம் என்ற கோட்பாடு கை விடப்பட்டுள்ளதை மற்றொரு பிரச்சனையாகக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பு திசைவழி என்பது இல்லாத நிலையில் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்பது நீர்த்துப் போகக் கூடும்.

6.22     தொகுத்துக் கூறினால் : சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சீர்திருத்தங்களின் போது உற்பத்தி சக்திகளின் பெருக்கம் மற்றும் பொருளதார வளர்ச்சியில் பிரம்மாண்ட மான முன்னேற்றம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டு காலத்தில் ஒரு தொடர்ச்சியாக 10 சதத்துக்கு மேலான சராசரியான வளர்ச்சி விகிதம் என்பது முதலாளித் துவத்தின் வரலாற்றில் எந்தவொரு நாட்டிலும் முன்னெப்போதும் நிகழாத ஒன்றாகும். ஆனால் இந்த வளர்ச்சி நிகழ்முறையே இன்றைய தினம் சீனாவின் உற்பத்தி உறவுகளிலும் எனவே சமூக உறவுகளிலும் பாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்பதை தெளிவாகக் காண முடிகிறது. 

6.23     இந்த முரண்பாடுகள் எவ்வாறு வெற்றிகரமான முறையில் கையாளப் படுகின்றன என்பதும் அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்படுகின்றன என்பதுமே சீனாவின் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும். சோசலிசத்தை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் நம் முடைய கட்சி மற்றும் உலகம் முழுமையும் உள்ள கம்யூ னிஸ்டுகளுடைய கூட்டு உறுதியான ஆதரவினைப் பெறும்.

6.24     இதற்குப் பிந்தைய காலத்தில் வியட்நாம், கியூபா மற்றும் வடகொரியா ஆகியவை ஏற்றுக்கொண்ட சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்வதும் முக்கியமானதாகும்.  நிதி மூலதனம் மற்றும் உலகமயத்துடன் அந்த நாடுகள் எந்தவிதத்தில் தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளன என்பதுடன் இந்த மதிப்பீடுகள் சம்பந்தப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக சோஷலிச ஒன்றியத்தின் தீர்மானகரமான ஆதரவு மற்றும் உதவியை தங்களுடைய வளர்ச்சிக்கான அடிப்படையாக முன்னர் கொண்டிருந்த இந்த நாடுகளின் வளர்ச்சியானது இப்போது உலகமயத்தால் நிர்ணயிக்கப்படும் சர்வதேசச் சந்தையுடனான ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்தில் வைக்கப்பட் டுள்ளன. இந்நாடுகளில் சோஷலிச அமைப்பு முறை தொடர்ந்து நீடிப்பதையே கேள்விக்குறியாக்கியுள்ள ஏகாதி பத்திய உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வியட்நாம்

6.25     1986 டிசம்பரில் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் டாய்மாய் (னுடீஐஆடீஐ) அதாவது புதுப்பித்தல் என்ற பெயரால் கட்சித்தலைமையானது வாழ்க்கை நிலையின் பெரும்பாலான அம்சங்களில் -குறிப்பாக பொருளாதார கொள்கையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

6.26     1986ல் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட் டுள்ளது. பொருளாதாரக் கட்டுமானத்தைப் ஒழுங்கு படுத்தும்போது, முதலாவதாக உற்பத்தி மற்றும் முதலீட்டுக் கட்டுமானத்தைப் பொருத்தவரை விரைவாக முன்னேற்றம் அடையவேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே பல நேரங்களில் பயணத்தைத் துவக்கினோம். ஆனால் நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களையும், நமது திறமைகளின் அளவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த அறிக்கையானது – இடைமாற்றக் காலத்தில் இருக்க வேண்டிய பல்வேறு வடிவ சொத்து வடிவங்களின் தேவையை பகுப்பாய்வு செய்துள்ளது. (28). இதன்பிறகு வியட்நாம் கம்யூனிஸ்ட்கட்சி தனது 7-வது காங்கிரசில் புதி தாக உருவாகி வரும் பல பிரச்சனைகள் குறித்தும் சோஷலிசத் துக்கு பாதகமாக அமைந்துள்ள போக்குகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் தேவை பற்றியும் தனியான கவனத்தை செலுத்தியுள்ளது.

கியூபா

6.27     கியூபாவும் கூட தனது பொருளாதாரக் கொள்கைகளை மறு பரிசீலனை செய்து மாற்றியமைக்கும் பணியின் மத்தியில்  இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியம் மற்றும் சோஷலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பிறகு அதுவரை முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து ஒரே சீராகக் கிடைத்து வந்த பொருட்கள் திடீரென்று முற்றிலும் நின்று போன நிலையை கியூபா எதிர்கொள்ள நேரிட்டது. நவீன உலக வரலாற்றின் மிகவும் மனிதாபிமானம் இல்லாத பொருளாதாரத் தடைகளை சுமத்துவதன் மூலம் கியூபாவின் குரல்வளையை நெறிக்கும் விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. இத்தகைய பின்னணியில் கியூபாவும் பொரு ளாதார வழிகாட்டல் திட்டத்தை மேம்படுத்துவதற்காக கட்சி மற்றும் புரட்சியின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுக்கான வழிகாட்டுதலகள் என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றை கட்சி நிறைவேற்றியுள்ளது. கியூபா முன்வைக்கும் அதன் பொருளாதார மாதிரி வடிவத்தையும் அதன் தொடர்ச்சியினையும் மற்றும் அதன் பாதையினைத் திருப்ப முடியாத தன்மைக்கும் உத்தரவாதம் அளிப்பதையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதையும் அத்தீர் மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6.28     கூலி, ஓய்வூதியம், நட்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறு வனங்களை மூடுதல் போன்றவை தொடர்பான கெள்கை களை மாற்றியமைக்க கியூபா முயற்சித்து வருகிறது. அத்துடன் மட்டுமீறிய இலவசப்பயன்கள், அளவுக்கு அதிகமான மானியங்கள் மற்றும் ரேசன் அட்டைகள் ஆகியவற்றை படிப்படியாக நீக்குவது பற்றியும் பரிசீலித்து வருகிறது. நில உரிமைகளை விடுவித்து அவற்றை சிறு நில உடைமையாளர் களிடம் சாகுபடிக்காக குத்தகைக்கு விடுவதற்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கான சந்தையை உருவாக்கு வதற்கும், ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு ஊக்கமளிக்கவும் திட்டமிட் டுள்ளது. உழைப்பின் உற்பத்தித்திறன் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துதல் உபரி உழைப்புச்சக்தியை வேறு இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளைத் துவக்கவும் திட்டமிட்டுள்ளது. உயரிய அளவில் வருமானம் பெறுவோருக்கு உயரிய அளவில் கூடிய வரி விதிப்பது, உற்பத்தியை அதிகரிப்புக்கு வரிச் சலுகைகளை வழங்குவது ஆகியவை அடங்கிய வரிவிதிப்பு முறையை அறிமுகப் படுத்தவும் நாட்டில் தற்போது அமலில் உள்ள இரட்டை நாணய முறையை அகற்றுவதற்கும் அது திட்டமிட் டுள்ளது.(29)

வடகொரியா

6.29     2011-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சிக்கான பத்தாண்டு அரசு வியூகத்திட்டத்தை வடகொரியா ஏற்றுக் கொண் டுள்ளது. அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பொரு ளாதார வளர்ச்சிக்கான அரசு பொது தகவல் மையத்தை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. (30)

6.30     சோஷலிச அமைப்பு முறையின் மேன்மையை நிலை நாட்டுவதற்கு அவசர அவசியமாகத் தேவைப்படும் உயரிய அளவிலான பொருளாதார சமூக வளர்ச்சியை சமூக உற்பத்தி சக்திகள் இல்லா நிலையில் எட்ட முடியாது என்பதால் இத்தகைய சீர்திருத்தங்களின் மூலம் தனது சமூக உற்பத்தி சக்திகளை வளர்க்க வடகொரியா முயற்சிக்கிறது. தனிநபர் வழிபாடு போன்ற திரிபுகளோடு உணவுப்பற் றாக்குறை போன்ற பிரச்சனைகளும் உள்ளன; இவைகளை எதிர்த்துப் போராட வேண்டி தேவை இருக்கிறது.

6.31     சீனாவின் சீர்திருத்த நிகழ்முறை தொடர்பாக நாம் குறிப் பிட்டுள்ளதைப் போல சோஷலிச நாடுகளின் சீர்திருத்த அனுபவங்களிலிருந்து எழும் முக்கிய பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் அவை எவ்வாறு கையாள்கின்றன மற்றும் சமாளிக்கின்றன என்பது தான் முக்கிய பிரச்சனை ஆகும். ஏனெனில் இதுவே சோஷலிச ஒருங்கிணைப்பின் எதிர்கால பாதையைத் தீர்மானிக்கும்.

6.32     கட்சியின் 14-வது காங்கிரஸ் நிறைவேற்றிய தத்துவார்த்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது போல், சோசலிச நிர் மாணத்தின் மூலம் உருவாகும் பொருளாதார நிலைமை களின் அடிப்படையில் மக்களுடைய கூட்டுணர்வுகளை வளர்ப்பதன் அடிப்படையில் மட்டுமே சோசலிசம் நிலைத் திருக்க முடியும், வளர முடியும். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி  அதன் தத்துவார்த்த நிலையை உறுதியுடன் முன்கொண்டு செல்லாமல் இத்தகைய கூட்டுணர்வுகளை வளர்த்தெடுக்க முடியாது.

VII

சில வளர்முக நாடுகள்

லத்தீன் அமெரிக்கா

7.1      லத்தீன் அமெரிக்காவை ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நவீன தாராளமய தாக்குலுக்கு எதிரான பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி அலையின் மீது பயணித்து மக்கள் ஆதரவுடன் கூடிய அரசாங்கங்கள் உருவானதை இடதுபக்கத்தை நோக்கிய இளஞ்சிவப்பு அலை என்று பரவலாக சித்தரிக்கப்படுகிறது.

7.2      ஜனநாயகத் தேர்தல்களில் பெற்ற வெற்றியை அடுத்து லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள் இடதுசாரி நோக்கம் கொண்ட அல்லது முற்போக்கு அரசாங்கங்களினால் ஆளப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கி உருவாகியுள்ள இடதுசாரி நோக்கம் கொண்ட கூட்டணிகள் முதலாளித்துவத்துக்குள்ளேயே இருந்து கொண்டு ஏகாதிபத்திய உலமயமாக்கலுக்கும் நவீன தாராள மயத்துக்கும் ஒரு மாற்றுப்பாதையை வழங்கி வருகின்றன. இந்த அரசுகள் ஒரு சோசலிச மாற்று என்று அமையாவிட்டாலும், அவை ஏகாதிபத்தியத்திற்கும், புதிய தாராளமய முதலாளித்துவத்திற்கும் உறுதியான சவாலை கொடுக்கும்; அதற்கான அகச்சூழல் காரணியினை வளர்த்தெடுக்க நடக்கும் போராட்டத்தில் சாதகமான வளர்ச்சிப் போக்கு களை அவைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பெரு மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதந்தாங்கிய போராட்டங்களுடன் இந்த அனுபவம் நேரடியான முறையில் வேறுபட்டதாக இருந்து வருவதுடன், இடதுசாரி அதிதீவிரவாதத்தின் பயனற்ற  தன்மையை மீண்டுமொருமுறை நிரூபித்து வருகிறது. கொலம்பியாவில் ஏழு ராணுவ தளங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. இடதுசாரி போர்க்குண போக்கிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்ற போலிக் காரணத்தின் அடிப்படையில், முக்கியமாக வெனிசுலாவை இலக்காக வைத்து, ஒரு வலதுசாரிப் பிற்போக்கு அரசாங்கத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

7.3      கடந்த சில ஆண்டுகளில் இந்த முற்போக்கு அரசாங்கங்கள், சோசலிஸ்ட் கியூபாவின் வலுவான தாக்கத்தினால் அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பதை பெரும் அளவில் குறைத்துள்ளதுடன் தெற்கு நாடுகளுக்கிடையே யான வர்த்தகத்தையும் அதிகரித்துள்ளன. இது ஓரளவிற்கு பெருநிலப்பரப்பின் (கண்டத்தின்) மீதான பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை வரம்புக்குள் வைத்தன என் பதுடன் அவைகள் விரைவாக நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு உதவி செய்தன. வெனிசுலா, ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் ஒரு உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் காலூன்றி நிற்கின்றன. அத்துடன் முந்தைய ஆட்சியாளர்களால் தனியார்துறையின் கட்டுப் பாட்டில் வைக்கப்பட்ட பல்வேறு பொதுச்சொத்துக்களை தேசியமயமாககி வருகின்றன. வெனிசுலா அரசு, பல வங்கி களை தேசிய மாக்கியுள்ளது. பொலிவியா ஏற்கனவே செய்ததைப்போல அண்மையில் ஈக்வடார் தனது எரிசக்தி வளங்களை தேசியமயமாக்கியுள்ளது. சமூக செலவினங் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் அரசு பெரும் பங்களிப்பைச் செய்து வரும் நிலையிலும்  அந்த பெரு நிலப்பரப்பின் (கண்டத்தின்) பிற ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் விதத்தில் இந்நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

7.4          பெரு நிலப்பரப்பு நாடுகளுக்கிடையே பிராந்திய வர்த்தகத் துக்கு ஊக்கமளிப்பதற்காக மெர்கோசுர் , அல்பா மற்றும் சாவ்பாலோ அமைப்பு போன்ற பல அமைப்புகள் உருவாக் கப்பட்டுள்ளன. இவ்வாறு கடைசியாக அமைக்கப்பட்டது தான் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அரசுகளின் குழுமம் (CELAC) என்ற புதிய பிராந்தியப் பொருளா தாரக் குழு. இந் நாடுகளுக்கிடையே நெருக்கமான பிணைப்பு களை ஏற்படுத்துவதற்கு மட்டுமின்றி நவீன தாராளமயத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதற்கும் இந்த அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பெரு நிலப்பரப்பை தனது பின்கட்டுப்பகுதி என்று  இகழ்ச்சியாக குறிப்பிட்ட அமெரிக்கா இழந்து விட்ட தனது பிடிமானத்தை மீண்டும் பெறுவதற்கு  கடுமையாக முயற்சித்து வருகிறது. அது இப்பகுதியில் தனது ராணுவ ரீதியான இருப்பை அதிகரித்து வருகிறது. இந்நாடுகளில் உள்நாட்டு விவகாரங் களில் அது தொடர்ந்து தலையிட்டு வருகிறது. ஹொண்டு ராசில் ஏற்பட்ட அதிரடி ஆட்சி மாற்றத்தின்போது இது ஆற்றிய பங்கினை உதாரணமாகக் குறிப்பிடலாம். வேறு சில நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்களைப் பயன்படுத்து வதற்கும் அது முயற்சித்து வருகிறது. இப்பிராந்தியத்தின் முற் போக்கு அரசாங்கங்களும் பெருநிலப்பரப்பின் இடதுசாரி சக்திகளும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றன. அவை அமெரிக்காவின் கொடூரமான சதித்திட்டங்களை அம்பலப்படுத்தி ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வருகின்றன.

7.5           1998 முதல் சமூகக் குறியீடுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலா வின் அனுபவம் காட்டுகிறது. வறுமையும், வருமான ஏற்றத் தாழ்வும் பெரும் அளவில் குறைந்துள்ளன. சுகாதாரம் பற்றிய குறியீடுகள் மற்றும் கல்வி வசதிகளில் குறிப்பிடத்தக்க முன் னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல தண்ணீர் மற்றும் ஆரோக்கிய சூழலுக்கான வாய்ப்புகளிலும் பெரும் முன்னேற் றங்கள் ஏற்படுடளளன. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1999-2000பள்ளி ஆண்டுடன் ஒப்பிட்டால் 2007-2008பள்ளி ஆண்டில் இரண்டு மடங்கை விடக்கூடுதலாக அதிகரித்துள்ளது.(31)

7.6           லத்தீன் அமெரிக்காவுக்கான பொலிவியாவின் மாற்றானது அல்பா (ALBA) என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறது. இது ஏகாதிபத்தியத்தினால் வடிவமைக்கப்படட அமெரிக் காவுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எனும் ஏகாதிபத்திய திட்டத்துக்கு நேர் எதிரான ஒரு அரசியல் செயல்திட்டமாக உருவாகியுள்ளது. அமெரிக்காவுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்த அமைப்புக்கான (FTAA) மாற்று ஆலோசனை யாக அல்பா தோன்றியது என்ற போதிலும் லத்தீன் அமெ ரிக்கா மற்றும் கரீபிய மக்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையேயான ஒரு பழைய மற்றும் நிரந்தர முரண்பாட்டுக்கு அது எதிர்வினையாற்றுகிறது. மன்ரோயிசத்துக்கும், பொலி வாரிசத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் குறிப் பிடுவதானது முரண்பாடுகள் கொண்ட இந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான மேம்பட்ட வழியாக ஒருவேளை இருக்கக்கூடும்.அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கருத்தே மன்ரோயிசம் என்ற சொல்லின் மூலம் வழக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் அமெரிக்கப் பெருநிலப்பரப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கே என்பதே இதன்மூலம் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு ஏகாதிபத்திய செயல்திட்டம்- அதாவது சூறையாடல் மற்றும் கொள்ளைக் கான செயல்திடடம். பொலிவாரியனிசம் என்பது சைமன் பொலிவாரின் லட்சியங்களுக்கு ஏற்ப லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய மக்களுக்கிடையே ஒற்றுமைக்கான ஆலோ சனையாகும். குடியரசுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சைமன்பொலிவார் விரும்பினார். இது வரை கூறப்பட்டதை தொகுத்துக் கூறினால் இது ஏகாதி பத்திய செயல்திட்டத்தை விடுதலைக்கான செயல்திட் டத்தின் மூலம் எதிர்ப்பதாகும். இதுவே அமெரிக்காவுக்கான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTAA) மற்றும் லத்தீன் அமெரிக்காவுக்கான பொலிவாரிய மாற்று (ALBA) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பிரதி பலிப்பதாகும். (32)

7.7          எனவே, லத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்தியத்தின் சவால் களைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் அதனை முறியடிப்பதும் இந்த அரசாங்கங்கள் அரசியல் ஆதிக்க  கட்டுப் பாட்டினை தொடர்ந்து எந்த அளவுக்கு உறுதியுடன் செயல் படுத்துகின்றன என்பதைச் சார்ந்துள்ளது. இதன் நோக்கம் அரசியலே அந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிப்பதை உறுதி செய்து கொள்வதாக இருக்க வேண்டும். இதன் மூலம் தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக இந்த நாடுகளின் உள்நாட்டுக் கொள்கைகளில் தலையீடு செய்யும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அரசியல் தேவைகளை தொடர்ந்து முறியடிக்க முடியும். (33)

7.8           ஏகாதிபத்திய உலகமயத்துக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்துவதில் இன்றையதினம் மக்கள் ஆதரவு பெற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் ஒரு முக்கிய கூறாக அமைந்துள்ளன. யுத்த எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் குறுக்கீடு, சுற்றுச் சூழல் அழிப்புக்கு எதிரான இயக்கங்களை உலகமயத்துக்கு எதிரான இயக்கங்களுடன் ஒன்றுபடுத்துவதிலும் அவை ஒரு முக்கிய கூறாக உள்ளன. எதிர்காலத்தில் ஒருபுரட்சிகர உருமாற்றத் திற்கான வல்லமை கொண்ட ஒரு சக்திமிக்க உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுவதற்கு இந்த ஒற்றுமையே தேவைப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா

7.9        நிறவெறிக்கெதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வீரஞ்செறிந்த வெற்றியையும் தென்ஆப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியினால் தேசிய ஜனநாயகப்புரட்சி என்று சித்தரிக்கப் பட்ட புரட்சியில் கிடைத்த வெற்றியையும் அடுத்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி), தென்ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (எஸ்ஏசிபி) தென்னாப்பிரிக்கத் தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு (சிஓஎஸ்ஏடியு) ஆகியவை இணைந்த முத்தரப்புக் கூட்டணியின் அடிப்படையில் அமைந்த ஏஎன்சி அரசாங்கமானது மிகவும் சுரண்டல் தன்மையும் நிறவெறிப் பாகுபாடும் கொண்ட கட்டமைப்பை உருவமாற்றம் செய்வ திலும், பெரும்பாலாரோக இருந்த கருப்பின மக்களுக்கு பொருளாதார  அதிகாரத்தை வழங்குவதிலும் தீவிரமான முறையில் ஈடுபட்டு வந்தது. ஆரம்பக் கட்டத்தில் 1996ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட வளர்ச்சி, வேலை , மறுவிநியோகம் ஆகியவை இணைந்த ஒரு (ஜிஇஏஆர்) கொள்கையின் மூலம் அது இதனை நிறைவேற்ற முயற்சித்தது. ஆனால் இக் கொள்கைகள் நவீன தாராளமய சீர்திருத்த நிகழ்முறையை முன்னெடுத்துச் செல்கின்றன என்பது பின்னர் உணரப் பட்டது. இக்கொள்கைகளின் காரணமா 1994ல் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 51சதவிகிதமாக இருந்த தொழிலாளர் களின் பங்கு 2008ல் 42சதவிகிதமாக வீழ்ச்சியடைந்ததையும், இதேகாலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவிகித அடிப்படையில் லாபத்தின் பங்கு 25சதவிகிதத்திலிருந்து 33சதவிகிதமாக அதிகரித்ததையும் காண முடிந்தது. இப்போது தான் பயணித்து வந்த பாதையில் முக்கிய மாற்றத்தைச் செய்வதில் தென்னாப்பிரிக்கா தற்போது ஈடுபட்டு வருகிறது. ஸ34

7.10         தனது சொந்த உள்நாட்டு அனுபவம் உலகின் தற்போதைய மெய்யான சூழலகளை சமாளிப்பதிலும், தொழிலாளி வர்க்க மேலாதிக்கத்தின் கீழ்தான் அதன் வெற்றி அமைய முடியும் என்ற முடிவுக்கு தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி வந்துள்ளது. உழைப்பாளி வர்க்க மேலாதிக்கத்துக்கான போராட்டம் என்பது பன்முக வர்க்கத்தன்மை கொண்ட நமது தேசிய ஜனநாயகப் போராட்டத்துக்கான மாற்று அல்ல – மாறாக அதன் வெற்றிகரமான முன்னேற்றம் ஒன்றிணைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முன்நிபந்தனையாகும் என்று தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

VIII

இந்திய சூழலில் சோஷலிசம்

8.1           புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை நிறைவு செய்வதை நமது கடமையாகவிதிக்கும் விதத்தில் இந்தியப் புரட்சியின் நீண்ட காலக் குறிக்கோளை நமது கட்சித்திட்டம் வரையறை செய் கிறது. அதாவது இந்தியாவின் சோஷலிச உருமாற்றத்திற்கு முன்னோடியாக அமைந்த மக்கள் ஜனநாயகப்புரட்சி.

8.2         தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜன நாயகப்புரட்சிக்கு தலைமையேற்கும் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைப்பதைப் பற்றியும், மக்கள் ஜனநாயக முன்னணியின் செயல்திட்டம் பற்றியும் மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் விரிவான முறையில பேசுகிறது. இதனை நிறைவேற்றுவதில் அகவயக்காரணியை பலப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த அகவயக் காரணியை பலப்படுத்துவதைப் பொருத்தவரை அது மற்ற சிலவற்றுடன் நாடாளுமன்றுத்துக்குள்ளேயும், வெளியேயு மான போராட்ட வழிமுறைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதையும் தொழிலாளி – விவசாயி கூட்டணியை அமைப்பதையும் சார்ந்துள்ளது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக வர்க்கப்போராட்டத்தை பலப் படுத்தும் நோக்கத்துடன்  இந்திய மக்கள் மத்தியிலான வர்க்க சக்திகளின் பலாபலன்களை மாற்றுவதற்கான நமது நீண்ட காலக் குறிக்கோளுக்குப் பொருத்தக்கூடிய தேவையான உத்திகள் அவ்வப்போது உருவாக்கப்படுகிறது.

8.3            மக்கள் ஜனநாயகம் உருவாக்கப்பட்டு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகபோக மூலதன எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றிய பிறகுதான் சோஷலிசத்தை நோக்கி இந்திய மக்கள் முன்னேற முடியும். இந்தியச்சூழல் களின் சோஷலிசம் என்பதன் பொருள் என்ன? மக்கள் ஜனநாயகப்புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு முன்னால் எத்தகைய பணித்திட்ட வரைவையும் விளக்கமாக எடுத்துக் கூற முடியாது என்றாலும் அதேசமயம் நமது முந்தைய தத்துவார்த்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ள நமது புரிதலின் முக்கிய கூறுகளை விளக்கி அதனை வளர்ப்பது என்ற பணியினை மட்டுமே நம்மால் செய்ய முடியும்.

அதன் பொருள் யாதெனில், அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, முழுமையான வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை பொதுவாக கிடைக்கச் செய்வதாகும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதுகாறும் விளிம்பு நிலையில் இருந்த மக்களின் வாழ்க்கை நிலைகளை விரிவான அளவில் மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு பொரு ளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை வழங்குவது அதன் பொருளாகும்.

முதலாவதாகவும், முதன்மையாகவும் மக்கள் சக்தியே மேன்மை மிக்கதாக இருக்கும் என்பது அதன் பொரு ளாகும். ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், குடியுரி மைகள் ஆகியவை சோஷலிச நீதித்துறை அரசியல் மற்றும் சமூக ஒழுங்கமைவின் பிரிக்க முடியாத கூறுக ளாக இருக்கும். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் மாயத் தோற்றம் கொண்ட பெயரளவி லான உரிமைகள் இருக்கக்கூடும். ஆனால் அந்த உரிமைகளை பயன்படுத்து வதற்கான தகுதிகள்  பெரும்பான்மையான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சோஷலிசத்தின் கீழ் ஜனநாயக மானது அனைத்து மக்களுக்கும் பொருளாதார, கல்விக் கான மற்றும் சமூக அதிகாரத்தை வழங்குவதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். மனித வாழ்க்கையின் தரத்தை தொடர்ந்து ஆழப்படுததுவதற்கும், மேம்படுத்து வதற்கும் இதுவே இன்றியமையாத தேவையாகும். இதனை அடித்தளமாகக் கொண்டுதான் சோஷலிச ஜனநாயகம் செழித்தோங்கிடும். பாட்டாளி வர்க்க அரசு முறையின் கீழ் சோஷலிசத்தை பலப்படுத்தும் நோக்கத் துடன் மாறுபட்ட கருத்தைக் கூறும் உரிமை, கருத்துக் களைச் சுதந்திரமாக கூறும் உரிமை, ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுக்கான உரிமை ஆகியவை சிறப்பான முறையில் வளர்ச்சி அடையும்.

சாதிய அமைப்பினை ஒழித்துக்கட்டி சாதிய ஒடுக்கு முறையை முடிவுக்குக் கொண்டு வருவது அதன் பொரு ளாகும்.அனைத்து மொழிக்குழுக்களின் சமத்துவமும், அனைத்து மொழிகளின் சமமான வளர்ச்சியும் அதன் பொருளாகும். அனைத்து சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் சமத்துவமும், பாலியல் ஒடுக்கு முறைக்கு முடிவு கட்டுவது அதன் பொருளாகும்.

சோஷலிச பொருளாதாரக்கட்டுமானமானது உற்பத்தி சாதனங்கள் சமுதாயமாவதையும், மையப்படுத்தப்பட்ட திட்டமிடும் முறையையும் அடிப்படையாகக் கொண்டி ருக்கும் என்பது அதன் பொருளாகும். சரக்கு உற்பத்தி முறை தொடர்ந்து இருக்கும் வரை சந்தை தொடர்ந்து நீடித்திருக்கும் என்பது கட்டாயமாகும். எனினும் சந்தை  சக்திகள் மையப்படுத்தப்பட்ட திட்டமிடலின் வழிகாட்ட லுக்கு உட்பட்டதாக இருககும். பல்வேறு வித சொத் துடைமை வடிவங்கள் உடனுறைய முடியும், உடனுறைய வேண்டும் என்ற அதேநேரத்தில் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமையே தீர்மானகரமான வடிவமாக இருக்கும். அரசுக்குச் சொந்தமான பொதுத்துறையாக மட்டுமே அது வெளிப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது முக்கிய பங்களிப்பை ஆற்றும் அதேநேரத்தில் கூட்டான அல்லது கூட்டுறவு உடைமை போன்ற மற்ற வடிவங்கள் மற்றும் பொருளாதார உயிர்நாடியை முறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளின் மீதான அரசு கட்டுப்பாடும் இன்றியமையாதபடி உடன் உறையும்.

8.4           இந்தியாவில் புரட்சிகரப் போராட்டங்களை வலுப்படுத்து வதற்கான நமது முயற்சிகளோடு இன்று நிலவும் மெய்யான உலக சூழலின் சவால்களை எதிர்கொள்வதற்காக தங்கள் வழிமுறைகளை வகுத்துக் கொண்டு வரும் பிற நாடுகளின் அனுபவங்களிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டு, இந்தியாவிலுள்ள நாம் உலக முதலாளித்துவ அமைபபின் இன்றைய உலகமயகட்டத்தால் ஏவப்படும் சவால்களையும் அதன் விளைவாக ஏற்படும் பொதுவான விரிவான சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றங்களையும் குறிப்பாக இந்தியப்பொருளாதாரம் மற்றும் இந்திய மக்களுக்கு உள்நாட்டுப் பொருளாதார சீர்திருத்தங்களின் காரணமாக ஏற்படும் கடுமையான பின்விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே நமது நீண்டகாலக் கொள்கைக்குப் பொருத்தமான சரியான நடைமுறை உத்திகளை நமது கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் அவ்வப்போது வகுப்பது என்பது நமது கடமையாக அமைகிறது.

XI

மார்க்சியத்துக்கு எதிரானஇன்றைய பிற்போக்கு தத்துவார்த்த சவால்கள்

9.1           வர்க்க சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான மாற்றம் ஏற்பட்டுள்ளதை மார்க்சியம் மற்றும் கம்யூனிச்த்துக்கு எதிரான ஒரு வெறித்தனமான முழுமையான தாக்குதலை தத்துவார்த்த ரீதியில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் நாம் எதிர்நோக்கினோம்.

9.2           இந்த இருபதாண்டுகளில் இத்தகைய போக்குகள் மேலும் தீவிரமடைந்துள்ளன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்சீயத்தைக் கடந்து செல்ல வேண்டிய தேவை என்பது இந்த போக்குகளின் சாரமாக முன்வைக்க முயற்சிக் கப்படுகிறது. மார்க்சியத்தை மீண்டும் வாசிப்பது, மறு மதிப்பீடு செய்வது மீண்டும் கட்டமைப்பதற்கான சித்தாந் தங்கள் தலைதூக்கியுள்ளன. இவை நவநாகரிக அறிவாளி களின் வட்டாரங்களில் சுற்றுக்கு வந்து மக்கள் பிரிவின் மீது செல்வாக்கு செலுத்தியும் குழப்பங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. 9.3       பின் நவீனத்துவம் : உலக நிதி மூலதனத்தால் தூண்டப் பட்டும் ஏகாதிபத்தியத்தால் இயக்கப்பட்டும் வரும் உலகமய மானது ஒரு முழு வரிசையிலான மார்க்சிய எதிர்ப்பு தத்துவங் களையும் கோட்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது. அவை அனைத்தும் முற்போக்கு மற்றும் அனைவருக்கும் பொது வான சித்தாந்தங்களை மறுதளிக்கும் தெளிவான அடை யாளங்களைக் கொண்டுள்ளன. வர்க்கங்கள் ஒன்றுபடுதல், வர்க்கப் போராட்டங்கள் மறைந்து போதல் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப்பங்கினை மறுதளிக்கும் தன்மை கொண்ட கோட்பாடுகள் முதலாளித்துவ சித்தாந்த ஆயுதக்கிடங்கின் பகுதியாக இருந்து வருகின்றன. பின் நவீனத்துவம் என்ற இன்றைய மார்க்சீய எதிர்ப்பு கோட்பாடு இப்போது அவற்றுடன் சேர்ந்து கொண்டுள்ளது.

9.4           20-ம் நூற்றாண்டின் பிந்தைய கால முதலாளித்துவத்தின் வெற்றி மற்றும் சோஷலிசத்தின் பின்னடைவு ஆகியவற்றி லிருந்து எழுந்துள்ள முதலாளித்தவ சித்தாந்தக் கண்ணோட் டமே பின்நவீனத்துவம் ஆகும். மார்க்சியம் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தக்கூடிய எந்தவொரு தத்துவம் மற்றும் அரசியலை கூட்டாகத் திரட்டுதல் கோட்பாடுகள்  என்று கூறி நிராகரிக்கிறது. முதலாளித்துவத் தையோ அல்லது சோஷலிசத்தையோ, ஒரு கட்டுமானம் என்றோ அமைப்பு முறை என்றோ பின் நவீனத்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, உலக நிதி மூலதனம் வர்க்கத் தையும், வர்க்கப்போராட்டத்தையும் மறுதளிக்கிறது என்ப தால் பின் நவீனத்துவம் அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு தத்துவமே. அடையாள அரசியலை ஊக்குவிப்பதற்கும், மக் களை அரசியலற்றவர்களாக மாற்றுவதற்கும் இது பொருத்த மான தத்துவமாகும்.

9.5          சமூக ஜனநாயகம் : சமூக ஜனநாயகம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து தோன்றிய ஒரு சீர்திருத்த சித்தாந்தமாக முன்னர் இருந்து வந்ததது. முதலாளித்துவத் துடன் ஒத்துப்போவதையும், முதலாளித்துவத்துக்குள் இருந்து கொண்டு சீத்திருத்தங்கள் செய்வதையும் அது ஆதரித்து வந்தது. உலகநிதி மூலதன யுகத்தில் சமூக ஜனநாயகம் உருமாற்றமடைந்துள்ளது. முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் அது தன்னை மேலும் இணைத்துக் கொண்டு விட்டது. சீர்திருத்தக் கண்ணோட்டம் நவீன தாராளமயக் கொள்கைகளை நியாயப்படுத்தும் அணுகு முறை அமர்ந்து கொண்டது. முன்வைக்கப்படும் மூன்றாவது பாதை என்பது இதற்கான ஒரு மூடுதிரையே அன்றி வேறல்ல. மார்க்சிஸ்டுகள் என்ற விதத்தில் நாம் சமூக ஜனநாயகத்தின் இத்தகைய கோட்பாடுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு துணை போகிறவர்கள் என்று அவர்களின் பங்களிப்பை அம்பலப்படுத்த வேண்டும்.

9.6           மார்க்சியத்தின் செயல் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மட்டுமே அதனைக் கடந்து செல்ல முடியும் என்ற பொருளில் மார்க்சியம் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். வர்க்க பேதமற்ற கம்யூனிச சமூக ஒழுங்கமைவை எட்டுவதே அதன் நிகழ்ச்சி நிரல் ஆகும். சிறப்பாகக் குறிப்பிடுமிடத்து முத லாளித்துவத்தின் கீழ் முதலாளித்துவம் பற்றிய அதன் புரிதல் மட்டுமே முதலாளித்துவத்துக்கு அப்பாலும் அமைந்துள்ள வரலாற்றுச் சாத்தியக்கூறுகளைப் புரிந்து கொள்ளுமளவுக்கு  முழுமையானதாக இருக்கும். முதலாளித்துவமே அகற்றப் படும் வரை முதலாளித்துவத்தின் கீழ் மார்க்சியம் ஒருபோதும் தேவைப்படாத ஒன்றாக ஆக்கப்படாது. முதலாளித்துவத் துக்குப் பிந்தைய காலத்திலும் சோஷலிசக் கட்டுமானத் துக்கும் கம்யூனிசத்தை நோக்கிய இடைமாற்றத்துக்கும் மார்க்சிய சித்தாந்தமும் உலகக்கண்ணோட்டமுமே அடிப் படையாகவும், அறிவியல் பூர்வ வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்து வரும்.

9.7           நம்முடைய முந்தைய அனைத்து தத்துவார்த்த ஆவணங் களிலும் குறிப்பிட்டுள்ளதைப் போல மார்க்சியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தமல்ல. அது ஒரு ஆக்கப்பூர்வமான விஞ் ஞானம் ஆகும். அது மற்ற அடிப்படைகளுடன் மெய்யான சூழல்களைப் பற்றிய மெய்யான ஒரு பகுப்பாய்வையும் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியமானது பொதுவாக வரலாற்றையும் குறிப்பாக முதலாளித்துவத்தையும் பகுப் பாய்வு செய்வதற்கான ஒரு அணுகுமுறையாகும். இந்த அடிப்படையில்தான் மார்க்ஸ் வழங்கிய அடித்தளத்தின் மீது கட்டமைத்து, இன்றைய ஒட்டுமொத்த சூழல்கள் மற்றும் எதிர்காலம் நமக்கு வழங்கக் காத்திருக்கும் சாத்தியக்கூறுகள் தொடர்பான நமது சித்தாந்தத்தை தொடர்ந்து செழுமைப் படுத்துகிறோம். ஒருமூடப்பட்ட சித்தாந்த அமைப்பு முறையாக இருப்பதற்குப் பதிலாக தொடர்ச்சியான சித்தாந்தத்தை செழுமைப்படுத்தும் நிகழ்முறையாக மார்க் சியம் விளங்குகிறது.

9.8           இன்றைய கால மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்தங்களுக்கும் எதிர்காலம் எழக்கூடிய மற்றவைகளுக்கும் எதிராக சித்தாந்த ரீதியிலும் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் அதன் வெளிப் பாடுகளுக்கு எதிராகவும், நடைமுறையில் நேரடியாக மோத வேண்டியது அவசியமாகிறது.

X

இந்திய சூழல்கள் சில மெய்யான பிரச்சனைகள்

10.1         இந்திய சூழலில், இன்றைய இடைமாற்ற காலத்தில் வர்க்க சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில் நமது நீண்டகாலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பலரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்று நாம் வாழும் மெய்யான சூழல்களில் நமது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு பெற்ற சக்திமிக்க மக்கள் போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவது அவசிய மாகிறது.

10.2 நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேயுமான வடிவங்கள் : இக்கடமையை நிறைவேற்றுவதற்கு மேம்படுத் தப்பட்ட கட்சித்திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது : மக்கள் ஜனநாயகம் மற்றும் சோஷலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்ட வடிவங்களை இணைப்பதன் மூலமும் பிறபோக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழி முறைகளில் இந்த உருமாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் மற்றும் திருகல் களை கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற விதத்தில் புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.

10.3         இவ்வாறு நடைமுறையில் நாடாளுமன்ற மற்றும் நாடாளு மன்றத்துக்கு வெளியேயான நடவடிக்கைகளின் முறையான சேர்க்கையை எட்டுவது என்பது இந்த நிகழ்காலச்சூழலில் கட்சியின் முன் உள்ள ஒரு முக்கிய கடமையாகும். நமது கட்சித்திட்டம் கூறுகிறது இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமடன்ற முறை முதலாளி வர்க்க ஆட்சியின் ஒரு வடிவமாக இருந்தபோதிலும், மக்களின் முன்னேற்றத்துக் கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்கள் நலன்களை பாது காத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் மக்களை அணி திரட்டு வதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப் களை வழங்குகிறது. (பத்தி 5.22) ஆனால் பெரும் மூல தனத்தின் வளர்ந்து வரும் ஆற்றலும் அரசியலுக்குள் பெரும் பணம் நுழைவதும் அரசியலில் குற்றவாளிகள் மயமாவது அதிககரிப்பதும் ஜனநாயக நிகழ்முறைகளை திரித்தும் சீர்குலைத்தும் வருகின்றன.

10.4         விஜயவாடாவில் நடைபெற்ற மத்திய குழுவின் விரிவடைந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் குறிப் பிடுவதைப் போல, நவீன தாராளமயம் மற்றும் உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தால் நாடாளுமன்ற ஜனநாயகமே அரிக்கப்பட்டு வருகிறது. பணம் மற்றும் அரசியலில் குற்ற நடவடிக்கைகளால் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதுடன், இணைந்து ஜனநாயக உரிமைகள் மீதான தடைகள் அதி கரித்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள்,  பொதுக்கூட்டங்கள் மற்றும்  பொது வேலை நிறுத்தங்களை நடத்துவதற்கான உரிமையானது நிர்வாக நடவடிக்கைகளாலும், நீதிமன்ற குறுக்கீடுகளாலும் வரம்பிடப்படுகின்றன. மக்களின் உரிமை களின் மீதான இத்தகைய தடைகளுக்கு ஆதரவான கருத்தைப் பரப்பவும் நியாயப்படுத்தவும் தொழில் நிறுவன ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.(பத்தி 2.35)

10.5         ஜனநாயக அமைப்பு முறை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும், விரிவு படுத்துவதற்குமான போராட்டமும், மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஜனநாயகத்தின் ஒரு உயர்ந்த வடிவத்துக்குச் செல்வதற்கான போராட்டமும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராக உழைக்கும் மககள் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். நமது கட்சித்திட்டம் கூறுகிறது மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்பு களுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தல் களை முறியடிக்க வேண்டியது ஆகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற, ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக் கைகளுடன் இணைத்து திறமையான முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். (பத்தி 5.23)

10.6         இத்தகைய சரிநிலைப் பார்வையுடன் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அரங்கப்பணிகள் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைவுக்கு ஒரு மாற்றை உருவாக்கு வதற்காக ஒரு சக்திமிக்க இயக்கத்தை வளர்ப்பதற்கு நாடாளு மன்றப்ணியை நாடாளுமன்றத்துக் வெளியேயான செயல் பாடுகளுடனும், போராட்டங்களுடனும் இணைக்க வேண்டும்.

10.7         எனினும், நிகழக்கூடிய சக்திமிக்க பிறழ்வுகளுக்கு எதிராக பாதுகாப்புடன் இருப்பதை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.  பல வடிவங்களில் இவை வெளிவரும். நாடாளுமன்ற ஜனநாயகம் தன்னளவிலேயே மக்கள்  மத்தியில் பிரமைகளை ஏற்படுத்துகிறது. இது குறிப்பாகஅரசு வழங்கும் சலுகைகள் வர்க்க வெகுஜன போராட்டங்களை மட்டுப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முயற்சிக்கின்றன. இத்தகைய பிரமைகளுக்கு எதிராகப் போராடுவது, மற்றும் இத்தகைய பிரமைகளைப் பயன்படுத்தி தங்களுடைய வர்க்க ஆட்சிக்கு மக்களை அடிபணியச் செய்வதற்கான ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிகளை சக்திமிக்க வகையில் அம்பலப் படுத்தும் அதே வேளையில், சுரண்டப்படும் மக்களை புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான உத்வேகத்தை தூண்டிவிடக்கூடிய சரியான உத்திகளைப் பின்பற்றுவது நம்முன் உள்ள முக்கிய கடமையாகும்.

10.8         மேலும் அமைதியான இடைமாற்றம் குறித்த பிரமைகளும் பலமடையும். இதுகுறித்து நமது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். கட்சியில் நாம் முறையாக மேற்கொண்டு வரும் நெறிப்படுத்தும் இயக்க மானது நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை வலியுறுத்துகிறது. நாடாளுமன்றப் பணியுடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே யான பணிகளையும், பயனுள்ள விதத்தில் இணைக்க வேண்டுமெனில் நாம் நாடாளுமன்றவாதம் மற்றும் நாடாளு மன்ற பிரமைகளை வளர்த்துக் கொள்வதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

10.9         இன்றைய சூழலில் ஒரு இடதுசாரி அதி தீவிர பிறழ்ச்சியாக வெளிப்பட்டுள்ள மாவோயிசமானது இந்திய மக்களின் புரட்சிகர வர்க்கப் போராட்டங்களின் முன்னேற்றத் துக்கு தத்துவார்த்த சவால்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அதன் புரிதல் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டு விட்ட போதிலும் இந்திய ஆளும் வர்க்கங்களை தரகு முதலாளி/அதிகார வர்க்கப் போக்கு கொண்டவையாக அது தொடர்ந்து சித்தரிப்பதுடன் அரசுக்கு எதிரான உடனடி யான ஆயுதந்தாங்கிய போராட்டத்தை தங்கள் குறிக் கோளாக தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. அது குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்குதலுக்கான இலக் காக கொண்டுள்ளது. அது முதலாளித்துவ பிற்போக்குக் கட்சிகள் மற்றும் சக்திகளுக்கு உடந்தையாக செயல்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர் களுக்கு எதிரான உடலளவிலான மற்றும் கொலை வெறித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இத்தகைய இடது அதிதிவீரப் போக்குக்கு எதிரான தத்துவார்த்தப் போராட் டங்களை வலுப்படுத்துவதும் அதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் போராட வேண்டியதும் அவசியமாகியுள்ளது. விஞ்ஞான மற்றும் புரட்சிகர அடித் தளத்தின் மீது சோஷலிசத்துக்கான இந்திய மக்களின்போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இது இன்றியமையாததாகும். (35)

10.10       இத்தகைய பிறழ்வுகளில் ஒன்றுக்கு இரையாவதானது நாடாளுமன்ற நடவடிக்கையை மட்டுமே நம்பக்கூடிய திரிபுவாதப் பிறழ்வில் சிக்கிக் கொள்வதற்கும் அதன் தொடர்விளைவாக மக்களை அணி திரட்டுவதன் மூலம் நடத்தும் வர்க்கப் போராட்டங்களை கைவிடும் அபாயத் துக்கும் இட்டுச்செல்லும். மறுபுறத்தில் மற்றொரு பிறழ்வுக்கு இரையாவதானது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே மறுதளிக்கக்கூடிய ஒரு இளம்பிள்ளை வாதக்கோளாறை – இடது அதிதீவிரப் பிறழ்வில் சிக்கிக் கொள்ளும் மன நிலைக்கு நம்மைத் தள்ளி விட்டுவிடும். நடைமுறை உத்திகள் மட்டுமே நீண்டகாலக் கொள்கை எதுவும் கடையாது  என்ற அணுகு முறை திரிபுவாதத்துக்கு இட்டுச் செல்லும், நீண்டகாலக் கொள்கை மட்டுமே – நடைமுறை உத்திகள் எதுவும் கிடை யாதுஎன்ற அணுகுமுறை அதிதீவிர வாதத்துக்கு இட்டுச் செல்லும். இந்த இரண்டு பிறழ்வுகளுக்கும் எதிராக நாம் நம்மை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

10.11       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது அது தோன்றிய காலத்திலிருந்து இந்தியப் புரட்சியை சரியான அறிவியல் வழிகளில் முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த இரண்டு பிறழ்வுகள் உள்ளிட்ட பல பிறழ்வுகளுக்கு எதிராக வலிமை யுடனும், உறுதிப்பாட்டுடனும் போராடியுள்ளது. மார்க் சிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடன் இப்போராட்டம் முடி வுக்கு வந்து விடவில்லை. இந்தியப்புரட்சி வெற்றியடைந்த பிறகும் கூட இந்தப் போராட்டம் முடிவுக்கு வராது. மார்க்சிய லெனினயத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து விலகிச் செல்லும் தன்மை கொண்ட அனைத்துப் பிறழ்வு களுக்கும் இரையாவதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஆகப்பெரும் விழிப்புணர்வை வெளிப்படுத்த வேண்டியதன் தேவையை சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப் பாவின் அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. இதனைச் செய்யத் தவறியதானது சோவியத் ஒன்றியத்தின் வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் 21-ம் நூற்றாண்டில் மீண்டும் அதன் பிம்பத்தை கொண்டு வர முடியாத அளவுக்கு சோஷ லிசத்தை அழித்து விட்டது. ஸ36

10.12       தொழிலாளி- விவசாயி கூட்டணி :  நமது நீண்ட காலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்தியச் சூழல்களில் அகவயக்காரணியை பலப்படுத்துவதானது, தொழிலாளி – விவசாயி வர்க்கக்கூட்டணியை பலப்படுத்து வதை முக்கியமாகச் சார்ந்துள்ளது. இன்றைய சூழலில் வர்க்கப்போராட்டத்தை பலப்படுத்துவதற்காக இந்த கூட்டணியை உருவாக்குவதில் உள்ள பலவீனங்களிலிருந்து மீண்டு வருவது அவசரத் தேவையாக இருந்து வருகிறது. நமது நாட்டில் நிலவும் புறவயச்சூழல் இத்தகைய முயற்சிக்கு உகந்த தாகவே இருந்து வருகிறது. அகவயப் பலவீனங்களிலிருந்து மீண்டு வர வேண்டிய அவசியம் இருந்து வருகிறது. மிகவும் சுரண்டப்படும் பிரிவினராக இருந்து அதன் காரணமாக நமது விவசாய வர்த்தகத்தின் புரட்சிகரப் பிரிவினராக உள்ள விவசாயத் தொழிலாளிகள் மற்றும் ஏழை விவசாயிகளுக் கிடையே ஒற்றுமையை உருவாக்குவது இதில் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

10.13       தொழிலாளி வர்க்க ஒற்றுமை : தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் இந்திய மக்களின் விடுதலையைப் பெறும் குறிக்கோளில் உறுதியாக பற்றுக் கொண்ட ஒரு கட்சி என்ற விதத்தில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிரான ஒரு தாக்குதலில் இந்தியாவின் சுரண்டப்படும் எஞ்சிய பிரி வினரை வழி நடத்திச் சென்று வர்க்கத்தாக்குதலை தொடுக்கு மளவுக்கு தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமை, புரட்சிகர உணர்வு மற்றும் வலிமையை வளர்த்திட வேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.

10.14       எனினும் ஏகாதிபத்திய உலகமயச்சூழல்களின் கீழ் இக்கடமை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தர்க்க இயலே கூட விரைவான வளர்ச்சி பெறும் தொழிலாளர் பட்டாளத்தை முறை சாராப்பகுதிகள் என்று அழைக்கப்படும் துறையை நோக்கி அதிக அளவில் தள்ளுவதற்கு இட்டுச் செல்வதற்கும் அது தொடர்ந்து நீடிப்பதற்கும் வழி வகுக்கிறது. நிரந்தர வேலைகளை தற்காலிக மாக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் பணிகளாக மாற்று வதன் மூலம் அதிக அளவிலான லாபத்தை ஈட்ட முடிகிறது என்பதுடன் அதுவே தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பிளவுபட்டும் சீர்குலைந்தும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆளும் வர்க்கங்கள் செய்யும் வர்க்க முயற்சியாகவும் இருந்து வருகிறது. மேலும், மேலும் பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் நிரந்தரமற்ற, தற் காலிக மற்றும் சுயவேலைத் தொழிலாளர்களின் அணிகளில் இணைந்து வருகின்றனர். இந்த சவால்களைக் கடந்து வருவதற்குப் பொருத்தமான உத்திகளை வகுப்பது அவசிய மாகிறது. அத்துடன் பெருந்திரளான முறைசாராத் தொழி லாளர்களை புரட்சிகர நடவடிக்கைகளின்பால் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியுள்ளது.

10.15       தொழிற்சங்க நடவடிக்கையில் பொருளாதார வாதத்திற்கு எதிராகப் போராடுவதில் புரட்சிகர இயக்கங்கள் எப்போதும் ஈடுபட்டு வந்துள்ளன. இது தொடர்பாக சோஷலிசத்திற்கான 20ம் நூற்றாண்டின் போராட்ட அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதும் இன்றைய சூழல்களின் கீழ் அவற்றை முன்னெடுத்துச் செல்வதும தேவைப்படுகிறது.

10.16       அடையாள அரசியல் : முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு முன்னரே கூட அடையாளங்களை ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. தங்களுடைய வர்க்க ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக இனக்குழு போன்ற அடை யாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் தேசியம் குறித்த பல்வேறு கருத்துருவாக்கங்களும் கூட இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய ஜியனிசத்தை அத்தகைய ஒன்றாக குறிப்பிடலாம். ஸ37சோவியத் ஒன்றியம் சிதைவுண்ட போது அதன் பல்வேறு முன்னாள் குடியரசுகளால் தங்க ளுடைய ஆட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய அடையாளங்களை பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. முன்னாள் யுகோஸ்லேவியாவும் இதே அடிப் படையில் தான் இன்று துண்டு துண்டாக பிளவுபட்டுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் உள்நாட்டு ஆளும் வர்க்கங் களும், இந்தியத் துணைக்கண்டத்தை பிரிவினை செய்வதற்கு மத அடையாளங்களை வெற்றிகரமான முறையில் பயன் படுத்திக் கொண்டன, இன்றும் கூட சுரண்டப்படும் மக்கள் பிரிவின் மத்தியில் மதரீதியான மற்றும் சாதிய ரீதியான அணி திரட்டல்கள் வர்க்க ஒற்றுமையைத் தொடர்ந்து சீர்குலைத்து வருகின்றன. இன்றைய சூழல்களில் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு ஒருபுறம் முதலாளி வர்க்கத்தினர் அடையாள அரசியலைப் பயன்படுத்துகின்றனர். மறுபுறத்தில் அரசு சாரா நிறுவனங்கள் பொதுவாக மக்களின் அரசியல் உணர்வை அகற்றுவதற்காக இத்தகைய அடையாள அரசியலுக்கு ஊக்கமளித்து வருகின்றன.

10.17       அரசியல் என்பது சிற்றளவில் அல்லது உள்ளூர் மட்டததைச் சேர்நததாகத்தான் இருக்க முடியும் எனவும் வேறுபாடுகள் மற்றும் அடையாளத்தின் அடிப்படையில்தான் அரசியல் இருக்க முடியும் எனவும் மார்க்சிய எதிர்ப்பு சித்தாந்த கருத்துருவாக்கமான பின் நவீனத்துவம் வாதிடுகிறது. இவ்வாறு அது இன்றைய சூழலில் அடையாள அரசியலுக்கு ஒரு புதிய அடிப்படையை வழங்குகிறது.

10.18       இன்றைய சூழ்நிலைகளில் பின்நவீனத்துவ வாதிகளால் நடைமுறைப்படுத்தப்படும் அடையாள அரசியலில் மனித இனப்பிரிவு, மதம், சாதி, பழங்குடி அல்லது பாலினம் ஆகியவை அரசியல் மற்றும் அரசியல் அணி திரட்டலுக் கான அடிப்படையாக மேலும் மேலும் அதிக அளவில் மாறி வருகின்றன. வர்க்கம் என்பது அடையாளத்தின் ஒருசிறு கூறாகத்தான் கருதப்படுகிறது. இவ்வாறு ஒரு தொழிலாளி வர்க்கம் என்ற கோட்பாடையே அடையாள அரசியல் மறுதளிக்கிறது. அடையாள அரசியலானது தனது உள் ளார்ந்த இயல்பின்படியே ஒரு அடையாளம் உள்ளவர்களை வேறு அடையாளங்கள் உள்ளவர்களிடமிருந்து விலக்கி வைத்து தனித்தனியாக பிரித்துக் காட்டுகிறது. எங்கெல்லாம் அடையாள அரசியல் தனது பிடிமானத்தை நிலை நாட்டு கிறதோ அங்கெல்லாம் மோதல்களையும் போட்டியிடு தலையும் கொண்ட தனித்தனியான அடிப்படை வேறுபாடு கொண்ட குழுக்களாக பல நேரங்களில் மக்களைப் பிளவு படுத்துகிறது.

10.19       முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு முழு நிறைவாகப் பொருந்தக் கூடியதாக அடையாள அரசியல் இருந்து வருகிறது. அடையாளம் துண்டு துண்டாகப் பிளவு படுவதை சந்தை பயன்படுத்திக் கொள்கிறது. முன்னேறிய முத லாளித்துவ சமுதாயங்களில் பல்வேறு விதமான வாழ்க்கை முறைகள் போற்றுதலுக்குரியதாக கருதப்படுகின்றன. நுகர் வோர் சமுதாயத்தின் பகுதியாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய நடைஉடை பாணிகளும், பொருட்களும் வடிவமைக்கப்படுகின்றன. குறைவான வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளைப் பொருத்தவரை உலகநிதி மூலதன ஊடுருவலையும், அவைகளின் சந்தைகள் கைப்பற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதையும் அடையாள அரசியல் எளிதாக்குகிறது. அடையாளக் குழுக்களுக்கு இடையேயான வேறுபாடு சந்தையின் ஒருமுகத்தன்மை யையே அதன் நடைமுறைகளையோ பாதிப்பதில்லை. வர்க்க ஒற்றுமையையை மறுதளிப்பதற்கு அடையாள அரசியல் குறுக்கிடுகிறது. மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களை உரு வாக்குவதில் ஒரு தடையாக அது செயல்படுகிறது. அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் குடிமைச்சமூகம் என்று அழைக்கப்படுவோர் ஆகியவற்றின் மூலம் அடையாள அரசியல் வழக்கமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனித்தனியான துண்டு துண்டாக  தாங்களே செயல்பட்டு வரும் இத்தகைய அரசு சாரா அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தனி அடையாளம் என்ற கருத்தை சுமந்து செல்வதற்கான மிகச்சிறந்த வாகனங்களான உள்ளன.

10.20       சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், சாதி அடிப்படையிலான அணி திரட்டல் குறித்த அணுகு முறையும் : சமுதாயத்தின் அனைத்து சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஒற்றுமையை உருவாக்க முயற்சிப் போருக்கு சாதி ரீதியான அரசியல் அணி திரட்டலைக் கொண்ட அடையாள அரசியல் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது.  தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நிலம், கூலி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை உழைப் பாளி வர்க்கக் கட்சி தெளிவான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதிப்பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கங்களையும் அது துவக்க வேண்டும். வர்க்கப்பிரச்சனைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகிய இரண்டையும் இணைத்து அதனைக் கையில் எடுத்துக் கொள்வதன் மூலம்தான் அடையாள அரசியல் மற்றும் சாதியப்பிளவுகளின் தீய விளைவுகளுக்கு பதிலடி கொடுக்க முடியும். வர்க்கச் சுரண்டல்களும், சமூக ஒடுக்குமுறைகளும் எவ்வாறு ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை என்ற மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப் படையில் இது அமைந்துள்ளது. ஸ38

10.21       சமுதாயத்தில் வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகிய இரண்டுமே இருக்கின்றன என்பதை ஏற்றுக் கெண்டதன் அடிப்படையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைபாடு அமைந்துள்ளது. இன்று நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார வடிவத்தின் கீழ் முத லாளித்துவ மற்றும் அரைநிலப் பிரபுத்துவ வர்க்கச் சுரண் டல்கள் ஆகிய இரண்டுமே இருந்து வருகின்றன. அவற்றுடன் சாதி, இனம் மற்றும் பாலின அடிப்படையிலான பல்வேறு சமூக ஒடுக்குமுறை வடிவங்களும் இருந்து வருகின்றன. வர்க்கச் சுரண்டலின் மூலம் ஆளும் வர்க்கங்கள் உபரியைப் பிழிந்து எடுத்து விடுகின்றன. தங்களுடைய மேலாதிக்கத்தை நீடிப்பதற்கு பல்வேறு சமூக ஒடுக்குமுறை வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. எனவே சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய இரண்டு வடிவங்களுக்கு எதிரான போராட்டங் களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டியுள்ளது.

10.22       பாலின பிரச்சனைகள் : சாதி அமைப்பின் சமூக ஒடுக்கு முறைகள் இணைந்து நிலப்பிரபுத்துவ செல்வாக்கும் தொடர்ந்து நீடிப்பதானது சக்தி வாய்ந்த ஆணாதிக்க தத்து வார்த்த நடத்தை நெறிமுறைகளை வளரச் செய்துள்ளன. நவீன தாராளமயக் கட்டமைப்பு இதற்கு மேலும் முட்டுக் கொடுத்து வருகிறது. பாலினப்பாகுபாடு என்பது நிலப் பிரபுத்துவத்தின் மிச்சம் என்பது மட்டுமன்றி வர்க்க அடிப் படைச் சமுதாயங்களின் அமைப்புக்குள்ளேயே இருக்கும் தன்மையாகும். சமத்துவமற்ற வேலைப்பிரிவினை நிலவுவ தோடு குடும்பப்பொருளாதாரத்தின் சரிவிகித சமத்துவமற்ற சுமைகளையும் பெண்கள் தாங்கி வருகின்றனர். இவற்றை நவீன தாராளமயக் கொள்கைகளும் சமூகக்கடமைகளை பூர்த்தி செய்வதை அரசு மேலும் மேலும் கைவிட்டு வருவதும், மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பாலின சமத்துவமின்மை மற்றும் அதன் அனைத்துவித வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒரு தொழிலாளி வர்ககக் கட்சி என்ற விதத்தில் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவதன் ஒருங்கிணைந்த பகுதியாக பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக இந்திய மக்களுக்கு தேவைப்படும் சமூக உணர்வை வளர்ப்பதற்கு இடைவிடாமல் செயல்பட வேண்டும்.

10.23       வகுப்புவாதம் :  இத்தகைய பின்னணியில்தான் பெரும் பான்மை வகுப்புவாதம்  மற்றும் சிறுபான்மை மத அடிப் படைவாதத்தில் பிற அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதி ரான போராட்டத்தைக் காண வேண்டியுள்ளது. நமது வர்க்க அணி திரட்டலின் முன்னேற்றப்பாதைகளுக்கு முக்கிய முன் நிபந்தனையான ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதை நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளங்களை பெரிதும் எளிதாக்குகின்றன. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறித்தன மான சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்டிரா காணும் தோற்றத்தைப் போல) நமது மக்கள் மத்தியில் உள்ள மதப்பற்றை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வகுப்புவாத உணர்ச்சிகளைத் தூண்டி  விடுவதன் மூலம் தொழிலாளி வர்க்க மற்றும் சுரண்டப்படும் பிரிவினரின் ஒற்றுமையை இந்த சக்திகள் நேரடியாக சீர்குலைக்கின்றன. எனவே, வகுப்பு வாதத்தை முறியடிப்பதற்கான ஒரு உறுதியான போராட்டம் இல்லாமல் நமது நாட்டில் புரட்சிகர முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது.

10.24தேசியம் :  முதலாளித்துவ வர்க்க தோற்றம் மற்றும் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக தேசிய உணர்வை அந்த வர்க்கம் பயன்படுத்தியது ஆகியவற்றுடன் நவீன தேசியம் தொடர் புடையது. காலனி மற்றும் அரைக்காலனி நாடுகளில் காலனி யாட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகப் போராடு வதற்காக 20-ம் நூற்றாண்டில் தேசியம் உருவாயிற்று. இந்த முன்னாள் காலனியாட்சி நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதையடுத்து தேசியத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் நீர்த்துப் போய்விட்டது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் தேசிய இறையாண் மைக்கு எதிரான ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதல் தொடுக் கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய அரசுகளும்  தங்களு டைய தேசிய இறையாண்மையை தனது கட்டளைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஏகாதிபத்திய நிதிமூலதனம் கோரி வருகிறது.

10.25       எண்ணற்ற பிராந்திய மற்றம் இனக்குழு அடையாளங்களின் அடிப்படையிலான அணி திரட்டல்களின் மூலமும் புதிய சவால்களும் தொடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கானா, டார்ஜிலிங் மற்றும் நாட்டின் எண்ணற்ற பிற்பகுதிகளில் தனி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக நடை பெறும் இயக்கங்கள் இந்திய அரசின் மொழிவழி அடிப் படையிலான அமைப்பு முறையின் அடித்தளங்களை சீர் குலைப்பது மட்டுமன்றி சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையையே சீர்குலைத்து வருகின்றன. (39)

10.26       தேசிய அரசுகளின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பலவினப்படுத்துவதற்காக இனக்குழு தேசியத்திற்கும் பிரி வினைவாதத்துக்கும் சர்வதேச நிதி மூலதனம் ஊக்க மளிக்கிறது. மக்களைக் குறுகிய குறுங்குழுவாத அடிப் படையில் பிளவுபடுத்தக் கூடிய இத்தகைய பிற்போக்குத் தனமான இனவாத தேசியம் எதிர்க்கப்பட வேண்டும் என்ப தோடு அவர்களுடைய ஜனநாயக வேட்கைகளுக்கு ஆதரவு அளித்து செயல்பட வேண்டும். மக்களுக்கு எதிரான உண்மை யான அனைத்து ஒடுக்குமுறைகளையும், பாகுபாட்டினையும் எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் சுரண்டப்படும் வர்க்கங்களை ஒருங்கிணைத்து அணி வகுப்பதற்கும் ஏகாதிபத்திய உலக மயத்துக்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் தேசிய இறையாண்மை மற்றும் ஏகாதி பத்திய எதிர்ப்பு தேசியத்துககு ஆதரவாக செயல்படுவது ஒரு முக்கிய அம்சமாகும்.

10.27       பல தேசிய இனங்களைக் கொண்ட, உலக அளவில் இணை யில்லாத சமூக, பண்பாட்டு பன்முகத் தன்மையைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் இத்தகைய போக்குகள் மீதான நாட்டம் எண்ணற்றவையாக தொடர்ந்து நீடிக்கின்றன. இவை சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைத்து நமது நீண்டகாலக் குறிக்கோளை நோக்கிய நமது பயணத்தை அந்த அளவுக்கு பலவீனப்படுத்துகின்றன. வர்க்கப் பிரச் சனைகளின் மீது மக்கள் ஆதரவுடன் கூடிய சக்திமிக்க இயக் கங்களை உருவாக்குவதன் மூலம் சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஒற்றுமையை பலப்படுத்தினால் மட்டுமே இதற்கு பதிலடி கொடுக்க முடியும். மொழிவழி மறுசீரமைப்புக் கோட் பாட்டை சீர்குலைத்து தற்போதுள்ள இந்திய மாநிலங்களை மாற்றி அமைப்பதற்கு எதிரான நமது நடைமுறை உத்தியை இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் நாம் வகுத்துள் ளோம்.

XI

நிறைவாக

11.1         உலக சோஷலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், மற்றும் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான குணமாற்றம் ஆகியவை ஏற்பட்டுள்ள போதிலும், மார்க்சியம்-லெனினியம் என்ற ஆக்கப்பூர்வ விஞ்ஞானத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டு இந்திய மக்களின் உண்மையான முழுமையான விடுதலை மற்றும் சுதந்திரத் துக்கான லட்சியத்தையும், போராட்டங்களையும் முன் னெடுத்துச் செல்வதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) உறுதி பூண்டுள்ளது. 20-ம் நூற்றாண்டு நிகழ்வுகள் அனைத்து விதமான குறைபாடுகளையும், பின்னடைவு களையும் கொண்டவையாக இருந்த போதிலும் வரலாற்றுத் தொலைநோக்குப் பார்வையில் மனிதகுல நாகரிக முன்னேற்றத்தின் அடிப்படையான திசைவழி தேசிய மற்றும் சமூக விடுதலையை நோக்கியே தவிர்க்க முடியாத வகையில் அமைந்துள்ளன என்பதை நிரூபிக்கின்றன.

11.2         இன்றைய சூழ்நிலைகளில் சீர்குலைவு இயக்கங்களால் தோன்றி வரும் சவால்களுக்கு எதிராகப் போராடியும், மார்க்சிய – லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து எத்தகைய பிறழ்வுகளுக்கும் இரையாகாமல் பாதுகாத்துக் கொண்டும், அகவயக் காரணியை பலப்படுத்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதி பூண்டுள்ளது. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கான நடைமுறை உத்திகளை பல்வேறு அகில இந்திய மாநாடுகளில் நாம் வகுத்துள்ளோம். இந்த அடிப்படையில் எதிர்காலத்துக்கான சரியான உத்திகள் வகுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

11.3         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – தான் உருவான விதம் மற்றும் அனைத்துப் பிறழ்வுகளுக்கும் எதிராகப் போராடும் போதும், மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தை உறுதியாக உயர்த்திப் பிடித்திருக்கும் போதும் கிடைத்த அதன் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, 20-ம் நூற் றாண்டில் மனித குல பரிணாம வளர்ச்சியில் சோஷலிசத்தின் அனுபவங்கள் விட்டுச் சென்ற ஏற்றுக் கொள்ள இயலாத தாக்கங்கள் மற்றும் உலகில் இன்றைய சமகால முத லாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு சமூகப் பொருளாதார அமைப்புகளை விஞ்ஞான ரீதியான மதிப் பீடுகளுக்கு உட்படுத்தியும் – இந்திய மக்களின் இறுதி வெற்றி வரை இந்நிகழ் முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி பூண்டுள்ளது. தனது புரட்சிகரக் கடமைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னெடுத்துச் செல்லும். நமது மக்கள் மத்தியில் இன்றுள்ள வர்க்க சக்திகளின் பலாபலன்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக இந்திய மக்களின் அனைத்து சுரண்டப்படும் பிரிவினரையும் அணி திரட்டும். மக்கள் ஜனநாயக்ததையும், அதன் அடித்தளத்தின் மீது மனித குல விடுதலை மற்றும் சம உரிமைகளுக்கான ஒரே அடிப்படையான சோஷலிசத்தை நிறுவுவதற்கான புரட்சி கரத் தாக்குதலை கட்சி உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும்.

 

 

Check Also

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி

தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் தோழர் கே.தங்கவேல் மறைவு – மாநிலக்குழு அலுவலகத்தில் நினைவஞ்சலிக் ...

Leave a Reply