சிவப்புப் போர் : பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள்

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரின் பிடியில் தள்ளிய – வேலைவாய்ப்புகளை முற்றாக பறித்த – இந்தியப் பொருளாதாரத்தை நொறுக்கிய பணமதிப்பு நீக்கம் எனும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்திய பேரழிவுத் தாக்குதலின் ஓராண்டு நினைவுநாள், நாடு முழுவதும் கறுப்பு நாளாக – போராட்டத் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 18 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ஆகிய ஆறு இடதுசாரிக் கட்சிகளும் தலைநகர் தில்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆவேசமிக்க போராட்டங்களை நடத்தின. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) ஆகிய நான்கு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநில செயலாளர்கள் ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஏ.எஸ்.குமார், எ.ரங்கசாமி ஆகியோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், எஸ்.நூர்முகமது, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...