சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துச் செய்தி

அன்பான தோழர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்) மாநாடு கூடியுள்ளதை ஒட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேசத் துறை சார்பில் உங்களுக்கும், உங்கள் கட்சியின் அனைத்து தோழர்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடைய மத்தியக் குழுவின்  வாழ்த்துகளையும், நல்லெண்ணத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்) இடையில் நெருக்கமான பரிமாற்றமும், ஒத்துழைப்பும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சீனாவுடன் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்கும் முக்கியமான சக்தியாக சிபிஐ(எம்) இருந்து வருகிறது. இந்திய சீன உறவும், இரு நாட்டு மக்களிடையிலான நட்பும் மேம்பட நீங்கள் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்கை மெச்சுகிறோம். இன்றைய சூழலில், சர்வதேச நிலைமைகள் சிக்கலான மாற்றங்களை நோக்கிச் செல்கின்றன. இத்தகைய பின்னணிகளுக்கு எதிராக, வளரும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவும், சீனாவும், மிக அதிக அளவில் ஒன்றுபட்டு பணியாற்றுவது, ஒன்றிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தும். சீனா இந்தியா இடையிலான நட்புறவை மேலும் நெருக்கமாக்கிடும் முன்னேற்றத்துக்காக தங்கள் கட்சியின் அரசியல் செல்வாக்கினை தொடர்ந்து பயன்படுத்தி ஊக்குவிப்பீர் என்று நம்புகிறோம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டும் ஒரே கருத்தியலும், உறுதிப்பாடும் கொண்டவை. நாம் இருவரும் மார்க்சிய தத்துவத்தால் வழிநடத்தப்படுகிறோம், நாம் இருவரும் நம் இருவரது தேசிய சூழல்களுக்கு தகுந்த சோசலிச பாதையை வகுத்துவருகிறோம். நம் இரண்டு கட்சிகளும் சோசலிச தத்துவம், அரசு நிர்வாகம் மற்றும் கட்சியைக் கட்டியமைப்பது குறித்த தகவல் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியுமென நம்புகிறோம். உங்கள் தேசிய மாநாட்டின் வெற்றிகரமான முடிவு உங்கள் கட்சியின் மிகப்பெறும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் உறுதி கொள்கிறோம்.

நல்வாழ்த்துகளுடன்

சர்வதேசப் பிரிவு,
மத்தியக் குழு,
சீன கம்யூனிஸ்ட் கட்சி.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...