சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் கைதுக்கு கண்டனம் விடுதலை செய்ய வலியுறுத்தல்!

சேலத்தை சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ், தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை எதிர்த்து  கடந்த 8ம் தேதி சேலம் மக்கள் குழுவினர் போராட்டம் நடத்தினர். ஜனநாயக முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. நீதிமன்ற ஜாமீனுக்கு விண்ணப்பத்த 3 பேரில், பியூஸ் மானுசை வெளியிட காவல்துறை ஆட்சேபனை தெரிவித்ததால், அவருக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பியூஸ் மானுஷ் 30 காவலர்களால் கடுமையாக தாக்கப்படுள்ளதாக அவரின் மனைவி மோனிகா புகார் செய்துள்ளார்.

ஜனநாயக முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து, தாக்கவும் முற்பட்டிருக்கும் காவல்துறையின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுவும், பிற மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன.

இப்போது வரை பியூஸ் மானுஷ் விடுதலை செய்யப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தோல்வியடைந்திருக்கும் தமிழக காவல்துறை, அப்பாவிகளை தாக்குவதிலும், ஜனநாயக இயக்கங்களை முடக்குவதிலும் முன் நிற்பது கண்டிக்கத்தக்கது. பியூஸ் மனுஷை தாக்கிய காவல்துறை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து தரப்பாரின் வலியுறுத்தல்களையும் ஏற்று, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பியூஸ் மானுஷை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடிந்து விழுந்த கருங்கல் சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டுமெனவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.